அனுதின ஆவிக்குரிய ஆகாரம். 09.09.2017.

“நம்மை அதி மோசமாக பாதிக்கும் காரியம்…”

வேதப்பகுதி: யாக்கோபு 1:21

நம்மை மோசமாக பாதிக்கும் காரியங்கள் பல உள்ளன. அவைகளில் முக்கியமான ஒன்று “கோபம்”. நம்மை பாதிக்கும் மற்ற காரியங்களையும் யாக்கோபு இங்கு விவரிக்க விரும்புகிறார்.

ஆகையால், நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள்.
யாக்கோபு 1:21 Read More …

அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 08.09.2017.

யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாய்

வேதப்பகுதி: யாக்கோபு 1: 19

செயல்களின் விளைவுகள்

தேவனிடத்தில் விசுவாசம் கொண்டிருப்பவர்கள் செய்யும் எந்த செயல்களும் விளைவுகளை ஏற்படுத்துவதாக இருக்கின்றது. இந்த வார்த்தையை யாக்கோபு இங்கு இணைப்பதற்க்கு சரியான நோக்கம் இருக்கின்றது

ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்கக்கடவர்கள்; மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.
யாக்கோபு 1:19-20. Read More …

அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 07.09.2017.

அவர் சித்தங்கொண்டு… நம்மை ஜெநிப்பித்தார்

வேதப்பகுதி: யாக்கோபு 1:18

கர்த்தருடைய நல்ல வரங்களினால் நாம் ஆசீர்வதிக்கப்படுவதோடு முதற்பலன் என்ற கருத்தையும் யாக்கோபு வலியுறுத்துகின்றார்.

அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார். யாக்கோபு 1:18 Read More …

அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 06.09.2017.

“நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும்” 

வேதப்பகுதி: யாக்கோபு 1:17

தேவனுடைய வரங்களைக் குறித்து ரோமர் 12 மற்றும் 1 கொரிந்தியர் 12 ல் அப்போஸ்தலனாகிய பவுல் விரிவாக எழுதியிருக்கின்றார். ஆவிக்குரிய வரங்களை எவ்வாறு முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று விசுவாசிகள் புரிந்துகொள்ளுவதற்கு உதவிசெய்யும்படி பவுல் அவர்கள் எழுதினார்.

ஆனால் யாக்கோபு அவர்கள் சற்று மாறுபட்ட கேணத்தில் இதை கையாளுகின்றார். நாம் தேவனுடைய வரங்களை எவ்வாறு பார்க்கவேண்டும் என்பதற்காக மட்டும் இதை சொல்லுகின்றார். Read More …

அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 05.09.2017.

“மோசம்போகாதிருங்கள் …”

வேதப்பகுதி: யாக்கோபு 1:16

மோசம்போக்குதல்

அப்போஸ்தலனாகிய யாக்கோபு, தாம் எதற்கு எதிராக இருக்க வேண்டும் என்று நினைத்தாரோ, அதை குறித்து தம்முடைய வழக்கமான பாணியில், வெளிப்படையான தெளிவை கொடுக்கும்படி நேரடியாக இந்த வார்த்தைகளை எழுதியிருக்கிறார்.

என் பிரியமான சகோதரரே, மோசம்போகாதிருங்கள் யாக்கோபு 1:16 Read More …