பாடம் 7 நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய் கொடுக்கப்பட்டது.

இஸ்ரவேல் மக்களை எகிப்தில் இருந்து விடுவித்த வல்லமையுள்ள இறைவன்
இஸ்ரவேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக வாழ்ந்துவந்த சூழலில், இறைவன் தான் யார் என்பதை அற்புதங்களினாலும் அதிசயங்களினாலும் இஸ்ரவேல் மக்களுக்கும் எகிப்தியருக்கும் வெளிப்படுத்தினார். இஸ்ரவேல் மக்களை விடுவித்து விடுமாறும் மறுக்கும் பட்சத்தில் விளைவுகள் மோசமானதாக இருக்கும் என மோசே மூலமாக இறைவன் பார்வோனை எச்சரித்தார். எகிப்தின் அரசனான பார்வோன் இறைவனின் எச்சரிக்கையை நிராகரித்து தன் மனதை கடினப்படுத்தினான். கடைசி வாதை மிக பயங்கரமாக இருக்கும் என மோசே பார்வோனை எச்சரித்தார். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இறைவன் அழிக்கும் தூதனை அனுப்பும்போது மூத்த ஆண் பிள்ளைகள் அனைவரும் அழிக்கப்படுவார்கள் எனவும் ஒவ்வொரு குடும்பமும் ஒரு பழுதற்ற ஆட்டுக்குட்டியை கொன்று ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை தங்களின் வாசலில் பூசும்படியாகவும் அப்பொழுது கடைசி வாதைக்கு தப்பமுடியும் என்று இறைவன் கூறினார். இறைவன் சொன்னதை நம்பிய இஸ்ரவேல் மக்கள் ஆட்டுகுட்டிகளை கொன்று அதன் இரத்தத்தை தங்கள் வாசலில் பூசினார்கள். இறைவன் குறிப்பிட அந்த நேரம் வந்தது. இறைவன் அழிக்கும் தூதனை அனுப்பினார். அழிக்கும் தூதன் எகிப்தியர்களின் மூத்த ஆண் பிள்ளைகளை அடிக்கும் போது, ஆட்டுக்குட்டியின் இரத்தம் தெளிக்கப்பட்ட குடும்பங்கள் பிழைத்தன. எகிப்து நாடு முழுவதும் மரண ஓலம் எழுந்தது. அன்று இரவே இஸ்ரவேல் மக்கள் எகிப்தை விட்டு போய்விடுமாறு பார்வோன் கட்டளை கொடுத்தான்.
Read More …

பாடம் 6 நம்பிக்கையின் பலன் நீதி

இறைவன் ஒரு மனிதனை தெரிந்துகொண்டார். பாபேல் சம்பவதிற்க்கு பிறகு, மக்கள் வெகு சீக்கிரமே உண்மையான இறைவனை மறந்தனர். மனிதரால் உருவாக்கப்பட்ட சிலைகளை தெய்வங்களாக வழிபட ஆரம்பித்தனர். ஆபிராம் எனும் மனிதனின் குடும்பமும் அதற்கு விதிவிலக்கல்ல. இறைவன் தன் கிருபையினால் ஆபிராமுக்கு தன்னை வெளிப்படுத்த சித்தமாகி, அவர் மூலம் தமது திட்டத்தை செயல்படுத்த நினைத்தார். Read More …

பாடம் 5 பாவத்தின் சம்பளம் குழப்பம்

உலகத்தின் பெரு வெள்ள அழிவிற்கு பின், நோவாவின் குடும்பம் மற்றும் அவர்களோடு பாதுகாக்கப்பட்ட  உயிரினங்கள் மாத்திரம் தப்பிப் பிழைத்திருந்தன. இறைவன் நோவா மற்றும் அவரது குடும்பதிடம் “நீங்கள் பலுகி பெருகி பூமியை நிரப்புங்கள்” என கூறினார் (ஆதி. 9:1).  மீண்டும் மக்கள் இப்படிப்பட்ட பெரு வெள்ளம் மூலம் பேரழிவில் அகப்படாமல் இருக்கத்தக்கதாக இறைவன் உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தினார். உடன்படிக்கையின் அடயாளமாக வானவில்லை குறித்தார். மழை வரும் நேரங்களில் தோன்றும் வானவில் மனிதருக்கும் கடவுளுக்கும் மத்தியில் அடையாளச் சின்னமாக இருந்து வெள்ளத்தின் மூலம் மக்கள் மீண்டும் அழிந்துவிடாதபடி ஞாபக குறியாக இருக்கும். Read More …

பெற்ற இரட்சிப்பை இழக்க முடியுமா?

பெற்ற இரட்சிப்பை இழக்க முடியுமா? இரட்சிப்பை நாம் இழந்து விடுவதற்கு வாய்ப்புண்டு என்று சில கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை வேதத்தின் அடிப்படையில் சரியானதா? நாம் நம்முடைய கிரியைகளினால் இரட்சிப்பை அடைய முடியும் என்றால், நம் கிரியைகளினால் இரட்சிப்பை இழக்கவும் முடியும். மாறாக, தேவனுடைய கிருபையினால் நாம் இரட்சிக்கப்பட்டது உண்மையானால், அதே கிருபைதான் கடைசி வரை இரட்சிப்பை நாம் இழக்காமல் இருப்பதற்கும் காரணமாக இருக்கும். Read More …

பாடம் 4 பாவத்தின் சம்பளம் பேரழிவு

ஆதாம் ஏவாளுக்கு இன்னும் பல குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் மூலமாக மனுக்குலம் உலகில் பெருக ஆரம்பித்தது. மனுக்குலம் படைக்கப்பட்டு கிட்டத்தட்ட 1500 வருடங்கள் கடந்திருந்தது. உலகில் மக்கள்தொகையும் கணிசமான அளவில் பெருகியிருத்தது. ஆனால் பெருகினது மக்கள்தொகை மட்டும் அல்ல, பாவமும்தான். மனிதருடைய பாவ நிலையினால் உலகம் முழுவதும் பாவ செயல்களால் நிறைந்திருந்தது (ஆதி. 6:5). மனிதர்கள் தங்கள் சுபாவத்திலேயே பாவிகளாக இருந்தபடியினால் அவர்கள் செய்ததெல்லாம் பாவமாகவே இருந்தது. Read More …