திருவிருந்தை யார் பரிமாறலாம்?

சபையில் உள்ள முக்கிய ஆசரிப்பு திருவிருந்து, இந்த திருவிருந்தை யார் எடுத்துக்கொடுப்பது என்பதில் சபையில் ஒரு பெரிய போராட்டமே நடக்கும், அதிலும் பாஸ்டர்கள் எதைவேண்டுமானாலும் விட்டுக்கொடுப்பார்கள் ஆனால் இந்த திருவிருந்தை பரிமாறும் வேலையை கொள்ளையாடின பொருளாக பாவிப்பார்கள்.

Read More …

சுயநீதிக்கு ஒரு அறைகூவல்!

எழுதியவர்: போதகர். பால் ராஜ்
 
அரசியல் சார்ந்த பத்திரிக்கைகளும், தினசரி பத்திரிக்கைகளும், வியாபார நோக்கோடு ஆதாரமில்லாத செய்திகளையும், சில வேளைகளில் ஆதாரப்பூர்வமான செய்திகளையும் போடுவது வழக்கம். அதேபோல் இன்று கிறிஸ்தவ உலகில் சிலர் ஊழியர்களின் தவறான வாழ்கை, மற்றும் போதனைகளை சமூக வளைதளங்களில் பதிவிடுகின்றனர். அது தேவையான ஒன்றே, தேவை இல்லை என்று சொல்லுவது சரியான கிறிஸ்தவ நிலைப்பாடு அல்ல. ஆனால் அதே வேளையில் இப்படிப்பட்ட செயல்களுக்கு சரியான கிறிஸ்தவ அணுகுமுறை என்னவென்பதை தெளிவுபடுத்துவதே, இந்தக் கட்டுரையின் நோக்கம்.

Read More …

சரியானதெல்லாம் சரியல்ல!

எழுதியவர்: போதகர். அகஸ்டின் ஆறுமுகம்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் சரியானதை செய்ய விரும்புகிறோம்.  வேதத்தின்படி நடப்பதுதான் சரியானது என்பதையும் அறிந்திருக்கிறோம். ஆனால், வேதாகமம் சொல்லாத சில காரியங்களைப் பொறுத்தவரையில் நான் சரியானதைத் தான் செய்கிறேன் என வாதாடுகிறோம். ஆனால், நாம் செய்கிற சரியான காரியங்கள் அனைத்தும் உண்மையில் சரியானதாய் இருக்கிறதா  என்பதாக யோசித்திருக்கிறோமா? சிந்தியுங்கள். Read More …

கிறிஸ்தவ ஆன்மீகம் ஆவிக்குரிய வாழ்வு

எழுதியவர்: போதகர். அகஸ்டின் ஆறுமுகம்

கிறிஸ்துவுக்குள் இருக்கும் எந்த ஓர் விசுவாசியும் ஆண்டவரால் மாற்றப்பட்ட ஓர் புது சிருஷ்டியாய் இருக்கிறான் (2 கொரி.5:17). நாம் இந்த உலகத்தில் காண்கிற, புரிந்து கொள்கிற, நடைமுறைப்படுத்துகிற அனைத்தும் வேதத்தின் பார்வையில் இருக்க வேண்டியது அவசியமாகும். இன்றைக்கு கிறிஸ்தவ உலகில் ஆவிக்குரிய வாழ்வைக் குறித்து அனேக தவறான புரிந்து கொள்தல் இருக்கிறது. புற மார்க்கத்தின் சாயலும் அதின் செயல்பாடுகளும் கிறிஸ்தவ ஆவிக்குரிய வாழ்வின் செயல்பாடுகளில் கலந்திருக்கிறது. வேதாகமத்தின் அடிப்படையிலான புரிந்து கொள்தல் இல்லாததினால் அனேக புறமார்க்க சிந்தாந்தங்கள் கிறிஸ்தவர்களின் வாழ்வின் அங்கமாகியிருக்கிறது. எனவே, நாம் வேதாகமத்தின் பார்வையில் ஆவிக்குரிய வாழ்வு என்பது என்ன என்பதையும், அதின் அடிப்படையில் நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதையும் கற்றுக் கொள்வோம். Read More …

தேவை ஆதாரம் அல்ல, தேவனோடு அனுபவம்

எழுதியவர்: போதகர். பால் ராஜ்

யோவான் 21:1-22

இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நம்ப மறுப்பவர்களை நாம் இரண்டாக பிரிக்கலாம். முதலாவது கூட்டம் ஆதாரம் தேடும் கூட்டம். இரண்டாவது கூட்டம் விசுவாசிக்க தேவையான தேவனுடனான தனிப்பட்ட அனுபவத்தை தேடும் கூட்டம். முதலாவது கூட்டத்தை எதிர்க்கொள்ள நமக்கு போதுமான இறையியல் விளக்கம், வேதாகம மற்றும் வரலாற்று சான்றுகள் உள்ளன. இயேசு கிறிஸ்துவுடனான தனிப்பட்ட சந்திப்பு மட்டுமே இரண்டாவது கூட்டத்திற்கு உயிர்த்தெழுதலின் நம்பிக்கையை தரமுடியும். பயத்திலும், நம்பிக்கையற்ற சூழலிலுமிருந்த தனது சீடர்களின் பயத்தையும், அவநம்பிக்கையையும் அகற்றி தன்னோடுள்ள அவர்களின் தனிப்பட்ட அனுபவத்தின் மூலம் அவர்களுக்கு எவ்விதம் தனது உயர்த்தெழுதல் மீதான நமிக்கையை ஊட்டினார் என்பதை தியானத்திற்கு ஆதாரமாக எடுத்துக்கொண்ட வேதப்பகுதியிலிருந்து நாம் கற்றுக்கொள்வோம். Read More …