துப்பாக்கிச் சண்டையில் கத்தி!

(எச்சரிக்கை: கொஞ்சம் நிதானித்து வாசிப்பது அவசியமாக இருக்கலாம். கவனமாக வாசிப்பது ஒரு மாற்றத்தைக் கொண்டுவரலாம்).

கலைடாஸ்கோப் (Kaleidoscope) என்ற சிறு கருவியைப் பார்த்திருப்பீர்கள். பொருட்காட்சிகளில் விளையாட்டுப் பொருளாக விற்பனைக்கு வரும். என்போன்ற அந்தக் (மொபைல் இல்லாத)காலச் சிறுவர்களுக்கு அதன் வழியே காணும் விதவிதமான டிசைன்கள் அப்போதெல்லாம் ஒரு நல்ல பொழுதுபோக்கு. கண்வலிக்கும்வரை அதைச் சுற்றிச்சுற்றி அது உண்டாக்கும் டிசைன்களைப் பார்த்துக் கொண்டிருப்போம். அதில் இருமுனைகள் இருக்கும்; அதில் ஒரு புறம் வழியே மட்டுமே பார்ப்பது மட்டுமே சரியானது. கண்ணாடித்துண்டுகள் உண்டாக்கும் விந்தை ஒளிக்கோலங்கள் அந்த சிறியமுனை வழியே தான் தெரியும். அடுத்த முனையில் (பெரிதான பகுதியில்) பார்த்தால், இது என்ன கருவி என்பதுகூடப் புரியாது! கலைடாஸ்கோப்பின் மகத்துவமே தெரியாது. Read More …

பெற்ற இரட்சிப்பை இழக்க முடியுமா?

பெற்ற இரட்சிப்பை இழக்க முடியுமா? இரட்சிப்பை நாம் இழந்து விடுவதற்கு வாய்ப்புண்டு என்று சில கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை வேதத்தின் அடிப்படையில் சரியானதா? நாம் நம்முடைய கிரியைகளினால் இரட்சிப்பை அடைய முடியும் என்றால், நம் கிரியைகளினால் இரட்சிப்பை இழக்கவும் முடியும். மாறாக, தேவனுடைய கிருபையினால் நாம் இரட்சிக்கப்பட்டது உண்மையானால், அதே கிருபைதான் கடைசி வரை இரட்சிப்பை நாம் இழக்காமல் இருப்பதற்கும் காரணமாக இருக்கும். Read More …

ஆரோக்யமா அறுசுவையா எது முக்கியம்?

ஆரோக்கியமான உணவு சுவையாகத்தான் இருக்கவேண்டும் என்பது அவசியம் இல்லை, ஆனால் சுவையான உணவுகளில் பெரும்பாலும் ஆரோக்கியம் இல்லாமல் இருப்பதை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் மக்கள் சுகத்தைவிட சுவையையே பெரிதும் விரும்புகிறார்கள் என்பதை நம் ஊரில் பெருகிவரும் பாஸ்ட் புட் கலாச்சாரத்தை பார்த்தாலே புரிந்துவிடும். இது ஒருபுறம் இருக்க, ஆவிக்குரிய வாழ்க்கையிலும் ஆரோக்கிய உபதேசம், அறுசுவை உபதேசம், என இருவகை உபதேசங்கள் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? இதற்கு ஆதாரமாக ஒரு வசனத்தைப் பார்க்கலாம். Read More …

உண்மையும் போலியும் எச்சரிக்கை!

உண்மையும் போலியும்…

வேதாகமத்தில் எதையெல்லாம் தேவன் ஏற்படுத்தியிருக்கிறாரோ, அதைப்போலவே போலியான ஒன்றை சாத்தானும் ஏற்படுத்துகிறான் என்பதே உண்மை.

சில உண்மைகளும் போலிகளும்… Read More …

பரிசுத்தம் சாத்தியமா?

பரிசுத்தம் சாத்தியமில்லை! இதுதான் கிறிஸ்தவத்தின் இப்பொதைய பொதுவான மன நிலை. காரணம் இல்லாமல் இல்லை. இன்றைய சூழலில் கிறிஸ்தவத்தில் எங்கு நோக்கினாலும், கவனமாக கவனிப்பவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருக்கும். கிறிஸ்தவத்தில் கொடுக்கப்படும் செய்திகள், நற்செய்தி இயக்கங்களால் பகிர்ந்து கொள்ளப்படும் சம்பவங்கள், பெருகிக்கிடக்கும் மேடை பிரசங்கிகளின் சவால்கள், ஆராதனை வீரர்களின் ஆட்டங்கள் இவைகளை எல்லாம் கவனித்துவிட்டு, கிறிஸ்தவமென்றால் இப்படித்தான் இருக்கும், என்று நினைப்பவர்கள் இன்றைய கிறிஸ்தவத்தின் யதார்த்த நிலையை அறியும் சூழலில் மனமுடைந்து போவது நிச்சயம்.  Read More …