பாடம் 2 மனிதரின் வீழ்ச்சி

தமது சாயலில் மனிதரை உருவாக்கின தேவன், ஏதேன் தோட்டம் எனும் சிறந்த இடத்தை உண்டாக்கி மனிதரை அதிலே வாழவைத்தார். அந்த ஏதேன் தோட்டமானது இயற்க்கை எழில் கொஞ்சும் மிக அழகான இடம் என்பதாக வேதாகமம் விவரிக்கிறது. செழிப்பான ஆறுகள் அந்த ஏதேன் தோட்டத்தை சுற்றியோடின. பார்வைக்கு அழகான மரங்கள், மனிதர் உண்ணுவதர்க்கு ஏற்ற காய் கனிகள், மனிதருக்கு எந்த தீங்கும் விழைவிக்க அறிந்திராத, மனிதரோடு இசைந்து வாழும் மிருகங்கள் மற்றும் பறவைகள் என  ஏதேன் தோட்டம் மிக சிறப்பானதாக இருந்தது.  Read More …

பாடம் 1 வேதாகமத்தின் தேவனே எல்லாவற்றையும் படைத்தவர்

ஆதியாகமம் 1:1 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.

ஆதியிலே தேவன்…

ஆதியிலே தேவன்… என்கிற வேதாகமத்தின் முதல் இரண்டு வார்த்தைகள் வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கும் தேவன் அடிப்படையில் எப்படிப்பட்டவர் என்பதைக்குறித்த ஒரு சிறிய பார்வையை நமக்கு கொடுக்கிறது. இந்த முதல் வசனத்திலிருந்து நாம் தேவனைக்குறித்து அறிந்துகொள்கிற ஒரு அடிப்படை உண்மை என்னவென்றால், இந்த உலகம் படைக்கப்படுவதற்க்கு முன்பதாகவே தேவன் இருந்தார். வேதகமத்தின் தேவனை குறித்த இந்த அடிப்படை உண்மையிலிருந்து நாம் அவரைக்குறித்து இரண்டு முக்கியமான முடிவுகளுக்கு வர முடியும். Read More …

படைப்பு முதல் கிறிஸ்து வரை: அறிமுகம்

எழுதியவர்: இம்மானுவேல் ஜெஸ்வின்

படைப்பு முதல் கிறிஸ்து வரை என்கிற இந்த பாடத்தொகுப்பானது ஆங்கிலத்தில் Creation to Christ என்கிற பாடத்தொகுப்பை தழுவி எழுதப்பட்டது

ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் (ஆதி 1:1) என்கிற வேதாகமத்தின் முதல் வாக்கியமே கிறிஸ்வத்தில் மாத்திரம் அல்ல இந்த உலகத்திலும் இருக்கிற பல்வேறு குழப்பங்களுக்கு விடையளிப்பதாய் இருக்கிறது. முழு வேதாகமும் தேவனையும் அவரது படைப்பையும் பற்றியது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தேவனையும் அவரது செயல்பாடுகளையும் பற்றியது. தேவன் யார்? அவரின் தன்மைகள் என்ன? அவரது குணாதிசயங்கள் என்ன? அந்த தேவன் எப்படி செயல்படுகிறார்? என்பதை தெளிவாகவும் விளக்கமாகவும் பதிவுசெய்திருக்கும் புத்தகமே வேதாகமம். தேவனே வேதாகமத்தின் மையமாகவும் மூலப்பொருளுமாய் இருக்கிற படியால், வேதாகமத்தை அடிப்படையாக கொண்டு எழுத்தப்படுகிற இந்த பாடத்தொகுப்பின் மையப்பொருளும் அவரே. Read More …