உங்களுக்கு ஒரு நற்ச்செய்தி

அன்புநண்பரே, உண்மையானஇறைவனுடன்அன்புறவில்நிலைத்திருப்பதைகுறித்துநினைத்ததுண்டா?

அண்ட சராசரங்களையும் படைத்த இறைவன், நம்மைப்போன்ற மனிதர்கள் மகிழ்ந்திருக்கும்படியாக இந்த உலகத்தை சிறப்பாக படைத்தார். என்றென்றும் அவரோடு அன்புறவில் நிலைத்திருக்கவேண்டும் என்கிற எண்ணத்துடன் மனுக்குலத்தையும் உருவாகினார். நம்மோடு தனிப்பட்ட விதத்திலே உறவுகொண்டாட விரும்பும் சர்வ வல்லமையுள்ள இறைவனை நேசிக்கவும், என்றும் அவரோடு அன்புறவில் வாழவுமே நாம் உருவாக்கப்பட்டோம். உங்களுடைய தாயின் கருவில் நீங்கள் உருவான நாள் முதல் அவர் உங்களையும் உங்களைப்பற்றிய அனைத்து காரியங்களையும் அறிந்திருக்கிறார். உங்கள் தலை முடிகளின் எண்ணிக்கை கூட அவருக்கு தெரியும் என வேதாகமம் கூறுகிறது. அகில உலகத்தையும் படைத்த சர்வ வல்லமையுள்ள இறைவன் ஒரு தனி மனிதரான உங்கள் வாழ்வில் இத்தனை அக்கறை உள்ளவராக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?

Read More …

பாடம் 8 கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின

பாவிகளைஇரட்சிக்ககிறிஸ்துஇயேசுஉலகத்தில்வந்தார் (லூக்கா 5:32).
இறைவன் மனிதரை செம்மையாகப் படைத்தார். ஆனாலும் அவர்களை பொம்மைகளாக படைக்கவில்லை. அதாவது விசை கொடுத்தால் இயங்கும் ஒரு பொம்மையை போலவோ சொன்னதை எல்லாம் அப்படியே நிறைவேற்றும் இயந்திர மனிதனைப் போலவோ படைக்கவில்லை. மனிதனை இறைவன் தனது சாயலில் படைத்திருந்த படியினால் அவர்கள் சுய அறிவுள்ளவர்களாகவும் அந்த அறிவை பயன்படுத்தி தெரிந்தெடுக்கும் ஆற்றல் உள்ளவர்களாகவும் இருந்தனர். எனினும் ஆதாமும் ஏவாளும் இறைவனுடைய வார்த்தையை நம்பி அவர் சொன்ன நன்மை தீமை அறியக்கூடிய மரத்தின் கனியை உண்ணாமல் இருப்பதற்கு பதில், “சாகவே சாவீர்கள்” எனும் இறைவனுடைய எச்சரிப்பை புறக்கணித்து இறைவனுடைய வார்த்தையை நம்பாமல் பாவத்தில் விழுந்தபோது, ஆதாம் ஏவாள் மட்டும் அல்ல, அவர்கள் மூலமாக இந்த உலகத்தில் உருவாகப்போகிற முழு மனுக்குலமும் பாவத்திற்கு உட்பட்டு பிசாசுக்கு அடிமைகளாக மாறியது. ஆம், இனி உலகத்தில் பிறக்கப்போகும் எல்லா மனிதரும் பாவிகளாக, பிசாசுக்கு அடிமைகளாகவே பிறப்பார்கள்.

Read More …

பாடம் 7 நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய் கொடுக்கப்பட்டது.

இஸ்ரவேல் மக்களை எகிப்தில் இருந்து விடுவித்த வல்லமையுள்ள இறைவன்
இஸ்ரவேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக வாழ்ந்துவந்த சூழலில், இறைவன் தான் யார் என்பதை அற்புதங்களினாலும் அதிசயங்களினாலும் இஸ்ரவேல் மக்களுக்கும் எகிப்தியருக்கும் வெளிப்படுத்தினார். இஸ்ரவேல் மக்களை விடுவித்து விடுமாறும் மறுக்கும் பட்சத்தில் விளைவுகள் மோசமானதாக இருக்கும் என மோசே மூலமாக இறைவன் பார்வோனை எச்சரித்தார். எகிப்தின் அரசனான பார்வோன் இறைவனின் எச்சரிக்கையை நிராகரித்து தன் மனதை கடினப்படுத்தினான். கடைசி வாதை மிக பயங்கரமாக இருக்கும் என மோசே பார்வோனை எச்சரித்தார். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இறைவன் அழிக்கும் தூதனை அனுப்பும்போது மூத்த ஆண் பிள்ளைகள் அனைவரும் அழிக்கப்படுவார்கள் எனவும் ஒவ்வொரு குடும்பமும் ஒரு பழுதற்ற ஆட்டுக்குட்டியை கொன்று ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை தங்களின் வாசலில் பூசும்படியாகவும் அப்பொழுது கடைசி வாதைக்கு தப்பமுடியும் என்று இறைவன் கூறினார். இறைவன் சொன்னதை நம்பிய இஸ்ரவேல் மக்கள் ஆட்டுகுட்டிகளை கொன்று அதன் இரத்தத்தை தங்கள் வாசலில் பூசினார்கள். இறைவன் குறிப்பிட அந்த நேரம் வந்தது. இறைவன் அழிக்கும் தூதனை அனுப்பினார். அழிக்கும் தூதன் எகிப்தியர்களின் மூத்த ஆண் பிள்ளைகளை அடிக்கும் போது, ஆட்டுக்குட்டியின் இரத்தம் தெளிக்கப்பட்ட குடும்பங்கள் பிழைத்தன. எகிப்து நாடு முழுவதும் மரண ஓலம் எழுந்தது. அன்று இரவே இஸ்ரவேல் மக்கள் எகிப்தை விட்டு போய்விடுமாறு பார்வோன் கட்டளை கொடுத்தான்.
Read More …