அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 28.10.2017

“சத்தியம்பண்ணாதிருங்கள்…”

வேதப்பகுதி: யாக்கோபு 5:12

மற்றொரு பிரச்சனையை அடையாளம் காணுதல்.

இங்கு யாக்கோபு மற்றொரு பிரச்சனையைத் தொடர்ந்து பேசுகிறார். சிலர் சத்தியம் செய்வதை எளிதாக செய்துவிடுகிறார்கள்.

“விசேஷமாய், என் சகோதரரே, வானத்தின்பேரிலாவது, பூமியின்பேரிலாவது, வேறெந்த ஆணையினாலாவது சத்தியம்பண்ணாதிருங்கள்; நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லக்கடவீர்கள்.” யாக்கோபு 5:12

1. ” விசேஷமாய், என் சகோதரரே, சத்தியம்பண்ணாதிருங்கள் “

அ) “சத்தியம்” என்ற வார்த்தையை உபயோகிப்பது பற்றி இல்லை.

ஆ) இங்கே உள்ள சூழல் சத்தியம்பண்ணுதல் என்பதுதான்.

2. ஆம் அல்லது இல்லை

அ) கர்த்தராகிய இயேசு இந்த விஷயத்தில் கற்பித்ததை யாக்கோபு நினைவுகூர்கிறார் (மத்தேயு 5: 33-37).

ஆ) சத்தியம்பண்ணுதலின் நடைமுறைகள்:

a) வானத்தின்பேரில் சத்தியம்பண்ணுதல்

b) பூமியின்பேரில் சத்தியம்பண்ணுதல்

c) எருசலேமின்பேரில் சத்தியம்பண்ணுதல்

d) ஒருவரின் தலையின்பேரில் சத்தியம்பண்ணுதல்

இ) இது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாட்களில் பொதுவான நடைமுறையாக இருந்தது.

3. வலுவான ஆலோசனை

அ) சத்தியம் பண்ண வேண்டாம்.

ஆ) ஒரு சத்தியத்தை செயல்படுத்தமுடியாத ஆபத்து மிகவும் உண்மையானது (பிரசங்கி 5: 1-7).

4. சத்தியம் செய்வது என்னவென்று புரிந்து இருப்பது அவசியம்.

அ) கர்த்தருடைய பரிசுத்த பெயர் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது.

ஆ) அப்படி செய்வதினால் நாம் கீழ்காணும் ஆபத்தில் இருப்போம்:

a) தேவனுடைய பெயரை அற்பமாகக் கருதிவிடுவோம்.

b) அவரது பெயரை வீணாக எடுத்துக் கொள்ளுவோம்.

c) செய்யும் சத்தியத்தை செய்ய தவறிவிடுவோம்.

5. “நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு “

அ) நாம் அவருடைய பெயரை வீணாக எடுத்துக்கொள்வதால், தேவனிடமிருந்து நியாயத்தீர்ப்பு இருக்கும்.

ஆ) தேவனுடைய பெயரால் செய்யப்பட்ட உறுதிமொழியை நாம் நிறைவேற்றாவிட்டால் நியாயத்தீர்ப்பும் இருக்கும்.

அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 27.10.2017

“துன்பப்படுதலுக்கும் நீடிய பொறுமைக்கும் திருஷ்டாந்தமாக.”

வேதப்பகுதி: யாக்கோபு 5:10

ஒரு தூண்டுதல்

தூண்டுதல் ஆத்துமாவுக்கு எப்போதும் உற்சாகம் தருகிறதாயிருக்கிறது! துன்பங்கள் அடிக்கடி ஒரு பெரும் இடத்தை வாழ்க்கையில் எடுத்துக்கொள்ளும், இதனால்தான் தூண்டுதல் தேவையான புத்துணர்ச்சியை அளிக்கிறது.

“என் சகோதரரே, கர்த்தருடைய நாமத்தினாலே பேசின தீர்க்கதரிசிகளைத் துன்பப்படுதலுக்கும் நீடிய பொறுமைக்கும் திருஷ்டாந்தமாக வைத்துக்கொள்ளுங்கள். இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே.” யாக்கோபு 5: 10-11

1. ஒரு தீர்க்கதரிசியின் உதாரணம்

அ) யாக்கோபு, தனிப்பட்ட முறையில் தீர்க்கதரிசிகளிடமிருந்து தூண்டுதலை பெற்றிருக்க வேண்டும்.

ஆ) தீர்க்கதரிசிகள் முக்கியமாக கர்த்தருடைய நாமத்தில் பேசியவர்கள் என குறிப்பிடப்பட்டனர்.

2. துன்பப்படுதல் மற்றும் பொறுமைக்கான உதாரணம்

அ) “துன்பம்”

a) அவர்கள் கர்த்தருக்காக பாடுபட்டார்கள்.

b) குறிப்பாக கர்த்தருடைய தீர்ப்பு பற்றி பிரசங்கித்தபோது அவர்களது செய்திகளை ஏற்றுக்கொள்ளவில்லை.

c) எரேமியா தீர்க்கதரிசி சிறைதண்டனையும் பெரும் விரோதத்தையும் அனுபவித்தார்.

ஆ) “பொறுமை”

a) கர்த்தருடைய உண்மையான தீர்க்கதரிசிகள் உண்மையுடன் கர்த்தருடைய வார்த்தையை முடிவுவரை பிரசங்கித்தார்கள்.

b) அவர்கள் அடிக்கடி தவறாக நடத்தப்பட்டாலும், அவர்கள் மக்களுக்கு கற்பிக்க முயன்றார்கள்.

c) கர்த்தருக்காக வாழ விரும்பும் அனைவருக்கும் அவர்களின் வாழ்வு ஒரு தூண்டுதலாக இருந்தது.

3. “பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே “

அ) “சகிப்பது” “பொறுமையாக இருப்பது” போன்றே அவசியமானது.

ஆ) இந்த இரு வார்த்தைகள் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன.

4. யோபுவின் உதாரணம்

அ) அவர் மிகவும் துன்பத்தை அடைந்தார்.

ஆ) தேவனுடைய கருனையும் இரக்கத்தையும் அவர் அனுபவித்தார்.

இ) இறுதி முடிவை தெரிந்துகொள்ளும்போது அது நமக்கு தூண்டுதலாயிருக்கிறது.

ஈ) யோபு துன்பத்தினால் இழந்த அனைத்தையும் தேவன் மீட்டு கொடுத்தார் (யோபு 42: 12-17).

உ) அவர் தனது குழந்தைகளின் நான்கு தலைமுறைகளைக் காணும் முதிர் வயதில் மரித்தார்.

அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 26.10.2017

“ஒருவருக்கொருவர் விரோதமாகப் முறையிடாதிருங்கள் …”

வேதப்பகுதி: யாக்கோபு 5: 9

ஒரு இயற்கையான பதில்

ஒருவர் பாதிக்கப்பட்டால் அவருடைய இயற்கையான பதில் முணுமுணுப்பாகத்தான் இருக்கும். ஆனால் யாக்கோபு இதை எதிர்த்து எச்சரித்தார்.

“சகோதரரே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள்; இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார். “ யாக்கோபு 5: 9

1. “ஒருவருக்கொருவர் முறுமுறுக்க வேண்டாம்”

அ) இது யாக்கோபு 3 ஆம் அதிகாரத்தில் கற்பித்தவையோடு ஒத்த கருத்து,

ஆ) முறுமுறுப்பு நாவினால் பாவம் செய்ய வழிவகுக்கும்.

இ) ” முறுமுறுப்பு ” என்ற வார்த்தை பின்வரும் நுணுக்கங்களைக் கொண்டுள்ளது:

a) முணுமுணுத்தல்

b) புலம்புல்

c) புகார்

2. “சகோதரர்கள்”

அ) யாக்கோபு தன்னுடைய வாசகர்களை “சகோதரர்கள்” என்று சொல்லுவதின் அர்த்தம் என்ன என்பதை நினைவில் வையுங்கள் என்று கூறுகிறார்.

ஆ) கர்த்தருக்குள் “சகோதரர்களாக” இருப்பதைப் பற்றி அதிகம் சொல்லப்பட்டிருக்கிறது.

a) நாம் ஆன்மீக குடும்பமாக இருக்க வேண்டும்.

b) ஒருவருக்கொருவர் கிறிஸ்துவுக்குள்ள சகோதர சகோதரிகளாக நாம் கருதுகிறோம்.

3. “நீ நியாயம் தீர்க்காதே”

அ) ஐஸ்வரியவான் நியாயம் தீர்க்கப்படுவான்.

a) ஏழைகளை கொடுமைப்படுத்துவதற்காக.

b) அவர்களின் ஊழியர்களை ஏமாற்றுவதற்காக.

c) அவர்களது சகோதரர்கள் மீது அக்கரை இல்லாமல் இருப்பதற்காக.

ஆ) ஆனால் ஏழைகளும் நியாயம் தீர்க்கப்படலாம்.

a) செல்வந்தர்களுக்கு எதிராக அவர்கள் நாக்கை துஷ்பிரயோகம் செய்வதினால்,

b) முதலாளிகளுக்கு எதிராக மோசமான சொற்கள் பயன்படுத்துவது.

c) செல்வந்தர்களுக்கு எதிரான தவறான மற்றும் எல்லா சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகவும் நியாயம் தீர்க்கப்படலாம்.

4. “இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார்”

அ) இதை புரிந்து கொள்ள விசுவாசம் தேவை.

ஆ) இதற்கு பொருமையும் முதிர்சியும் உள்ள நம்பிக்கை இருந்தால்தான் அவருடைய தெய்வீக நியாயதீர்ப்பை நம்ப முடியும்.

அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 25.10.2017

“நீடிய பொறுமையாயிருங்கள்…”

வேதப்பகுதி: யாக்கோபு 5: 7

கஷ்டத்தில் இருப்பவருக்கு ஒரு வார்த்தை

பொல்லாத செல்வந்தர்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு யாக்கோபு ஆறுதலான வார்த்தை ஒன்றை இங்கு தருகிறார்.

“இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான். நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்;கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே.” யாக்கோபு 5: 7-8

1. “பொறுமையாக இருங்கள்”

அ) இரண்டு முறை இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது.

ஆ) இது நிச்சயமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான சொல்.

இ) இது கவனிக்க வேண்டிய ஒரு ஞானமான சொல்லும் கூட.

2. “கர்த்தருடைய வருகை”

அ) யாக்கோபு இங்கு மீண்டும் நினைவூட்டுகின்றார்.

ஆ) கர்த்தருடைய வருகைக்கு காத்திருக்க இரண்டு நினைவூட்டல்களை வைக்கிறார்.

3. ஒரு விவசாயி பற்றிய விளக்கம்

அ) பாதிக்கப்பட்டவர்கள் ஒருவேளை விவசாயிகளாக இருந்திருக்கலாம்.

ஆ) எனவே இந்த உவமையை அவர்கள் மறக்க முடியாது.

இ) விவசாயிகள் எப்பொழுதும் இரண்டு மழைக்காக காத்திருந்தனர்.

a) முன்மாரி (அக்டோபர்-நவம்பர்)
தரையை மென்மையாக்கவும் நடவு செய்யவும் இந்த மழைக்காக.

b) பின்மாரி (மார்ச்-ஏப்ரல்)
பயிரை விளைய செய்ய இந்த மழைக்காக.

4. மறைந்திருக்கும் ஆபத்துக்கள்

அ) ஆனால் காத்திருக்காமல் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளுதல்.

ஆ) தாங்களே பணக்கார நிலப்பிரபுக்களுடன் போராட்டத்தில் ஈடுபடுவது.

இ) போராட்டத்தில், சிலர் தீவிரமாக காயப்படுத்தப்படலாம் அல்லது கொல்லப்படலாம்.

ஈ) இவை அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டும்!

5. “உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்”

அ) கர்த்தர் நியாயத்தைக் காப்பார் என்று உறுதியாக நம்பி.

ஆ) ஏழைகளுக்கு இவ்வளவு துன்பம் விளைவிக்கும் பொல்லாத பணக்காரர்களை அவர் நியாயந்தீர்ப்பார் என்று விசுவாசித்து.

இதயத்தில் தேவன் மீது விசுவாசம், நம்பிக்கை கொண்டு உறுதியாக இருக்க வேண்டும்!

அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 24.10.2017

வேலைக்காரரின் கூக்குரல் …”

வேதப்பகுதி: யாக்கோபு 5: 4

ஊழல் ஐஸ்வரியவான்கள் சுட்டிக்காட்டப்படுதல்.

இந்த சிக்கலைப் பற்றி ஆழமாக ஆராய்வதற்கு யாக்கோபு ஐஸ்வரியவான்களுக்கு எதிராக இன்னும் கடுமையாக எழுதியுள்ளார்!

“இதோ, உங்கள் வயல்களை அறுத்த வேலைக்காரருடைய கூலி உங்களால் அநியாயமாய்ப் பிடிக்கப்பட்டுக் கூக்குரலிடுகிறது; அறுத்தவர்களுடைய, கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளில் பட்டது. பூமியிலே நீங்கள் சம்பிரமமாய் வாழ்ந்து, சுகபோகத்தில் உழன்றீர்கள்; கொழுத்தவைகளை அடிக்கும் நாளில் நடக்கிறதுபோல உங்கள் இருதயங்களைப் போஷித்தீர்கள். நீதிமானை நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்துக் கொலைசெய்தீர்கள்; அவன் உங்களோடே எதிர்த்து நிற்கவில்லை.” யாக்கோபு 5: 4 – 6

1. ஊழல் நிறைந்த செல்வந்தர்களின் பொல்லாத பழக்கவழக்கங்கள் சிறப்பித்துக் சொல்லப்படுகிறது.

அ) அவர்களால் பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்களின் ஊதியம் மோசடி மூலம் திருப்பி எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஆ) வேலைக்காரர்கள் (பணக்கார உரிமையாளர்களுக்காக வேலை செய்தவர்கள்) தங்கள் வேதனையில் தேவனிடம் கூச்சலிட்டனர்.

இ) சட்டத்தை தவறாக பயன்படுத்துவதில் அவர்கள் குற்றவாளிகள்.

a) அவர்களின் சம்பளத்தை மீட்க சட்டபூர்வமான வழிமுறையை விரும்பியவர்களை அவர்கள் கண்டனம் செய்கிறார்கள்.

b) அவர்கள் நியாயமானவர்களை கொலை செய்வதற்கு கூட தேடுவார்கள்.

c) ஊழல் நிறைந்த செல்வந்தர்களை எதிர்த்து போரிட எந்தவொரு சக்தியும் இல்லை.

2. பணக்காரர்களின் வாழ்க்கை முறை

அ) அவர்கள் சுகபோகத்தில் வாழ்ந்தனர்.

ஆ) தங்களது தொழிலாளர்கள் தப்பிப்பிழைக்க போதுமானது இல்லாதபோது இவர்கள் ஆடம்பரமாக வாழ்ந்தார்கள்.

3. “ஓய்வுநாளின் ஆண்டவர் “

அ) இந்த சொற்றொடரை மொழிபெயர்ப்பதற்கான மற்றொரு வழி “சேனைகளின் கர்த்தர்”.

ஆ) பழைய ஏற்பாட்டில் தேவனின் பெயர் தலைப்புகளில் இதுவும் ஒன்றாகும்.

இ) தேவதூதர்கள் பலத்த சேனையை வழிநடத்தும் கர்த்தரை விவரிப்பதற்காக இந்த பெயர் பயன்படுத்தப்பட்டது.

ஈ) “சேனைகளின் கர்த்தர்” தேவனுடைய மகத்துவத்தையும் வல்லமையும் விவரிக்கின்றது.

4. சேனைகளின் கர்த்தருக்கு பயப்படும் பயம்

அ) அவரரிடத்தில் மிகுந்த பயபக்தியில் இருக்க வேண்டும்.

ஆ) அவரிடத்தில் பயத்தோடு இருக்க வேண்டும்.

இ) ஊழல் நிறைந்த செல்வந்தரை அவர் வந்து நியாயம் தீர்ப்பார்.

ஈ) அவர் கீழே தள்ளப்பட்டவர்களின் நீதிக்கு ஆதரவளிப்பார்.

உ) ஊழல் நிறைந்த செல்வந்தர்களை அவர் தண்டிப்பார்.