அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 02.11.2017

“ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து…”

வேதப்பகுதி: யாக்கோபு 5:20

சிறந்த செயலாகிய ஆத்தும இரட்சிப்பு

யாக்கோபு தனது நிருபத்தை பலமான மற்றும் தகுதி வாய்ந்த குறிப்பில் முடிக்கின்றார். விசுவாசிகள் ஆத்துமாக்களுக்கு சவால் விட்ட பல பிரச்சினைகளை அடையாளப்படுத்தி அவர் எழுதியிருந்தார். ஆகவே அவர்கள் உன்னதமான ஆத்மா-ஆதாய வேலைகளில் ஈடுபட, இப்போது வாசகர்களை மக்களிடம் சந்திக்கும்படி கேட்டுக் கொள்கின்றார்.

“சகோதரரே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம்போகும்போது, மற்றொருவன் அவனைத்திருப்பினால், தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.” யாக்கோபு 5: 19-20

1. “சகோதரர்கள்

அ) இது சபை சமூகத்திற்கான ஒரு வேண்டுகோள்.

ஆ) அவர்களுக்கு முன்வைக்கப்படும் ஊழியத்தை சிந்திக்கும்படி யாக்கோபு அவர்களை ஊக்கப்படுத்துகிறார்.

2. “சகோதரரே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம்போகும்போது”

அ) இந்த நபர் ஒரு விசாரிக்கின்றவராகவும், நேர்மையுள்ள மற்றும் ஆர்வமானவராகவும் இருக்கலாம்.

ஆ) இந்த நபர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்திருப்பவராக இருக்கலாம்.

இ) ஆனால் அவர் சத்தியத்திலிருந்து விலகியிருக்கலாம், அதாவது, அவர் சத்தியத்திலிருந்து தவறான வழியில் செல்கிறார் என்றே அர்த்தம்.

3. “மற்றொருவன் அவனைத்திருப்பினால்”

அ) அப்படி வழி விலகி செல்லும் ஒரு நபரை எப்படியாவது “திருப்ப” இன்னொருவர் உதவ முடியும்.

ஆ) அப்படிப்பட்டவர் சத்தியத்தினால் ஒரு பாவியை திருப்ப முடியும்

4. “தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன். “

அ) இது யாக்கோபும் மற்ற அப்போஸ்தலர்களும் செய்துவந்த ஒரு முக்கியமான ஊழியம்.

ஆ) எண்ணற்ற வடிவங்களில் தோன்றக்கூடிய பாவத்தின் பிரச்சனையை அவர்கள் சரிசெய்ய முயன்றார்கள்.

இ) பாவம் மற்றும் தவறு சேர்ந்தே இருக்கும்

ஈ) அது மனந்திரும்பி, உண்மையான மாற்றத்தில் இருக்க வேண்டும்.

உ) சமரசம் எப்பொழுதும் தீர்வு ஆகாது.

5. “ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து”

அ) இந்த ஊழியம் “ஆத்தும ஆதாயம்” பற்றியதாகும்.

ஆ) அவரது பாவங்களையும் தவறுகளையும் விட்டு விலகாதிருப்பவருக்கான மரணம் (ஆத்தும) காத்திருக்கிறது.

6. “திரளான பாவங்களை மூடுவானென்று”

அ) ஒருபோதும் பாவங்கள் தனியாக இல்லை.

ஆ) அவை கணக்கில்லாமல் எண்ணப்படுகின்றது! ஆனால் அவைகள் இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பின் மூலம் மூடி மறைக்கப்பட முடியும்!

அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 01.11.2017

“எலியா என்பவன் நம்மைப்போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும்…”

வேதப்பகுதி: யாக்கோபு 5: 17-18

ஒரு சிறந்த உதாரணம்

யாக்கோபு அவர்களுக்கு, நல்ல நீதிமானின் ஜெபத்திற்கு எலியா ஒரு சிறந்த உதாரணம். அவரை ஒரு உதாரணமாக தேர்ந்தெடுக்க அவர் பொருத்தமானவராக இருந்தார். ஜெபம் என்பதை கொள்ளையாடின பொருளாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதை நினைவில் வைப்போம்.

“எலியா என்பவன் நம்மைப்போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்றுவருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை. மறுபடியும் ஜெபம்பண்ணினான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது.” யாக்கோபு 5: 17-18

1. “எலியா என்பவன் நம்மைப்போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும்”

அ) எலியாவின் வாழ்க்கை மற்றும் ஊழியம் 1 இராஜாக்கள் 17 முதல் 2 இராஜாக்கள் 2 வரை பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆ) ” நம்மைப்போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும்”

a) எலியா ஒரு தேவனுடைய தீர்க்கதரிசி.

b) ஆனால் அவர் நம்மைப் போல ஒரு சாதாரண மனிதன் தான்.

c) அவர் மனச்சோர்வு மற்றும் உணர்வுகளை எதிர்த்துப் போரிட்ட காலம் ஒன்று இருக்கத்தான் செய்தது.

d) மரணம் உயிரோடு இருப்பதைவிட சிறந்தது என்று நினைத்த ஒரு காலம் இருந்தது (1 இராஜாக்கள் 19).

2. துன்மார்க்க அரசனாகிய ஆகாபின் ஆட்சியில் எலியாவின் முக்கியமான ஊழியம்

அ) எலியா ஒரு துணிச்சலான தீர்க்கதரிசியாக இருந்தார், துன்மார்க்க அரசனாகிய ஆகாப்மீது சவால்விட தேவன் அவரை எழுப்பினார்.

ஆ) ஆகாபும் அவருடைய மனைவி யேசபேலும் பெரும் அநீதியுடன் இஸ்ரவேலரை ஆட்சி செய்தனர்.

a) அவர்களுக்கு கீழ் விக்கிரகாராதனை பெருகியது.

b) ஆகாபின்மீது யேசபேலின் செல்வாக்கு தெளிவாகவும் கொடியதாகவும் இருந்தது.

c) ஆகாப் நாபோத் என்பவனுடைய திராட்சைத் தோட்டத்தை அடைவதற்காக அந்த அப்பாவியை கொன்றுபோட்டான் (1 இராஜாக்கள் 21).

3. எலியா ஒரு ஜெப வீரனாக

அ) எலியா தன்னுடைய ஆரம்ப ஊழியத்தில் ஆகாப் ராஜாவுக்கு ஆச்சரியமான வார்த்தைகளைக் கொடுத்தார்.

“கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான். 1 இராஜாக்கள் 17: 1

ஆ) பஞ்சம் மிகவும் கொடியதாக இருந்தது (1 இராஜாக்கள் 18: 1-2).

இ) எலியா பாகாலின் 450 தவறான தீர்க்கதரிசிகளுக்கும், ஆகாபையும், யேசபேல் ராணியையும் ஆதரித்த கிபியாவிலிருந்த 400 தீர்க்கதரிசிகளுக்கும் சவால் விட்டு தோற்கடித்தார். (1 இராஜாக்கள் 18:19).

4. “மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான்,… மறுபடியும் ஜெபம்பண்ணினான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது

அ) எலியாவுக்கு மழை பெய்யாதபடி நிறுத்தும் வல்லமை இல்லை.

ஆ) அதிகாரமும் வல்லமையும் தேவனுடையது; ஆனால் நீதிமானின் ஜெபம் அந்த வல்லமை செயல்பட காரணமாக இருக்க முடியும்!

அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 31.10.2017

உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு “

வேதப்பகுதி: யாக்கோபு 5:16

மீறுதல்களை அறிக்கையிடுதல்

மீறுதல்கள் இருக்கும்போது நாம் எங்கு சென்று எதை செய்ய வேண்டும்? என்பதைப்பற்றி யாக்கோபு மிகவும் தெளிவாக இருந்தார். பின்வரும் பகுதி இதை மிகவும் தெளிவாக விளக்குகிறது.

“நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.” யாக்கோபு 5:16

1. “உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு”

அ) “ஒப்புக்கொள்ளுதல்”

a) முழு மனசாட்சி இங்கே கருத்தில் கொள்ளப்படுகிறது.

b) நேர்மையாகவும் வெளிப்படையாகவும்.

ஆ) “மீறுதல்கள்”

a) இங்கே பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான வார்த்தை “பாவம்”.

b) பாவம் எங்கே இருக்கின்றதோ, அது ஒப்புக்கொள்ளப்பட வேண்டும்.

இ) “ஒருவருக்கொருவர்”

a) இது ஆசாரியனிடத்தில் மட்டுமல்ல.

b) ஆனால் ஒருவருக்கொருவர்.

2. “நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு,ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள்”

அ) இந்த சூழலில் ஒருவருக்கொருவர் ஜெபியுங்கள் என்பது மற்றவரிடம் மன்னிப்பை தேடுவதும், கொடுப்பதும்.

ஆ) ஒருவர் இன்னொருவருக்கு விரோதமாக பாவம் செய்திருந்தால் அதற்கு மன்னிப்பு தேடுவது ஞானமுள்ள செயல்.

இ) குணப்படுதல் இங்கு உண்டாக வாய்ப்பு இருக்கின்றது.

ஈ) குணப்படுத்துதல் நடக்குமா அல்லது நடக்காதா என்பது மற்ற காரணிகளைப் பொறுத்துதான் இருக்குமே தவிற ஜெபத்தை வைத்து அல்ல.

3. “நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.”

அ) “நீதிமான்”

a) இது ஒரு முக்கியமான குறிப்பு.

b) இது வெறும் ஜெபம் அல்ல, ஆனால் நீதியுள்ள மனிதனுடைய ஜெபம்.

ஆ) நீதிமான் எப்படி ஜெபிக்கிறார்?

a) அவர் வல்லமை மற்றும் அதிகாரத்துடன் ஜெபிக்கிறார் (நேரடி மொழிபெயர்ப்பு).

b) வல்லமையுடன் ஜெபிப்பது எப்படி என்பதை புரிந்துகொள்ள உதவுவதற்காக “ஊக்கமுள்ள” வார்த்தை சேர்க்கப்பட்டது.

c) எந்தவொரு சந்தர்ப்பத்திலும், இது ஒரு தாழ்மையான வேண்டுகோளாக இருக்க வேண்டும். (எல்லா ஜெபங்களும் தேவனுக்கு கீழ்ப்படிந்தவை அல்ல).

அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 30.10.2017

“அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்…”

வேதப்பகுதி: யாக்கோபு 5:15

ஜெபத்திற்கான இடம்

ஜெபத்தைக் குறித்து தெளிவாக இருக்கும்படி யாக்கோபு தனது வாசகர்களை ஊக்கப்படுத்தினார். ஆயினும், ஜெபமென்பது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக இருக்கும் காரியம் என்று அர்த்தமில்லை.

“அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.” யாக்கோபு 5:15

1. “விசுவாசமுள்ள ஜெபமும்”

அ) யாக்கோபு தவிர்க்கமுடியாத ஒன்றை இங்கு வெளிப்படுத்துகிறார்.

ஆ) எல்லா ஜெபங்களும் விசுவாசத்தோடு இணைந்திருக்க வேண்டும் (யாக்கோபு 1: 6).

2. “பிணியாளியை இரட்சிக்கும்”

அ) விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை காப்பாற்ற முடியுமா?

ஆம் சந்தேகத்திற்கு இடமில்லாமல்!

ஆ) பிணியாளிகளை காப்பாற்ற ஒரே வழி ஜெபம் தானா?

இல்லை! யாக்கோபு நோயுற்றவர்களைக் காப்பாற்ற ஒரே வழி ஜெபம் என்று யாக்கோபு கற்றுக்கொடுக்கவில்லை!

3. “கர்த்தர் அவனை எழுப்புவார்”

அ) கர்த்தர் இங்கு செயல்படுகிறார் ஏனெனில் அவருடைய பெயர் சம்பந்தப்பட்டிருப்பதால்.

ஆ) கர்த்தருடைய நாமத்தினால் எண்ணைய் பூசப்பட வேண்டும்.

இ) நோயுற்றவர்களை கர்த்தர் எழுப்ப முடியுமா?

இது பற்றி எந்த சந்தேகமும் இல்லைதான்!

ஈ) ஆனால் நோயாளிகளை எழுப்புவது என்பது அவருடைய சித்தத்திற்குட்பட்டதாக இருக்கின்றது

ஆனால் இதற்கான பதில் அனேக நேரங்களில் “இல்லை!” என்பதே!

a) பவுல் பல பலவீனங்களோடிருந்தார்.

b) அவர் குணபடுத்தப்படும்படி வைத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது.

c) தேவனுடய கிருபையை சார்ந்துகொள்ள அவர் வலியுறுத்தப்பட்டார்.

d) மற்றவர்களைக் குணமாக்கிய பவுல் மாம்சத்திலிருந்த தனது சொந்த முள்ளில் இருந்து காப்பாற்றப்படவில்லை.

e) ஞானமுள்ள அப்போஸ்தலனாகிய பவுல் தேவனுடைய சித்தத்திலும் அவருடைய கிருபையிலும் மகிழ்ச்சியடைவதைத் தேர்ந்தெடுத்தார் (2 கொரிந்தியர் 12: 9-10).

4. “அவன் பாவஞ்செய்தவனானால்”

அ) நோய் எப்போதும் பாவம் தொடர்பானதுதான் என்று யாக்கோபு இங்கு கருத்து சொல்லவில்லை.

ஆ) எனினும், பாவங்கள் செய்திருந்தால், அவைகள் ஒப்புக்கொண்டு அறிக்கை செய்யப்பட வேண்டும்.

5. “அது அவனுக்கு மன்னிக்கப்படும்”

தேவனிடமிருந்து மன்னிப்பு என்பது தாராளமாக கிடைக்கும ஒன்றே! கர்த்தராகிய இயேசு ஒரு முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்டவனை எவ்வாறு குணப்படுத்தினார் என்பதை நாம் நினைவுகூருவோம். பாவம் என்னும் பிரச்சனையைத்தான் முதலில் அடையாளம் காட்டினார். பின்புதான் அவர் மன்னிப்பை வழங்கி முடக்குவாதத்தில் இருந்து அந்த மனிதனை சுகப்படுத்தினார் (மாற்கு 2: 1-12).

அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 29.10.2017

” உங்களில் ஒருவன் துன்பப்பட்டால்?”

வேதப்பகுதி: யாக்கோபு 5:13

ஜெபிக்க அழைப்பு

யாக்கோபு இப்போது தனது கவனத்தைத் ஜெபத்திற்கு திருப்புகிறார். இந்த பகுதியை பற்றிய தவறான புரிதலைத் தவிர்ப்பதற்கு,கவனமான ஆய்வு முக்கியம்.

“உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன்; ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால் சங்கீதம் பாடக்கடவன். உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள்.” யாக்கோபு 5: 13-14

1. “உங்களில் ஒருவன் துன்பப்பட்டால்?”

அ) “துன்பம்” என்ற வார்த்தை எந்த வகையான துன்பத்தையும் விவரிக்க பயன்படுத்தப்படலாம் (நோய் அல்லது கடினமான எந்த நிலையும்).

ஆ) துன்பங்கள் மனிதர்கள் வாழ்வில் எதிர்பார்க்க வேண்டிய ஒரு பிரச்சினைதான்.

2. “ஜெபம்பண்ணக்கடவன்”

அ) இப்படி சொல்வதினால் அவர் மற்ற காரியங்களை செய்யாமல் இருக்கவும், முயற்சிகாமல் இருக்கவும் என்று அர்த்தம் அல்ல.

ஆ) அவர் துன்பப்படுகையில் ஜெபத்தில் தேவனைத் தேடாமல் இருந்துவிடக்கூடது.

3. “ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால்”

அ) மகிழ்ச்சியாக இருப்பது ஒரு ஆசீர்வாதம்.

ஆ) தேவனுக்கு நன்றி செலுத்துவது இயற்கையானதுதான் (சங்கீதம் 103).

4. “சங்கீதம் பாடக்கடவன்”

அ) இது யாக்கோபின் ஆலோசனை.

ஆ) சங்கீதம் பாடுவது ஒரு நல்ல வெளிப்பாடுதான்.

5. ” உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால்”

அ) வியாதி யாருக்கும் வரக்கூடும்.

ஆ) மூப்பர்களை வரவழைக்க வேண்டும்.

a) இது “மருத்துவத்திற்கு” மாற்று என்று கருதிவிடக் கூடாது.

b) பொருத்தமான சிகிச்சை பெறுவது அந்த நபரின் பொறுப்பாகும்.

இந்த கடினமான பகுதியை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்

அ) யாக்கோபு 5:14ஐ முதல் நூற்றாண்டின் சூழலில் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

ஆ) குணப்படுத்துவதற்கான சிறப்பு வரம் கொடுக்கப்பட்ட அப்போஸ்தலர்களும் மற்ற தலைவர்களும் இருந்தார்கள்.

இ) அந்த நாட்களில் யாக்கோபு எழுதியதை நடைமுறையில் செய்வது அசாதாரணமானது அல்ல.

ஈ) ஆயினும், நோயாளிகளை குணப்படுத்துவதற்கான ஒரு மருத்துவ வழியாக புரிந்து கொள்ளப்பட இது எழுதப்படவில்லை.