ஜெபிக்கும் கிறிஸ்தவனா? ஆண்டவரை நேசிக்கும் கிறிஸ்தவனா?

எழுதியவர்: போதகர். பால் ராஜ்

தமிழ் கிறிஸ்தவ உலகில்  பொதுவாக பயன்படுத்தப்படும் வாசகங்களில்  “ஜெபிக்கும் கிறிஸ்தவன் பாவம் செய்ய மாட்டான், பாவம் செய்கிற கிறிஸ்தவன் ஜெபிக்க மாட்டான்” என்கிற இந்த வாசகம் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இந்த வாசகத்தின் பிரகாரம் பார்க்கும் பொது ஜெபித்தவர்கள் எவரும் பாவமே செய்ததில்லை, பாவம் செய்த எவருமே ஜெபித்ததில்லை என்று எண்ணத்தோன்றுகிறது. Read More …

சுயநீதிக்கு ஒரு அறைகூவல்!

எழுதியவர்: போதகர். பால் ராஜ்
 
அரசியல் சார்ந்த பத்திரிக்கைகளும், தினசரி பத்திரிக்கைகளும், வியாபார நோக்கோடு ஆதாரமில்லாத செய்திகளையும், சில வேளைகளில் ஆதாரப்பூர்வமான செய்திகளையும் போடுவது வழக்கம். அதேபோல் இன்று கிறிஸ்தவ உலகில் சிலர் ஊழியர்களின் தவறான வாழ்கை, மற்றும் போதனைகளை சமூக வளைதளங்களில் பதிவிடுகின்றனர். அது தேவையான ஒன்றே, தேவை இல்லை என்று சொல்லுவது சரியான கிறிஸ்தவ நிலைப்பாடு அல்ல. ஆனால் அதே வேளையில் இப்படிப்பட்ட செயல்களுக்கு சரியான கிறிஸ்தவ அணுகுமுறை என்னவென்பதை தெளிவுபடுத்துவதே, இந்தக் கட்டுரையின் நோக்கம்.

Read More …

தேவை ஆதாரம் அல்ல, தேவனோடு அனுபவம்

எழுதியவர்: போதகர். பால் ராஜ்

யோவான் 21:1-22

இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நம்ப மறுப்பவர்களை நாம் இரண்டாக பிரிக்கலாம். முதலாவது கூட்டம் ஆதாரம் தேடும் கூட்டம். இரண்டாவது கூட்டம் விசுவாசிக்க தேவையான தேவனுடனான தனிப்பட்ட அனுபவத்தை தேடும் கூட்டம். முதலாவது கூட்டத்தை எதிர்க்கொள்ள நமக்கு போதுமான இறையியல் விளக்கம், வேதாகம மற்றும் வரலாற்று சான்றுகள் உள்ளன. இயேசு கிறிஸ்துவுடனான தனிப்பட்ட சந்திப்பு மட்டுமே இரண்டாவது கூட்டத்திற்கு உயிர்த்தெழுதலின் நம்பிக்கையை தரமுடியும். பயத்திலும், நம்பிக்கையற்ற சூழலிலுமிருந்த தனது சீடர்களின் பயத்தையும், அவநம்பிக்கையையும் அகற்றி தன்னோடுள்ள அவர்களின் தனிப்பட்ட அனுபவத்தின் மூலம் அவர்களுக்கு எவ்விதம் தனது உயர்த்தெழுதல் மீதான நமிக்கையை ஊட்டினார் என்பதை தியானத்திற்கு ஆதாரமாக எடுத்துக்கொண்ட வேதப்பகுதியிலிருந்து நாம் கற்றுக்கொள்வோம். Read More …

கேட்கப்பட்டதும்! கொடுக்கப்பட்டதும்!

எழுதியவர் : போதகர் G. பால் ராஜ்

1 கொரிந்தியர் 1:18-24

சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.அந்தப்படி: ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேன் என்று எழுதியிருக்கிறது. Read More …