பாடம் 6 நம்பிக்கையின் பலன் நீதி

இறைவன் ஒரு மனிதனை தெரிந்துகொண்டார். பாபேல் சம்பவதிற்க்கு பிறகு, மக்கள் வெகு சீக்கிரமே உண்மையான இறைவனை மறந்தனர். மனிதரால் உருவாக்கப்பட்ட சிலைகளை தெய்வங்களாக வழிபட ஆரம்பித்தனர். ஆபிராம் எனும் மனிதனின் குடும்பமும் அதற்கு விதிவிலக்கல்ல. இறைவன் தன் கிருபையினால் ஆபிராமுக்கு தன்னை வெளிப்படுத்த சித்தமாகி, அவர் மூலம் தமது திட்டத்தை செயல்படுத்த நினைத்தார். Read More …

பாடம் 5 பாவத்தின் சம்பளம் குழப்பம்

உலகத்தின் பெரு வெள்ள அழிவிற்கு பின், நோவாவின் குடும்பம் மற்றும் அவர்களோடு பாதுகாக்கப்பட்ட  உயிரினங்கள் மாத்திரம் தப்பிப் பிழைத்திருந்தன. இறைவன் நோவா மற்றும் அவரது குடும்பதிடம் “நீங்கள் பலுகி பெருகி பூமியை நிரப்புங்கள்” என கூறினார் (ஆதி. 9:1).  மீண்டும் மக்கள் இப்படிப்பட்ட பெரு வெள்ளம் மூலம் பேரழிவில் அகப்படாமல் இருக்கத்தக்கதாக இறைவன் உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தினார். உடன்படிக்கையின் அடயாளமாக வானவில்லை குறித்தார். மழை வரும் நேரங்களில் தோன்றும் வானவில் மனிதருக்கும் கடவுளுக்கும் மத்தியில் அடையாளச் சின்னமாக இருந்து வெள்ளத்தின் மூலம் மக்கள் மீண்டும் அழிந்துவிடாதபடி ஞாபக குறியாக இருக்கும். Read More …

பாடம் 4 பாவத்தின் சம்பளம் பேரழிவு

ஆதாம் ஏவாளுக்கு இன்னும் பல குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் மூலமாக மனுக்குலம் உலகில் பெருக ஆரம்பித்தது. மனுக்குலம் படைக்கப்பட்டு கிட்டத்தட்ட 1500 வருடங்கள் கடந்திருந்தது. உலகில் மக்கள்தொகையும் கணிசமான அளவில் பெருகியிருத்தது. ஆனால் பெருகினது மக்கள்தொகை மட்டும் அல்ல, பாவமும்தான். மனிதருடைய பாவ நிலையினால் உலகம் முழுவதும் பாவ செயல்களால் நிறைந்திருந்தது (ஆதி. 6:5). மனிதர்கள் தங்கள் சுபாவத்திலேயே பாவிகளாக இருந்தபடியினால் அவர்கள் செய்ததெல்லாம் பாவமாகவே இருந்தது. Read More …

பாடம் 3 பாவத்தின் சம்பளம் கொலை

ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியே அனுப்பி விடப்பட்ட ஆதாமும் ஏவாளும் தோட்டத்துக்கு வெளியே தங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்தனர். ஆனால் தோட்டத்துக்கு வெளியே ஆதாம் மற்றும் ஏவாளின் வாழ்க்கை இலகுவாக இல்லை. மனுக்குலம் பாவத்தினால் கறை பட்டதன் விளைவுகளில் ஒன்று மனிதன் இனி நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்தால் மட்டுமே பிழைக்க முடியும். ஏதேன் தோட்டத்தில் அனைத்தையும் திருப்தியாக பெற்றிருந்து, மன விருப்பத்தோடு தோட்டத்தை பேணிக்கொண்டிருந்த ஆதாமுக்கும் ஏவாளுக்கும், நிர்பந்தத்தின் அடிப்படையில் வேலை செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்தால் மட்டுமே வயிற்றை நிரப்பமுடியும் என்கிற நிலை. அப்படியே உழைத்தாலும் மனம் ஈடுகொடுக்க மறுத்தது. நிலத்தில் வேறு முட்களும் விரும்பத்தகாத செடிகளும் முளைத்து உழைப்பை இன்னும் கடினமாக்கியது. Read More …

பாடம் 2 மனிதரின் வீழ்ச்சி

தமது சாயலில் மனிதரை உருவாக்கின இறைவன், ஏதேன் தோட்டம் எனும் சிறந்த இடத்தை உண்டாக்கி மனிதரை அதிலே வாழவைத்தார். அந்த ஏதேன் தோட்டமானது இயற்க்கை எழில் கொஞ்சும் மிக அழகான இடம் என்பதாக வேதாகமம் விவரிக்கிறது. செழிப்பான ஆறுகள் அந்த ஏதேன் தோட்டத்தை சுற்றியோடின. பார்வைக்கு அழகான மரங்கள், மனிதர் உண்ணுவதற்கு ஏற்ற காய் கனிகள், மனிதருக்கு எந்த தீங்கும் விழைவிக்க அறிந்திராத, மனிதரோடு இசைந்து வாழும் மிருகங்கள் மற்றும் பறவைகள் என  ஏதேன் தோட்டம் மிக சிறப்பானதாக இருந்தது.

இறைவன் மனிதரைப் படைத்ததற்கான மிக முக்கியமான நோக்கங்களில் ஒன்று தாம் மனிதரோடு அன்புறவில் நிலைத்திருப்பது. இறைவன் மனிதரோடு என்றென்றும் அன்புறவோடு இருக்கவும், ஐக்கியம் கொள்ளவும் மனிதரைப் படைத்தார். இறைவன் மனிதரைப் படைத்து பின்பு அவர்கள் தாமாக வாழ்வதற்கு விட்டுவிடுகிறவராக இராமல், மனிதரை தொடர்ந்து சந்தித்து அவர்களோடு உறவாடுகிறவராக இருந்தார். ஏதேன் தோட்டத்திலே இறைவனோடு கூட மனிதரின் உறவு மிக சிறப்பானதாக இருந்தது.


விழுந்து போன தூதன் லூசிபர் மற்றும் அவனது சகாக்கள்.
வேதாகமத்தின் மற்றொரு பகுதியில் விளக்கப்பட்டிருக்கிற, விழுந்துபோன தூதன் என்று பொதுவாக அழைக்கப்படுகிற லூசிபரை பற்றி இந்த இடத்தில் அறிந்துகொள்வது பின்னால் வரப்போகும் சம்பவங்களை புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். லூசிபர் என்கிற தூதனும் இறைவனால் நல்ல தூதனாகவே படைக்கப்பட்டான். ஒரு குறிப்பிட்ட தூதர் குழுவுக்கு தலைவனான லூசிபர், உன்னதமான இறைவன் வாசம் பண்ணும் இறைவனின் ஆராதனை கூடத்தின் மிக உயரிய இடத்தில் வைக்கப்பட்டான். மகிமையான இறைவனை ஆராதித்து வந்த லுசிபர் இறைவனுடைய மகிமையை இச்சித்து, இறைவனைப்போலாகும்படி நினைத்தான். இன்னும் சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் தான் இறைவனாக ஆகவேண்டும் என நினைத்தான். எனவே லூசிபர் இறை சமூகத்தை விட்டு தள்ளப்பட்டான். ஒரு கூட்ட தூதர்கள் அவனை பின்பற்றினார்கள். அந்த லூசிபரே வேதாகமத்தில் சாத்தான் என்று அழைக்கப்படுகிறான்; அவனை பின்பற்றின தூதர்கள் பிசாசுகள்.
Read More …