ஏமாற்றுப் பேர்வழிகளுக்கு உங்களை விற்றுப்போடாதீர்கள்!

செழிப்பின் உபதேசம் என்னும் புரட்டுப் போதனை இன்று பல்வேறு வடிவங்களில் வலம் வருகின்றது. தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்ளும் பலர் இந்த பொய்யை நம்பிக்கொண்டுதான் தங்கள் வாழ்வை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். எளிமையாக செழிப்பின் உபதேசம் சொல்வது இதுதான்: இயேசுவை நீங்கள் நம்பினால் உங்களுக்கு செல்வச் செழிப்பும் ஆரோக்கியமும் நிச்சயமாகக் கிடைக்கும். இந்த புரட்டுப் போதனையில் பல வகையும் வடிவங்களும் உண்டு. நீங்கள் நம்பிக்கையோடு வேண்டிக்கொள்ளும் எதையும் கடவுள் நிச்சயமாகத் தருவார், நீங்கள் கேட்பதைப் பெற்றுக்கொள்ளவில்லை என்றால் உங்களுக்கு போதிய அளவு நம்பிக்கை இல்லை, உபவாசம் இருந்து விண்ணப்பிக்கும்போது நமது விண்ணப்பத்திற்கு பவர் அதிகம், கடவுளை சதா ஆயிரம், இரண்டாயிரம், பத்தாயிரம் எண்ணிக்கைகளில் ஸ்தோத்திரங்கள் செய்து கொண்டிருந்தால் இந்த செழிப்பை நமக்கு நிச்சயமாகத் தருவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை, கடவுள் தீர்க்கதரிசனங்கள் மற்றும் கனவுகள் மூலமாகவே இப்படிப்பட்ட வெளிப்பாடுகளை நமக்குக் கொடுக்கிறார் என்று இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இப்படிப்பட்ட அனைத்து புரட்டுப் போதனைகளுக்கும் பெருங்கூட்டங்களுக்கு நற்செய்தி அறிவிக்கப் போவதாக தங்களைத் தாங்களே அறிவித்துக்கொண்ட பிரசங்கிகளும் இன்று தொலைக்காட்சியில் தோன்றி வேதாகமத்தைக் கைகளில் வைத்துக்கொண்டு மனம்போல் மக்களை ஏமாற்றுகிற புரட்டுப் போதகர்களும் பெருமளவு காரணமாயிருக்கிறார்கள். Read More …