துப்பாக்கிச் சண்டையில் கத்தி!

(எச்சரிக்கை: கொஞ்சம் நிதானித்து வாசிப்பது அவசியமாக இருக்கலாம். கவனமாக வாசிப்பது ஒரு மாற்றத்தைக் கொண்டுவரலாம்).

கலைடாஸ்கோப் (Kaleidoscope) என்ற சிறு கருவியைப் பார்த்திருப்பீர்கள். பொருட்காட்சிகளில் விளையாட்டுப் பொருளாக விற்பனைக்கு வரும். என்போன்ற அந்தக் (மொபைல் இல்லாத)காலச் சிறுவர்களுக்கு அதன் வழியே காணும் விதவிதமான டிசைன்கள் அப்போதெல்லாம் ஒரு நல்ல பொழுதுபோக்கு. கண்வலிக்கும்வரை அதைச் சுற்றிச்சுற்றி அது உண்டாக்கும் டிசைன்களைப் பார்த்துக் கொண்டிருப்போம். அதில் இருமுனைகள் இருக்கும்; அதில் ஒரு புறம் வழியே மட்டுமே பார்ப்பது மட்டுமே சரியானது. கண்ணாடித்துண்டுகள் உண்டாக்கும் விந்தை ஒளிக்கோலங்கள் அந்த சிறியமுனை வழியே தான் தெரியும். அடுத்த முனையில் (பெரிதான பகுதியில்) பார்த்தால், இது என்ன கருவி என்பதுகூடப் புரியாது! கலைடாஸ்கோப்பின் மகத்துவமே தெரியாது. Read More …

உங்களுக்கு ஒரு நற்ச்செய்தி

அன்புநண்பரே, உண்மையானஇறைவனுடன்அன்புறவில்நிலைத்திருப்பதைகுறித்துநினைத்ததுண்டா?

அண்ட சராசரங்களையும் படைத்த இறைவன், நம்மைப்போன்ற மனிதர்கள் மகிழ்ந்திருக்கும்படியாக இந்த உலகத்தை சிறப்பாக படைத்தார். என்றென்றும் அவரோடு அன்புறவில் நிலைத்திருக்கவேண்டும் என்கிற எண்ணத்துடன் மனுக்குலத்தையும் உருவாகினார். நம்மோடு தனிப்பட்ட விதத்திலே உறவுகொண்டாட விரும்பும் சர்வ வல்லமையுள்ள இறைவனை நேசிக்கவும், என்றும் அவரோடு அன்புறவில் வாழவுமே நாம் உருவாக்கப்பட்டோம். உங்களுடைய தாயின் கருவில் நீங்கள் உருவான நாள் முதல் அவர் உங்களையும் உங்களைப்பற்றிய அனைத்து காரியங்களையும் அறிந்திருக்கிறார். உங்கள் தலை முடிகளின் எண்ணிக்கை கூட அவருக்கு தெரியும் என வேதாகமம் கூறுகிறது. அகில உலகத்தையும் படைத்த சர்வ வல்லமையுள்ள இறைவன் ஒரு தனி மனிதரான உங்கள் வாழ்வில் இத்தனை அக்கறை உள்ளவராக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?
Read More …