அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 26.10.2017

“ஒருவருக்கொருவர் விரோதமாகப் முறையிடாதிருங்கள் …”

வேதப்பகுதி: யாக்கோபு 5: 9

ஒரு இயற்கையான பதில்

ஒருவர் பாதிக்கப்பட்டால் அவருடைய இயற்கையான பதில் முணுமுணுப்பாகத்தான் இருக்கும். ஆனால் யாக்கோபு இதை எதிர்த்து எச்சரித்தார்.

“சகோதரரே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள்; இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார். “ யாக்கோபு 5: 9

1. “ஒருவருக்கொருவர் முறுமுறுக்க வேண்டாம்”

அ) இது யாக்கோபு 3 ஆம் அதிகாரத்தில் கற்பித்தவையோடு ஒத்த கருத்து,

ஆ) முறுமுறுப்பு நாவினால் பாவம் செய்ய வழிவகுக்கும்.

இ) ” முறுமுறுப்பு ” என்ற வார்த்தை பின்வரும் நுணுக்கங்களைக் கொண்டுள்ளது:

a) முணுமுணுத்தல்

b) புலம்புல்

c) புகார்

2. “சகோதரர்கள்”

அ) யாக்கோபு தன்னுடைய வாசகர்களை “சகோதரர்கள்” என்று சொல்லுவதின் அர்த்தம் என்ன என்பதை நினைவில் வையுங்கள் என்று கூறுகிறார்.

ஆ) கர்த்தருக்குள் “சகோதரர்களாக” இருப்பதைப் பற்றி அதிகம் சொல்லப்பட்டிருக்கிறது.

a) நாம் ஆன்மீக குடும்பமாக இருக்க வேண்டும்.

b) ஒருவருக்கொருவர் கிறிஸ்துவுக்குள்ள சகோதர சகோதரிகளாக நாம் கருதுகிறோம்.

3. “நீ நியாயம் தீர்க்காதே”

அ) ஐஸ்வரியவான் நியாயம் தீர்க்கப்படுவான்.

a) ஏழைகளை கொடுமைப்படுத்துவதற்காக.

b) அவர்களின் ஊழியர்களை ஏமாற்றுவதற்காக.

c) அவர்களது சகோதரர்கள் மீது அக்கரை இல்லாமல் இருப்பதற்காக.

ஆ) ஆனால் ஏழைகளும் நியாயம் தீர்க்கப்படலாம்.

a) செல்வந்தர்களுக்கு எதிராக அவர்கள் நாக்கை துஷ்பிரயோகம் செய்வதினால்,

b) முதலாளிகளுக்கு எதிராக மோசமான சொற்கள் பயன்படுத்துவது.

c) செல்வந்தர்களுக்கு எதிரான தவறான மற்றும் எல்லா சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகவும் நியாயம் தீர்க்கப்படலாம்.

4. “இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார்”

அ) இதை புரிந்து கொள்ள விசுவாசம் தேவை.

ஆ) இதற்கு பொருமையும் முதிர்சியும் உள்ள நம்பிக்கை இருந்தால்தான் அவருடைய தெய்வீக நியாயதீர்ப்பை நம்ப முடியும்.

அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 25.10.2017

“நீடிய பொறுமையாயிருங்கள்…”

வேதப்பகுதி: யாக்கோபு 5: 7

கஷ்டத்தில் இருப்பவருக்கு ஒரு வார்த்தை

பொல்லாத செல்வந்தர்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு யாக்கோபு ஆறுதலான வார்த்தை ஒன்றை இங்கு தருகிறார்.

“இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான். நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்;கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே.” யாக்கோபு 5: 7-8

1. “பொறுமையாக இருங்கள்”

அ) இரண்டு முறை இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது.

ஆ) இது நிச்சயமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான சொல்.

இ) இது கவனிக்க வேண்டிய ஒரு ஞானமான சொல்லும் கூட.

2. “கர்த்தருடைய வருகை”

அ) யாக்கோபு இங்கு மீண்டும் நினைவூட்டுகின்றார்.

ஆ) கர்த்தருடைய வருகைக்கு காத்திருக்க இரண்டு நினைவூட்டல்களை வைக்கிறார்.

3. ஒரு விவசாயி பற்றிய விளக்கம்

அ) பாதிக்கப்பட்டவர்கள் ஒருவேளை விவசாயிகளாக இருந்திருக்கலாம்.

ஆ) எனவே இந்த உவமையை அவர்கள் மறக்க முடியாது.

இ) விவசாயிகள் எப்பொழுதும் இரண்டு மழைக்காக காத்திருந்தனர்.

a) முன்மாரி (அக்டோபர்-நவம்பர்)
தரையை மென்மையாக்கவும் நடவு செய்யவும் இந்த மழைக்காக.

b) பின்மாரி (மார்ச்-ஏப்ரல்)
பயிரை விளைய செய்ய இந்த மழைக்காக.

4. மறைந்திருக்கும் ஆபத்துக்கள்

அ) ஆனால் காத்திருக்காமல் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளுதல்.

ஆ) தாங்களே பணக்கார நிலப்பிரபுக்களுடன் போராட்டத்தில் ஈடுபடுவது.

இ) போராட்டத்தில், சிலர் தீவிரமாக காயப்படுத்தப்படலாம் அல்லது கொல்லப்படலாம்.

ஈ) இவை அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டும்!

5. “உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்”

அ) கர்த்தர் நியாயத்தைக் காப்பார் என்று உறுதியாக நம்பி.

ஆ) ஏழைகளுக்கு இவ்வளவு துன்பம் விளைவிக்கும் பொல்லாத பணக்காரர்களை அவர் நியாயந்தீர்ப்பார் என்று விசுவாசித்து.

இதயத்தில் தேவன் மீது விசுவாசம், நம்பிக்கை கொண்டு உறுதியாக இருக்க வேண்டும்!

அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 24.10.2017

வேலைக்காரரின் கூக்குரல் …”

வேதப்பகுதி: யாக்கோபு 5: 4

ஊழல் ஐஸ்வரியவான்கள் சுட்டிக்காட்டப்படுதல்.

இந்த சிக்கலைப் பற்றி ஆழமாக ஆராய்வதற்கு யாக்கோபு ஐஸ்வரியவான்களுக்கு எதிராக இன்னும் கடுமையாக எழுதியுள்ளார்!

“இதோ, உங்கள் வயல்களை அறுத்த வேலைக்காரருடைய கூலி உங்களால் அநியாயமாய்ப் பிடிக்கப்பட்டுக் கூக்குரலிடுகிறது; அறுத்தவர்களுடைய, கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளில் பட்டது. பூமியிலே நீங்கள் சம்பிரமமாய் வாழ்ந்து, சுகபோகத்தில் உழன்றீர்கள்; கொழுத்தவைகளை அடிக்கும் நாளில் நடக்கிறதுபோல உங்கள் இருதயங்களைப் போஷித்தீர்கள். நீதிமானை நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்துக் கொலைசெய்தீர்கள்; அவன் உங்களோடே எதிர்த்து நிற்கவில்லை.” யாக்கோபு 5: 4 – 6

1. ஊழல் நிறைந்த செல்வந்தர்களின் பொல்லாத பழக்கவழக்கங்கள் சிறப்பித்துக் சொல்லப்படுகிறது.

அ) அவர்களால் பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்களின் ஊதியம் மோசடி மூலம் திருப்பி எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஆ) வேலைக்காரர்கள் (பணக்கார உரிமையாளர்களுக்காக வேலை செய்தவர்கள்) தங்கள் வேதனையில் தேவனிடம் கூச்சலிட்டனர்.

இ) சட்டத்தை தவறாக பயன்படுத்துவதில் அவர்கள் குற்றவாளிகள்.

a) அவர்களின் சம்பளத்தை மீட்க சட்டபூர்வமான வழிமுறையை விரும்பியவர்களை அவர்கள் கண்டனம் செய்கிறார்கள்.

b) அவர்கள் நியாயமானவர்களை கொலை செய்வதற்கு கூட தேடுவார்கள்.

c) ஊழல் நிறைந்த செல்வந்தர்களை எதிர்த்து போரிட எந்தவொரு சக்தியும் இல்லை.

2. பணக்காரர்களின் வாழ்க்கை முறை

அ) அவர்கள் சுகபோகத்தில் வாழ்ந்தனர்.

ஆ) தங்களது தொழிலாளர்கள் தப்பிப்பிழைக்க போதுமானது இல்லாதபோது இவர்கள் ஆடம்பரமாக வாழ்ந்தார்கள்.

3. “ஓய்வுநாளின் ஆண்டவர் “

அ) இந்த சொற்றொடரை மொழிபெயர்ப்பதற்கான மற்றொரு வழி “சேனைகளின் கர்த்தர்”.

ஆ) பழைய ஏற்பாட்டில் தேவனின் பெயர் தலைப்புகளில் இதுவும் ஒன்றாகும்.

இ) தேவதூதர்கள் பலத்த சேனையை வழிநடத்தும் கர்த்தரை விவரிப்பதற்காக இந்த பெயர் பயன்படுத்தப்பட்டது.

ஈ) “சேனைகளின் கர்த்தர்” தேவனுடைய மகத்துவத்தையும் வல்லமையும் விவரிக்கின்றது.

4. சேனைகளின் கர்த்தருக்கு பயப்படும் பயம்

அ) அவரரிடத்தில் மிகுந்த பயபக்தியில் இருக்க வேண்டும்.

ஆ) அவரிடத்தில் பயத்தோடு இருக்க வேண்டும்.

இ) ஊழல் நிறைந்த செல்வந்தரை அவர் வந்து நியாயம் தீர்ப்பார்.

ஈ) அவர் கீழே தள்ளப்பட்டவர்களின் நீதிக்கு ஆதரவளிப்பார்.

உ) ஊழல் நிறைந்த செல்வந்தர்களை அவர் தண்டிப்பார்.

அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 23.10.2017

” உங்கள் ஐசுவரியம் அழிந்து, உங்கள் வஸ்திரங்கள் பொட்டரித்துப்போயின…”

வேதப்பகுதி: யாக்கோபு 5: 2

ஒரு வலுவான வார்த்தை

யாக்கோபு தன்னுடைய வார்த்தைகளில் இனிப்பு சேர்த்துக்கொள்பவர் அல்ல. அவர் தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட பிரச்சினைகளை பேசும்போது மிகவும் நேரடியாகவும் வெளிப்படையாகவுமே இருந்தார்.

“ஐசுவரியவான்களே, கேளுங்கள், உங்கள்மேல் வரும் நிர்ப்பந்தங்களினிமித்தம் அலறி அழுங்கள். உங்கள் ஐசுவரியம் அழிந்து, உங்கள் வஸ்திரங்கள் பொட்டரித்துப்போயின. உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்தது; அவைகளிலுள்ள துரு உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருந்து, அக்கினியைப்போல உங்கள் மாம்சத்தைத் தின்னும். கடைசி நாட்களிலே பொக்கிஷத்தைச் சேர்த்தீர்கள். ” யாக்கோபு 5: 1-3

1. “ஐசுவரியவான்களே, வாருங்கள்,

அ) இந்த முறையில் செல்வந்தர்களோடு உரையாடுவதற்கு தைரியம் கொண்டவர்கள் குறைவே.

ஆ) செல்வந்தர்களை எச்சரிக்கும்படி இந்த உறுதியான வார்த்தைகளை யாக்கோபு தைரியமாக எழுதினார்.

2. பணக்காரராக இருப்பது என்பது இங்கு ஒரு பிரச்சனை இல்லை

அ) செல்வத்தை அவர்கள் எப்படி குவித்தார்கள் என்பதுதான் பிரச்சனை.

ஆ) ஊழல் என்னும் பிரச்சினைதான் இங்கு வேர்.

3. செல்வத்தின் அம்சங்கள்

அ) ” உங்கள் வஸ்திரங்கள் பொட்டரித்துப்போயின ”

a) ஏழைகளுக்கு இந்தச் சிக்கல் இல்லை, ஏனென்றால் அவர்கள் பல துணிகளை சொந்தமாக்கவில்லை.

b) செல்வந்தர்கள் பல துணிகளைக் கொண்டுள்ளனர், அவைகள் அதிகமாக பயன்படுத்தப்படுவதில்லை, அதனால்தான் பொட்டரித்துப்போயின.

ஆ) “உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்தது”

a) இவை உண்மையான தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள்தான்.

b) செல்வம் மிக அதிகமாக இருந்தது, அவைகள் பயன்பாட்டில் இல்லாததினால் அவைகள் துருப்பிடித்திருந்தது.

4. தீர்ப்பு பற்றிய எச்சரிக்கை

அ) அவர்கள் “கட்டாயமாக” தண்டிக்கப்படுவார்கள்.

ஆ) ஊழல் நிறைந்த செல்வம் தெய்வீக தீர்ப்புக்கு தப்பாது.

5. செல்வந்தர்களுக்கு எதிராக சாட்சிகள்

அ) பொட்டரித்த துணிகள் அவர்களுக்கு எதிராக சாட்சி கூறுகின்றன.

ஆ) துருப்பிடித்த தங்கம் மற்றும் வெள்ளி அவர்களுக்கு எதிராக சாட்சியளிக்கும்.

6. “கடைசி நாட்களிலே பொக்கிஷத்தைச் சேர்த்தீர்கள்”

“கடைசி நாட்கள்” என்பது ஆண்டவராகிய இயேசு திரும்பும் “கடைசி நாட்களை” விவரிக்க பயன்படுத்தப்படுகிறது. ஊழல் நிறைந்த செல்வந்தர்கள் கடைசி நாட்களைப் பற்றி எந்த கவலையும்படவில்லை, அவர்கள் தங்கள் செல்வத்தை சேமித்து வைத்த விதத்தில் நியாயந்தீர்க்கப்படுவார்கள்.

அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 22.10.2017

” ஆண்டவருக்குச் சித்தமானால்…”

வேதப்பகுதி: யாக்கோபு 4:15

நம்முடைய எல்லா திட்டத்திலும் தேவனை இணைத்துக்கொள்ளுதல்.

பொதுவாக மக்கள் துன்ப துயர காலங்களில் தேவனிடம் திரும்பி வருவதைப் பார்க்கலாம். தங்கள் வியாபார திட்டங்களில் தேவனை சேர்த்துக்கொள்ளுவதை காணுவது மிகவும் அரிது! ஆனால் இதுதான் யாக்கோபின் முக்கியமான பரிந்துரை.

“ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும். இப்பொழுது உங்கள் வீம்புகளில் மேன்மைபாராட்டுகிறீர்கள்; இப்படிப்பட்ட மேன்மைபாராட்டல் யாவும் பொல்லாங்காயிருக்கிறது. ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.” யாக்கோபு 4: 15-17

1. “ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் “

அ) கர்த்தராகிய தேவன் எல்லாவற்றிலும் அங்கிகரிக்கப்பட வேண்டும்.

ஆ) அவரே ஜீவன் கொடுப்பவர்.

இ) வாழ்க்கையில் தேவனுடைய பங்கைக் குறித்த இந்த தாழ்மையான அங்கிகர்ப்புடன் அனைத்து திட்டங்களும் செய்யப்பட வேண்டும்.

2. ” இப்பொழுது உங்கள் வீம்புகளில் மேன்மைபாராட்டுகிறீர்கள் “

அ) இதுதான் யாக்கோபு சுட்டிக்காட்ட விரும்பிய அடிப்படை பிரச்சனை.

ஆ) அடிப்படை பிரச்சனையில் இரண்டு கூறுகள் இருந்தன:

a) வீம்பு

b) அகந்தை

இ) இவைகள் “தற்பெருமையுள்ளவனை” ஒருவனை குறிக்கின்றது

3. ” இப்படிப்பட்ட மேன்மைபாராட்டல் யாவும் பொல்லாங்காயிருக்கிறது.”

அ) “மேன்மைபாராட்டல்” என்ற வார்த்தை எளிமையாக சொல்வோமானால் அது “தற்பெருமை” ஆகும்.

ஆ) “வெற்றிபெற்ற ஒருவன்” தான் எப்படி செல்வந்தன் ஆனேன் என்று பெருமிதம் கொள்கிறான்.

இ) இதில் எந்த விதத்திலும் தேவனை குறித்த வார்த்தை இல்லை.

ஈ) இந்த வகையான மேன்மைபாராட்டல் பொல்லாங்கானது.

உ) துரதிர்ஷ்டவசமாக, மேன்மைபாராட்டிக்கொள்வது பொல்லாங்கானது என்று சிலருக்குத் தெரியும்.

4. ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.

அ) யார் ஒருவருக்கு நன்மை தீமை பற்றி அறிவுறுத்தப்படுகிறதோ.

ஆ) அவர் தம் வாழ்க்கையில் செய்ய வேண்டிய நன்மைகளை அவர் அறிந்திருக்கிறார்.

இ) எனினும், அவர் செய்யவேண்டிய நன்மையானதை செய்ய தவறுகிறார்.

ஈ) நன்மை செய்வதை புறக்கணிப்பது உண்மையில் “பாவம்!”