அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 31.10.2017

உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு “

வேதப்பகுதி: யாக்கோபு 5:16

மீறுதல்களை அறிக்கையிடுதல்

மீறுதல்கள் இருக்கும்போது நாம் எங்கு சென்று எதை செய்ய வேண்டும்? என்பதைப்பற்றி யாக்கோபு மிகவும் தெளிவாக இருந்தார். பின்வரும் பகுதி இதை மிகவும் தெளிவாக விளக்குகிறது.

“நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.” யாக்கோபு 5:16

1. “உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு”

அ) “ஒப்புக்கொள்ளுதல்”

a) முழு மனசாட்சி இங்கே கருத்தில் கொள்ளப்படுகிறது.

b) நேர்மையாகவும் வெளிப்படையாகவும்.

ஆ) “மீறுதல்கள்”

a) இங்கே பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான வார்த்தை “பாவம்”.

b) பாவம் எங்கே இருக்கின்றதோ, அது ஒப்புக்கொள்ளப்பட வேண்டும்.

இ) “ஒருவருக்கொருவர்”

a) இது ஆசாரியனிடத்தில் மட்டுமல்ல.

b) ஆனால் ஒருவருக்கொருவர்.

2. “நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு,ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள்”

அ) இந்த சூழலில் ஒருவருக்கொருவர் ஜெபியுங்கள் என்பது மற்றவரிடம் மன்னிப்பை தேடுவதும், கொடுப்பதும்.

ஆ) ஒருவர் இன்னொருவருக்கு விரோதமாக பாவம் செய்திருந்தால் அதற்கு மன்னிப்பு தேடுவது ஞானமுள்ள செயல்.

இ) குணப்படுதல் இங்கு உண்டாக வாய்ப்பு இருக்கின்றது.

ஈ) குணப்படுத்துதல் நடக்குமா அல்லது நடக்காதா என்பது மற்ற காரணிகளைப் பொறுத்துதான் இருக்குமே தவிற ஜெபத்தை வைத்து அல்ல.

3. “நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.”

அ) “நீதிமான்”

a) இது ஒரு முக்கியமான குறிப்பு.

b) இது வெறும் ஜெபம் அல்ல, ஆனால் நீதியுள்ள மனிதனுடைய ஜெபம்.

ஆ) நீதிமான் எப்படி ஜெபிக்கிறார்?

a) அவர் வல்லமை மற்றும் அதிகாரத்துடன் ஜெபிக்கிறார் (நேரடி மொழிபெயர்ப்பு).

b) வல்லமையுடன் ஜெபிப்பது எப்படி என்பதை புரிந்துகொள்ள உதவுவதற்காக “ஊக்கமுள்ள” வார்த்தை சேர்க்கப்பட்டது.

c) எந்தவொரு சந்தர்ப்பத்திலும், இது ஒரு தாழ்மையான வேண்டுகோளாக இருக்க வேண்டும். (எல்லா ஜெபங்களும் தேவனுக்கு கீழ்ப்படிந்தவை அல்ல).

அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 30.10.2017

“அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்…”

வேதப்பகுதி: யாக்கோபு 5:15

ஜெபத்திற்கான இடம்

ஜெபத்தைக் குறித்து தெளிவாக இருக்கும்படி யாக்கோபு தனது வாசகர்களை ஊக்கப்படுத்தினார். ஆயினும், ஜெபமென்பது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக இருக்கும் காரியம் என்று அர்த்தமில்லை.

“அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.” யாக்கோபு 5:15

1. “விசுவாசமுள்ள ஜெபமும்”

அ) யாக்கோபு தவிர்க்கமுடியாத ஒன்றை இங்கு வெளிப்படுத்துகிறார்.

ஆ) எல்லா ஜெபங்களும் விசுவாசத்தோடு இணைந்திருக்க வேண்டும் (யாக்கோபு 1: 6).

2. “பிணியாளியை இரட்சிக்கும்”

அ) விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை காப்பாற்ற முடியுமா?

ஆம் சந்தேகத்திற்கு இடமில்லாமல்!

ஆ) பிணியாளிகளை காப்பாற்ற ஒரே வழி ஜெபம் தானா?

இல்லை! யாக்கோபு நோயுற்றவர்களைக் காப்பாற்ற ஒரே வழி ஜெபம் என்று யாக்கோபு கற்றுக்கொடுக்கவில்லை!

3. “கர்த்தர் அவனை எழுப்புவார்”

அ) கர்த்தர் இங்கு செயல்படுகிறார் ஏனெனில் அவருடைய பெயர் சம்பந்தப்பட்டிருப்பதால்.

ஆ) கர்த்தருடைய நாமத்தினால் எண்ணைய் பூசப்பட வேண்டும்.

இ) நோயுற்றவர்களை கர்த்தர் எழுப்ப முடியுமா?

இது பற்றி எந்த சந்தேகமும் இல்லைதான்!

ஈ) ஆனால் நோயாளிகளை எழுப்புவது என்பது அவருடைய சித்தத்திற்குட்பட்டதாக இருக்கின்றது

ஆனால் இதற்கான பதில் அனேக நேரங்களில் “இல்லை!” என்பதே!

a) பவுல் பல பலவீனங்களோடிருந்தார்.

b) அவர் குணபடுத்தப்படும்படி வைத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது.

c) தேவனுடய கிருபையை சார்ந்துகொள்ள அவர் வலியுறுத்தப்பட்டார்.

d) மற்றவர்களைக் குணமாக்கிய பவுல் மாம்சத்திலிருந்த தனது சொந்த முள்ளில் இருந்து காப்பாற்றப்படவில்லை.

e) ஞானமுள்ள அப்போஸ்தலனாகிய பவுல் தேவனுடைய சித்தத்திலும் அவருடைய கிருபையிலும் மகிழ்ச்சியடைவதைத் தேர்ந்தெடுத்தார் (2 கொரிந்தியர் 12: 9-10).

4. “அவன் பாவஞ்செய்தவனானால்”

அ) நோய் எப்போதும் பாவம் தொடர்பானதுதான் என்று யாக்கோபு இங்கு கருத்து சொல்லவில்லை.

ஆ) எனினும், பாவங்கள் செய்திருந்தால், அவைகள் ஒப்புக்கொண்டு அறிக்கை செய்யப்பட வேண்டும்.

5. “அது அவனுக்கு மன்னிக்கப்படும்”

தேவனிடமிருந்து மன்னிப்பு என்பது தாராளமாக கிடைக்கும ஒன்றே! கர்த்தராகிய இயேசு ஒரு முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்டவனை எவ்வாறு குணப்படுத்தினார் என்பதை நாம் நினைவுகூருவோம். பாவம் என்னும் பிரச்சனையைத்தான் முதலில் அடையாளம் காட்டினார். பின்புதான் அவர் மன்னிப்பை வழங்கி முடக்குவாதத்தில் இருந்து அந்த மனிதனை சுகப்படுத்தினார் (மாற்கு 2: 1-12).

அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 29.10.2017

” உங்களில் ஒருவன் துன்பப்பட்டால்?”

வேதப்பகுதி: யாக்கோபு 5:13

ஜெபிக்க அழைப்பு

யாக்கோபு இப்போது தனது கவனத்தைத் ஜெபத்திற்கு திருப்புகிறார். இந்த பகுதியை பற்றிய தவறான புரிதலைத் தவிர்ப்பதற்கு,கவனமான ஆய்வு முக்கியம்.

“உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன்; ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால் சங்கீதம் பாடக்கடவன். உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள்.” யாக்கோபு 5: 13-14

1. “உங்களில் ஒருவன் துன்பப்பட்டால்?”

அ) “துன்பம்” என்ற வார்த்தை எந்த வகையான துன்பத்தையும் விவரிக்க பயன்படுத்தப்படலாம் (நோய் அல்லது கடினமான எந்த நிலையும்).

ஆ) துன்பங்கள் மனிதர்கள் வாழ்வில் எதிர்பார்க்க வேண்டிய ஒரு பிரச்சினைதான்.

2. “ஜெபம்பண்ணக்கடவன்”

அ) இப்படி சொல்வதினால் அவர் மற்ற காரியங்களை செய்யாமல் இருக்கவும், முயற்சிகாமல் இருக்கவும் என்று அர்த்தம் அல்ல.

ஆ) அவர் துன்பப்படுகையில் ஜெபத்தில் தேவனைத் தேடாமல் இருந்துவிடக்கூடது.

3. “ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால்”

அ) மகிழ்ச்சியாக இருப்பது ஒரு ஆசீர்வாதம்.

ஆ) தேவனுக்கு நன்றி செலுத்துவது இயற்கையானதுதான் (சங்கீதம் 103).

4. “சங்கீதம் பாடக்கடவன்”

அ) இது யாக்கோபின் ஆலோசனை.

ஆ) சங்கீதம் பாடுவது ஒரு நல்ல வெளிப்பாடுதான்.

5. ” உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால்”

அ) வியாதி யாருக்கும் வரக்கூடும்.

ஆ) மூப்பர்களை வரவழைக்க வேண்டும்.

a) இது “மருத்துவத்திற்கு” மாற்று என்று கருதிவிடக் கூடாது.

b) பொருத்தமான சிகிச்சை பெறுவது அந்த நபரின் பொறுப்பாகும்.

இந்த கடினமான பகுதியை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்

அ) யாக்கோபு 5:14ஐ முதல் நூற்றாண்டின் சூழலில் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

ஆ) குணப்படுத்துவதற்கான சிறப்பு வரம் கொடுக்கப்பட்ட அப்போஸ்தலர்களும் மற்ற தலைவர்களும் இருந்தார்கள்.

இ) அந்த நாட்களில் யாக்கோபு எழுதியதை நடைமுறையில் செய்வது அசாதாரணமானது அல்ல.

ஈ) ஆயினும், நோயாளிகளை குணப்படுத்துவதற்கான ஒரு மருத்துவ வழியாக புரிந்து கொள்ளப்பட இது எழுதப்படவில்லை.

அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 28.10.2017

“சத்தியம்பண்ணாதிருங்கள்…”

வேதப்பகுதி: யாக்கோபு 5:12

மற்றொரு பிரச்சனையை அடையாளம் காணுதல்.

இங்கு யாக்கோபு மற்றொரு பிரச்சனையைத் தொடர்ந்து பேசுகிறார். சிலர் சத்தியம் செய்வதை எளிதாக செய்துவிடுகிறார்கள்.

“விசேஷமாய், என் சகோதரரே, வானத்தின்பேரிலாவது, பூமியின்பேரிலாவது, வேறெந்த ஆணையினாலாவது சத்தியம்பண்ணாதிருங்கள்; நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லக்கடவீர்கள்.” யாக்கோபு 5:12

1. ” விசேஷமாய், என் சகோதரரே, சத்தியம்பண்ணாதிருங்கள் “

அ) “சத்தியம்” என்ற வார்த்தையை உபயோகிப்பது பற்றி இல்லை.

ஆ) இங்கே உள்ள சூழல் சத்தியம்பண்ணுதல் என்பதுதான்.

2. ஆம் அல்லது இல்லை

அ) கர்த்தராகிய இயேசு இந்த விஷயத்தில் கற்பித்ததை யாக்கோபு நினைவுகூர்கிறார் (மத்தேயு 5: 33-37).

ஆ) சத்தியம்பண்ணுதலின் நடைமுறைகள்:

a) வானத்தின்பேரில் சத்தியம்பண்ணுதல்

b) பூமியின்பேரில் சத்தியம்பண்ணுதல்

c) எருசலேமின்பேரில் சத்தியம்பண்ணுதல்

d) ஒருவரின் தலையின்பேரில் சத்தியம்பண்ணுதல்

இ) இது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாட்களில் பொதுவான நடைமுறையாக இருந்தது.

3. வலுவான ஆலோசனை

அ) சத்தியம் பண்ண வேண்டாம்.

ஆ) ஒரு சத்தியத்தை செயல்படுத்தமுடியாத ஆபத்து மிகவும் உண்மையானது (பிரசங்கி 5: 1-7).

4. சத்தியம் செய்வது என்னவென்று புரிந்து இருப்பது அவசியம்.

அ) கர்த்தருடைய பரிசுத்த பெயர் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது.

ஆ) அப்படி செய்வதினால் நாம் கீழ்காணும் ஆபத்தில் இருப்போம்:

a) தேவனுடைய பெயரை அற்பமாகக் கருதிவிடுவோம்.

b) அவரது பெயரை வீணாக எடுத்துக் கொள்ளுவோம்.

c) செய்யும் சத்தியத்தை செய்ய தவறிவிடுவோம்.

5. “நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு “

அ) நாம் அவருடைய பெயரை வீணாக எடுத்துக்கொள்வதால், தேவனிடமிருந்து நியாயத்தீர்ப்பு இருக்கும்.

ஆ) தேவனுடைய பெயரால் செய்யப்பட்ட உறுதிமொழியை நாம் நிறைவேற்றாவிட்டால் நியாயத்தீர்ப்பும் இருக்கும்.

அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 27.10.2017

“துன்பப்படுதலுக்கும் நீடிய பொறுமைக்கும் திருஷ்டாந்தமாக.”

வேதப்பகுதி: யாக்கோபு 5:10

ஒரு தூண்டுதல்

தூண்டுதல் ஆத்துமாவுக்கு எப்போதும் உற்சாகம் தருகிறதாயிருக்கிறது! துன்பங்கள் அடிக்கடி ஒரு பெரும் இடத்தை வாழ்க்கையில் எடுத்துக்கொள்ளும், இதனால்தான் தூண்டுதல் தேவையான புத்துணர்ச்சியை அளிக்கிறது.

“என் சகோதரரே, கர்த்தருடைய நாமத்தினாலே பேசின தீர்க்கதரிசிகளைத் துன்பப்படுதலுக்கும் நீடிய பொறுமைக்கும் திருஷ்டாந்தமாக வைத்துக்கொள்ளுங்கள். இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே.” யாக்கோபு 5: 10-11

1. ஒரு தீர்க்கதரிசியின் உதாரணம்

அ) யாக்கோபு, தனிப்பட்ட முறையில் தீர்க்கதரிசிகளிடமிருந்து தூண்டுதலை பெற்றிருக்க வேண்டும்.

ஆ) தீர்க்கதரிசிகள் முக்கியமாக கர்த்தருடைய நாமத்தில் பேசியவர்கள் என குறிப்பிடப்பட்டனர்.

2. துன்பப்படுதல் மற்றும் பொறுமைக்கான உதாரணம்

அ) “துன்பம்”

a) அவர்கள் கர்த்தருக்காக பாடுபட்டார்கள்.

b) குறிப்பாக கர்த்தருடைய தீர்ப்பு பற்றி பிரசங்கித்தபோது அவர்களது செய்திகளை ஏற்றுக்கொள்ளவில்லை.

c) எரேமியா தீர்க்கதரிசி சிறைதண்டனையும் பெரும் விரோதத்தையும் அனுபவித்தார்.

ஆ) “பொறுமை”

a) கர்த்தருடைய உண்மையான தீர்க்கதரிசிகள் உண்மையுடன் கர்த்தருடைய வார்த்தையை முடிவுவரை பிரசங்கித்தார்கள்.

b) அவர்கள் அடிக்கடி தவறாக நடத்தப்பட்டாலும், அவர்கள் மக்களுக்கு கற்பிக்க முயன்றார்கள்.

c) கர்த்தருக்காக வாழ விரும்பும் அனைவருக்கும் அவர்களின் வாழ்வு ஒரு தூண்டுதலாக இருந்தது.

3. “பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே “

அ) “சகிப்பது” “பொறுமையாக இருப்பது” போன்றே அவசியமானது.

ஆ) இந்த இரு வார்த்தைகள் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன.

4. யோபுவின் உதாரணம்

அ) அவர் மிகவும் துன்பத்தை அடைந்தார்.

ஆ) தேவனுடைய கருனையும் இரக்கத்தையும் அவர் அனுபவித்தார்.

இ) இறுதி முடிவை தெரிந்துகொள்ளும்போது அது நமக்கு தூண்டுதலாயிருக்கிறது.

ஈ) யோபு துன்பத்தினால் இழந்த அனைத்தையும் தேவன் மீட்டு கொடுத்தார் (யோபு 42: 12-17).

உ) அவர் தனது குழந்தைகளின் நான்கு தலைமுறைகளைக் காணும் முதிர் வயதில் மரித்தார்.