அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 25.09.2017.

” நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் கிரியைகளினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்?”

வேதப்பகுதி: யாக்கோபு 2:21

ஆபிரகாமின் உதாரணம்

எல்லா யூதர்களாலும் ஆபிரகாம் உயர்வாக மதிக்கப்படுகிறார் என்று யாக்கோபு அறிந்திருந்தார். அவர் இஸ்ரேல் நாட்டின் தந்தையாக கருதப்பட்டார். எனவே யாக்கோபு ஆபிரகாமை மேற்கோள் காட்டினார்.

“நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் செலுத்தினபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்?
யாக்கோபு 2:21

1. நீதிமானாக்கபடுதலுக்கான சத்தியம்

அ) விசுவாசத்தின் விளைவாகத்தான் ஒருவர் தேவனால் நீதிமானாக்கபடுகிறார் என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார். (ரோமர் 5: 1).

ஆ) “அவனுடைய விசுவாசமே ஆபிரகாமுக்கு நீதியாக எண்ணப்பட்டது” என்று மேலும் கூறிகிறார். (ரோமர் 4: 9).

2. யாக்கோபின் போதனை

பவுல் கற்பித்த போதனைகளுக்கு சற்று முரண்படுவதாகவே தெரிகிறது.

யாக்கோபு என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்துகொள்ளுதல்

உண்மையான விசுவாசம் கிரியைகளை விளைவிப்பதாக யாக்கோபு வாதிடுகிறார்! மேலே உள்ள வசனத்தை விசுவாசத்தைப் பற்றி அவர் என்ன சொன்னார் என்பதைப் நிதானித்து புரிந்துகொள்ள வேண்டும்.

1. நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் கிரியைகளினால் நீதிமானாக்கப்படவில்லையா?

அ) மிக சிறப்பாக அறியவேண்டியது என்னவெனில் யாக்கோபு பேசும் விசுவாசம் என்பது நிச்சயம் கிரியையை வெளிப்படுத்தும்.

ஆ) கிரியையினால் நீதிமானக்கப்படுதலை அவர் எப்படி கொண்டுவருகிறார் என்பதை நாம் அவருடைய கருத்தை உள்ளார்ந்து நோக்கினால் புரிந்துகொள்ளலாம்:

a) ஆபிரகாம் அவனுடைய விசுவாசத்தால் நீதிமானக்கப்பட்டான்.

“அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார் “
ஆதியாகமம் 15: 6

b) ஆனால் அவனுடைய விசுவாசம் உண்மையானதாக இருந்தது, ஏனென்றால் அது கிரியைகளில் வெளிப்பட்டது.

இ)ஆகவே இப்படி சொல்லுவதே சரியாக இருக்கும்,

” நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் விசுவாசத்தின் கிரியையினால் அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்”.

2. ” தன் குமாரனாகிய ஈசாக்கை பலிபீடத்தின்மேல் ஒப்புக்கொடுத்தபோது”

அ) ஆபிரகாம் கர்த்தரில் நம்பிக்கை வைத்திருந்தான்.

ஆ) எனவே தேவனுக்கு முன்பாக “நீதிமானாக எண்ணப்பட்டான்.

a) நீதி அவனுடைய கணக்கில் கொடுக்கப்பட்டது.

b) அவனுடைய விசுவாசத்தின் காரணமாகவே தேவன் அவனை நீதிமானாக அறிவித்தார்.

இ) அவனுக்கு பிள்ளை இல்லாதபோதே அவன் கர்த்தரிடத்தில் விசுவாசம் வைத்திருந்தான்.

ஈ) பல வருடங்கள் கழித்துதான் கர்த்தர் அவனுக்கு ஈசாக்கு என்று பெயருடைய ஒரு குமாரனை கொடுத்தார்.

உ) ஆபிரகாம் தேவனால் சோதிக்கப்பட்டபோது அவனுடைய விசுவாசம் உண்மையாகவும் வலுவாகவும் இருந்தது, அதினால்தான் ஈசாக்கை பலியாக செலுத்த முடிந்தது.

ஊ) இதுவே செயல்படும் விசுவாசம்! இதுவே கிரியை மூலம் வெளிப்படும் விசுவாசம்!

அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 24.09.2017.

“கிரியை இல்லாத விசுவாசம் செத்ததா?”

வேதப்பகுதி: யாக்கோபு 2:20

அறிவீனமான யோசனைகளின் விளைவு

தவறான கருத்துகளுக்கு எதிரான போராட்டம் கடினமானதாக இருக்கும் என்று யாக்கோபு நன்றாகவே அறிந்திருந்தார். ஆகவே, அவர் ஏன் கிரியை இல்லாத விசுவாசம் முட்டாள்தனமான சிந்தனையாக இருக்கின்றது என்பதை இன்னும் ஆழமாக விளக்க முற்படுகிறார்.

தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன. வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ? யாக்கோபு 2: 19-20

1. “தேவன் ஒருவர் உண்டென்று நீங்கள் விசுவாசிக்கின்றீர்கள்”

அ) தவறான கருத்தை உடையவர்களின் அடிப்படை வாதம் இதுதான்.

அவர்கள் ஒரே தேவனைத்தான் விசுவாசித்தார்கள்!

ஆ) இது “மெய்யான விசுவாசத்தை” கொண்டிருப்பதற்கு போதுமானதாக கருதப்பட்டது.

2. “அப்படிச் செய்கிறது நல்லதுதான்”

அ) யாக்கோபு இப்படி சொல்லுவதில் அவர்களை கேளி செய்வதாகவும் போல் இருக்கிறது.

ஆ) ஆனால் அவர் இந்த அறிக்கையின் உண்மைதன்மையை கேள்வி கேட்கவில்லை.

இ) இந்த சாதாரணமான அறிவிப்பு ஒருவருக்கு “உண்மையான விசுவாசம்” இருக்கிறது என்பதை நிரூபிக்க போதுமானதாக இல்லை என்பதே அவர் கருத்து.

3. ” பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன “

அ) இயேசுவானவர் பிசாசுகளை துரத்திய நேரங்களில் யாக்கோபு கவனித்திருக்கிறார்.

ஆ) பிசாசுகளின் பதில் பொதுவானதாக இருந்தது.

இயேசு தேவனுடைய குமாரனென்று அவைகள் அறிந்திருந்தன.

இயேசுவிடம் இருந்த அதிகாரத்தையும் வல்லமையையும் அவைகள் விசுவாசித்தன (லூக்கா 6:41).

இ) அவைகள் கர்த்தருக்கு முன்பாக நடுங்கினது.

ஈ) அவைகள் “விசுவாசித்தன” – அவைகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் முன் “நடுங்கி” இருந்தன.

உ) தவறான கருத்துக்களை கொண்டவர்களோடு ஒப்பிடும்போது பிசாசுகளே “மேல்” அல்லவா?

4. “வீணான மனுஷனே, நீ அறியவேண்டுமோ?”

அ) யாக்கோபு அப்படிபட்டவர்களைப் பார்த்து கேட்கிறார்!

ஆ) அவர்கள் சத்தியத்தை அறிய விரும்பவில்லையா?

இ) அவரால் தவறான கண்ணோட்டத்தை கொண்டிருப்பவர்களின் முட்டாள்தனத்தை குறித்து புலம்புவதை தவிற ஒன்றும் செய்ய முடியவில்லை.

5. “கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று “

அ) மீண்டும் ஒருமுறை யாக்கோபு “கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று” என்று உறுதியாக கூறுகிறார்.

ஆ) உண்மையில்லாத கருத்துக்கள் அகற்றப்பட்டு சத்தியம் அங்கிகரிக்கப்பட வேண்டும்.

அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 23.09.2017.

“உனக்கு விசுவாசமுண்டு, எனக்குக் கிரியைகளுண்டு.”

வேதப்பகுதி: யாக்கோபு 2:18

தொடர்ச்சியாக விடப்படும் சவால்

விசுவாசத்தை கிரியைகளில் வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று வாதிடுவோர் சிலர் இருந்தார்கள் என்று யாக்கோபு அறிந்திருந்தார். இதற்கு அவர் ஒரு பதிலை வைத்திருந்தார்.

ஒருவன்: உனக்கு விசுவாசமுண்டு, எனக்குக் கிரியைகளுண்டு; கிரியைகளில்லாமல் உன் விசுவாசத்தை எனக்குக்காண்பி, நான் என் விசுவாசத்தை என் கிரியைகளினாலே உனக்குக் காண்பிப்பேன் என்பானே.
யாக்கோபு 2:18

1. “ஆனால் ஒருசிலர் சொல்லுவார்கள்”

அ) “உண்மையான விசுவாசம்” என்பது என்ன என்பதைப் பற்றிய போதனையை ஏற்றுக்கொள்ளாத சிலரை யாக்கோபு நன்கு அறிந்திருந்தார்.

a) “உண்மையான விசுவாசம்” இயற்கையாகவே கிரியைகளில் வெளிப்படும் என்று யாக்கோபு வாதிட்டார்.

b) கிரியை இல்லாத விசுவாசம் “செத்த விசுவாசமே” தவிர வேறு ஒன்றும் இல்லை என்று தெளிவாக அறிவித்தார்.

ஆ) இந்த சத்தியத்தை ஒத்துக்கொள்ளாதவர்களின் வாதம் இப்படித்தான் இருக்கிறது.

a) விசுவாசம் என்பது “எண்ணம் மாத்திரமே”, அதை கிரியைகளில் வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை.

b) கிரியைகள் வெறும் கற்பனை மாத்திரமே. யாக்கோபு வாதிடுதுபோல், விசுவாசத்திற்கும் கிரியைக்கும் எந்த சம்பந்தமும்மில்லை.

2. “கிரியையில்லாமல் உங்கள் விசுவாசத்தை எனக்குக் காட்டுங்கள்”

அ) அப்படிப்பட்டவர்களை யாக்கோபு கிரியையில்லாமல் தங்கள் விசுவாசத்தை “காட்டும்படி” கேட்கிறார்.

ஆ) “காட்டு” என்ற சொல் பின்வருவனவற்றை உள்ளடக்கியது:

a) நிரூபித்தல்,

b) வெளிப்படுத்துதல்.

இ) இந்த நிலையை கொண்டிருக்கும் நபர் தனது கருத்தை நிருபிக்க கடுமையான வலிமையான சான்றுடன் வரவேண்டும். அது வேதத்தின்படி இருக்கவேண்டும்.

ஈ) இப்படிப்பட்ட வாதத்தை அவர்களால் நிரூபிக்கமுடியாது என்று யாக்கோபு நன்றாக அறிந்திருந்தார்.

3. ” நான் என் விசுவாசத்தை என் கிரியைகளினாலே உனக்குக் காண்பிப்பேன் “

அ) யாக்கோபு கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்காத காலம் ஒன்று இருந்தது.

ஆ) அந்த காலத்தில் அவர் சந்தேகம் கொண்டவராகவும் ஆண்டவரை விமர்சிக்கிறவராகவும் இருந்தார் (யோவான் 7: 3-5).

இ) பிறகு யாக்கோபு கர்த்தராகிய இயேசுவை விசுவாசித்து எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டார்.

ஈ) அவர் “உண்மையான விசுவாசத்தின்” ஒரு விளக்கத்தை மட்டுமல்ல, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையின் மூலம் அதற்கான ஆதாரத்தையும் கொடுக்கத் தயாராக இருந்தார்.

a) அவர் திருச்சபைக்காக குறிப்படதக்க பங்களிப்பை கொடுத்தார் (அப்போஸ்தலர் 15: 13-21).

b) யாக்கோபு தேவனுடைய வார்த்தையை போதிக்கும் ஒரு ஆசிரியராகவும் புதிய ஏற்பாட்டிற்காக தனது பங்கை (யாக்கோபு நிருபம்) அளிப்பவராகவும் மாறி இருந்தார்.

அனுதின ஆவிக்குரிய ஆகாரம். 22.09.2017.

“அதினால் பிரயோஜனம் என்ன?”

வேதப்பகுதி: யாக்கோபு 2:16

ஒரு நடைமுறை உதாரணம்.

உண்மையான விசுவாசத்தின் வெளிப்பாடாக கிரியைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்கு யாக்கோபு ஒரு நடைமுறையான உதாரணத்தை அளித்தார்.

ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்களென்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன? அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும். யாக்கோபு 2: 15-17

1. ” ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது,

அ) இது ஒரு கற்பனையான சூழ்நிலை.

ஆ) இது ஒரு உதாரணத்திற்காக காட்டப்படுவதாகும்.

2. ” உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்களென்று சொல்லியும்,

அ) இது வாய் வார்த்தை மாத்திரமே.

a) இது கவர்ச்சியானா மற்றும் கண்ணியமான வார்த்தைகள்தான்.

b) ஏழை நபர் இந்த வார்த்தைகளில் மிகவும் அக்கரையாக விசாரிக்கபடுவதாகக் கூட தெரியலாம்.

c) மிகவும் பட்சமாக பேசுவதாக கூட உணரப்படலாம்.

ஆ) ஆனால் இப்படி செய்கின்றவரை விசுவாசம் இருப்பதாக சொல்லிக்கொள்ளும் ஒருவருடன் ஒப்பிடுகிறார்.

3. “சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன?”

அ) எந்த சரீர பிரகாரமான பொருளும் ஏழைகளுக்கு வழங்காமல்.

ஆ) நல்வாழ்த்துக்கள் மாத்திரம் அவர்களை நன்றாக இருக்க வைக்குமா?

இ) கனிவான வார்த்தைகளை மாத்திரம் பசியாயிருக்கும் ஏழைகளுக்கு திருப்தியை அளித்துவிடுமா?

ஈ) சரியான கேள்வி இங்கு எழுப்பப்படுகிறது: “பிரயோஜனமென்ன?”

4. “அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்”

அ) கிரியையெல்லாம் தேவையில்லை விசுவாசம் மட்டும் இருந்தால் போதும் என்று சிலர் வாதிட்டிருக்கலாம்

ஆ) யாக்கோபு இதற்கு பலமாக உடன்படவில்லை.

a) வார்த்தையில் மாத்திரம் இருக்கும் விசுவாசத்திற்கு மதிப்பு மிகவும் குறைவு!

b) கிரியை இல்லாத விசுவாசம் ஒரு செத்ததே!

c) செத்த விசுவாசத்திற்கு என்று எந்த சிறப்பம்சமும் இல்லை.

d) உண்மையான விசுவாசம் நற்கிரியைகளில் இயற்கையாகவே வெளிப்படுகிறது.

அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 21.09.2017.

“என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும்…”

வேதப்பகுதி: யாக்கோபு 2:14

உண்மையான விசுவாசம்

ஒருவருடைய விசுவாசம் உண்மையானது என்பதை நிரூபிப்பது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் யாக்கோபு இந்த சிரமத்திற்காக தயங்கவில்லை.

என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா? யாக்கோபு 2:14

1. “என் சகோதரரே, பிரயோஜனமென்ன”

அ) யாக்கோபு இந்த விவகாரத்தை நட்பு ரீதியிலேயே அணுகுகிறார்.

ஆ) அவர் தனது வாசகர்களை “என் சகோதரர்கள்” என்று அழைக்கிறார்.

இ) இங்கு அவர் முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்புகிறார்- “உங்களுக்கு பிரயோஜனம் என்ன?”

2. “விசுவாசம் உண்டென்று” என்று சொல்லுவது

அ) ஒருவர் விசுவாசம் இருப்பதாக வாய்மொழியாக சொல்லலாம்.

ஆ) இன்னொருவர் தனக்கு விசுவாசம் இருப்பதாக உணருவதை குறித்து பேசலாம்.

இ) மூன்றாவதாக ஒருவர் தனக்கு இருக்கும் விசுவாசத்தை குறித்த நிச்சயத்தை உடையவராக பேசலாம்.

ஈ) நாங்காவதாக தனக்கு விசுவாசத்தின் அனுபவம் இருப்பதாக கூட சொல்லலாம்.

இதுபோன்ற கூற்றுகளுக்கு வரையரை கிடையாது இதனோடே மேலும் பலவற்றை சேர்க்கலாம்!

3. “ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் “

அ) இது நிபந்தனையுள்ள வாக்கியம்.

ஆ) இது இரண்டு பாகங்களை கொண்ட வாக்கியம்.
ஒருவர் தனக்கு விசுவாசம் உண்டென்று சொல்லுகிறார்.

ஆனால் அவருடைய வாழ்க்கை விசுவாசத்தின் கிரியையை வெளிப்படுத்தவில்லை.

இ) இந்த நிபந்தனை வாக்கியம் உண்மையான விசுவாசத்தை உடையவராக கூறிக்கொள்ளும் நபரைப் பற்றி தீவிரமான சந்தேகங்களை எழுப்புகிறது.

4. அந்த விசுவாசம் அவரை இரட்சிக்குமா?

அ) யாக்கோபு “விசுவாசம்” இருக்கின்றதா எனக் கேட்கவில்லை.

ஆ) உண்மையான விசுவாசத்திலிருந்து வெளிப்படும் எந்த கிரியையும் இல்லாத நபரின் விசுவாசத்தைத்தான் அவர் கேள்விக்குட்படுத்துகிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் போதனை:

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கற்பித்ததை நினைவுகொள்வோம். மத்தேயு கவனமாக இந்த போதனை பதிவு செய்திருக்கிறார். விசுவாசம் உண்டென்று வார்த்தையில் சொல்லுவதினல் மாத்திரம் ஒருவர் தானாக பரலோக இராஜ்ஜியத்தில் பிரவேசிக்க தகுதியானவராக்கி விடாது.

பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. மத்தேயு 7:21