அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 30.09.2017.

“நாம் அனைவரும் அனேக விஷயங்களில் தவறுகிறோம் …”

வேதப்பகுதி: யாக்கோபு 3: 2

வாழ்க்கையின் தடுமாற்றங்கள்

வாழ்க்கையின் சில கட்டங்களில் அனைவருக்கும் இடறல் ஏற்படும் என்று யாக்கோபு தாழ்மையுடன் ஒப்புக்கொள்கிறார். அப்போஸ்தலர்கள் கூட தங்கள் வாழ்க்கையில் தடுமாறினர். இது வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத உண்மை!

“நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷனும், தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக்கூடியவனுமாயிருக்கிறான்.. “ யாக்கோபு 3: 2

1. ” நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம் “

அ) “தவறுகிறோம்” என்ற வார்த்தை பல அர்த்தத்தை கொண்டுள்ளது.

a) வீழ்தல்

b) பாவம் செய்தல்

ஆ) “நாம் எல்லோரும்” என்ற வார்த்தை கீழ்கண்டவர்களை உள்ளடக்கியது:

a) அப்போஸ்தலர்கள்

b) போதகர்கள்

c) விசுவாசிகள்

இ) இந்த உண்மையை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

a) மனத்தாழ்மையாக

b) வெளிப்படையாக

2. ” ஒருவன் சொல்தவறாதவனானால் “

அ) ஒருசிலர் தாங்கள் தவறவேவில்லை என்று சொல்லிக்கொள்ளலாம் (1 யோவான் 1: 8, 10)

ஆ) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மட்டுமே அப்படி “தவறாதவர்” என்று விவரிக்கப்பட முடியும்.

3. ” அவன் பூரணபுருஷனும் “

அ) பாவமற்ற ஒரு மனிதன் என்று யாக்கோபு விவரிக்கவில்லை.

ஆ) அவர் “முழுமையாக ஆவிக்குரிய முதிர்ச்சியை பெற்ற ஒருவர்” என்றே குறிப்பிடுகிறார்.

இ) தவறாத ஒருவரே “பரிபூரண மனிதர்” ஆவார்.

ஈ) ஆனால் அப்படி ஒருவர் இல்லை என்பதுதான் உண்மை!

4. “தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக்கூடியவனுமாயிருக்கிறான்”

அ) குதிரையை கட்டுப்படுத்த பயன்படுவதைத்தான் “கடிவாளம்” என்று சொல்லப்படுகிறது(சங்கீதம் 32:9).

ஆ) முழு சரீரத்தையும் கட்டுப்படுத்துவது கடினம்தான்.

இ) இந்த உலகத்தில் தவறாமல் இருப்பது கடினமான ஒன்றுதான்! அதை ஒத்துக்கொள்ளும் தாழ்மை இருக்கும்போது, நாம் தேவ பெலத்தை சார்ந்து வெற்றியை நோக்கிப் பயணிக்க முடியும்.

அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 29.09.2017.

” உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக. …”

வேதப்பகுதி: யாக்கோபு 3: 1

ஒரு ஞானமுள்ள அறிவுரை

அப்போஸ்தலனாகிய யாக்கோபுக்கு அளவில்லாத ஞானம் இருந்தது. பல ஆண்டுகள் ஆண்டவருக்கு சேவை செய்யும் அனுபவத்தின் வாயிலாக ஓரளவுக்கு ஞானத்தை அவர் பெற்றிருப்பார். ஊழியத்தின் பல சவால்கள் “போதிக்கும்” துறையில்தான் இருக்கிறது.

“என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக.” யாக்கோபு 3: 1

1. “என் சகோதரரே”

அ) இது உறவுக்கான வார்த்தை

ஆ) கொடுக்கப்பட்ட ஆலோசனை நட்புரீதியானது ஆனால் வெளிப்படையானது.

2. “உங்களில் அநேகர் போதகராக வேண்டாம்”

அ) இந்த சூழலில் “போதகர்” என்ற சொல் பள்ளி ஆசிரியருக்கான ஒரு குறிப்பு அல்ல.

ஆ) இது “போதகர்-ஆசிரியர்” (எபேசியர் 4:11) என்ற ஊழியத்தின் குறிப்பு ஆகும்.

a) தேவனுடைய வார்த்தையை போதிப்பதற்கான ஊழியம் இது.

b) இது பிரசங்க ஊழியத்தையும் உட்படுத்துகிறது.

3. போதகராக இருக்க ஆசைபடுதல்

அ) சிலருக்கு ஊழியம் என்பது “கவர்ச்சியாக” தோன்றியது.

a) கிறிஸ்துவ சமூகத்தில் இதற்கென்று தனிப்பட்ட “தகுதி” இருக்கின்றது.

b) இதற்கென “அதிகாரமும்” மற்றும் “வல்லமை” இருக்கின்றது.

ஆ) ஆவிக்குரிய இலக்குகளை வைத்திருப்பது ஒன்றும் தவறு அல்ல.

இ) இருப்பினும், தேவனுடைய வார்த்தையை போதிக்கும் ஆசிரியரின் வேலைக்கான எதிர்பார்ப்புகளையும் பொறுப்புகளையும் பற்றி அறிந்த ஒருவராக இருத்தல் அவசியம்.

4. ” அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து “

அ) மக்களுக்கு தேவனுடைய வார்த்தையை போதிப்பவரிடம் “உயர்ந்த எதிர்பார்ப்புகள்” இருக்கிறது.

ஆ) போதகர்கள் “கடுமையான தீர்ப்பை” அடைவார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

a) மற்றவர்கள் வாழ்க்கையிலும் ஊழியத்திலும் தோல்வி அடைந்தாலும் அவர்கள் எல்லோராரும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்.

b) ஆனால் தேவனுடைய வார்த்தையை போதிக்கும் ஆசிரியரால் எதிர்பாப்பை பூர்த்திசெய்யமுடியாமல் போனால், அவர்கள் மீது அதிக அனுதாபம் இருக்காது.

சொந்த அனுபவத்திலிருந்து…

தேவனுடைய வார்த்தையை போதிக்கும் போதகர்களிடத்தில் மக்களின் எதிர்பார்ப்புகள் பல. அவற்றில் இங்கே ஒரு சிறிய பட்டியல்:

1. தேவனுடைய வார்த்தையைப் பற்றிய மிகுதியான அறிவை அவரிடத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

2. அவர் சிறந்த ஆவிக்குரியவராக எதிர்பார்க்கப்படுகிறார்.

3. அவர் எப்பொழுதும் பலமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்!

அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 28.09.2017.

“கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது…”

வேதப்பகுதி: யாக்கோபு 2:26

தவறான போதனைகளுக்கு எதிரான போராட்டம்

அப்போஸ்தலனாகிய யாக்கோபு தவறான போதனைகளுக்கு எதிர்த்து நின்றார். தவறான போதனைகள் புதிய ஏற்பாட்டு திருச்சபைகளுக்கு மிகுந்த சவாலாக இருந்தது!

தவறான போதனைகளை எதிர்க்க போராட்டம் தேவை.

தவறான போதனைகள் மிகவும் மோசமானது. தவறான போதனைகளின் விளைவுகள் கவனிக்கப்பட வேண்டும்: –

1. இதனால் மக்கள் ஏமாற்றப்பட்டுவிடுகிறார்கள்.

2. இதினால் அவர்கள் பின்மாற்றத்திற்கு வழிநடத்தப்படுகிறார்கள்.

3. விசுவாசத்தை குறித்து தவறான புரிதல் இருக்கும்போது பின்வரும் விளைவுகளை ஏற்பட்டுவிடும்:

அ) அவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமானக்கப்படுகிறதில்லை.

ஆ) அவர்கள் இரட்சிக்கப்படமுடியாது.

இ) அவர்களுடைய தவறான விசுவாசத்தை தங்கள் வாழ்க்கையிலும் ஊழியத்திலும் அவர்களால் பயன்படுத்த முடியாது.

ஈ) அவர்கள் பிரயோஜனமில்லாத “செத்த விசுவாசத்தோடே” வாழ்க்கையை கடந்து போய்விடுவார்கள்.

உ) அவைகளினால் அடுத்தவர்களும் மோசமாக பாதிக்கப்படலாம்.

இதனால்தான், விசுவாசத்தை குறித்த தவறான புரிந்துணர்வு பிரச்சனைக்குத் தீர்வு காண நேரம் எடுத்துக்கொண்டது யாக்கோபு அவர்களுக்கு சரியானதாகவே இருந்தது! தவறான போதனை பற்றிய பிரச்சனையை கையாள்வதில் நல்ல விடாமுயற்சியையும், திறனையும் காட்டினார்

ஒரு இறுதி அறிக்கை

உண்மையான விசுவாசத்தைப் பற்றிய இறுதி அறிக்கையைத் கொடுக்க வேண்டிய அவசியத்தினை யாக்கோபு உணர்ந்திருந்தார்.

அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது. யாக்கோபு 2:26

1. இருக்கூறுகள்

அ) யாக்கோபு இருக்கூறு கோட்பாட்டை நம்பினார்.

ஆ) ஒரு மனிதன் இரண்டு பகுதிகளால் உண்டாக்கப்படுகிறான்:

a) சரீரம்

b) ஆவி

இ) ஆவி இல்லாமல் சரீரம் செத்துவிட்டது!

2. “அதுபோலவே கிரியையில்லாத விசுவாசம் செத்ததாயிருக்கிறது”

அ) இருக்கூறுகள் யோசனை இங்கு பயன்படுத்தப்படுகிறது.

ஆ) இருக்கூறுகளும் கவனிக்கப்படுகிறது: –

a) விசுவாசமும் இருக்கவேண்டும்.

b) கிரியைகளும் இருக்க வேண்டும்.

விசுவாசம் ஒருபோதும் தனியாக இருக்காது! கிரியை இல்லாவிட்டால், “விசுவாசம் செத்துவிட்டது” என்பது உண்மையே!

அனுதின ஆவிக்குரிய ஆகாரம். 27.09.2017.

“ராகாப் என்னும் வேசி …”

வேதப்பகுதி: யாக்கோபு 2:25

ஒரு சுவாரசியமான உதாரணம்

“உண்மையான விசுவாசத்தை” விளக்க அனேகரை தெரிந்தெடுத்திருக்கலாம், ஆனால் யாக்கோபு தன் செயல்களால் அவளது விசுவாசத்தை நிரூபித்தவளாகிய ராகாப் என்னும் வேசியை இங்கு தெரிவு செய்தது சுவாரசியமாகதான் இருக்கிறது.

அந்தப்படி ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாய் அனுப்பிவிட்டபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்?
யாக்கோபு 2:25

1. “ராகாப் என்னும் வேசி”

அ) இது இஸ்ரவேலர் யோசுவாவின் தலமையில் கானான் தேசத்தை சுதந்தரித்த காலத்தைக் குறிக்கின்றது.

ஆ) ராகாபின் சம்பவத்தை யோசுவா 2 ல் காணலாம்.

2. “அந்தப்படி”

அ) ஆபிரகாம் உறுதியான விசுவாசமுள்ளவனாக இருந்தான்; அவன் தேவனுடைய வாத்தைக்கு கீழ்ப்படிந்து தனது குமாரனை பலியிட ஒப்புகொடுத்தபோது இது நிரூபிக்கப்பட்டது.

ஆ) ராகாபும் விசுவாசம் கொண்டிருந்தாள், அதை இஸ்ரவேலராகிய இரண்டு வேவுகாரர்கள் கானானிலிருந்து தப்பிப்போக உதவி செய்தபோது நிரூபிக்கப்பட்டது.

3. “கிரியையினால் நீதிமானாக்கப்படாள்”

அ) ராகாப் முதலில் தேவனிடத்தில் மறைமுகமாக விசுவாசம் கொண்டிருந்தாள் என்பதே உண்மை.

ஆ) இந்த விசுவாசம் அவளிடத்தில் கீழ்காணும் விதத்தில் இருக்கவில்லை

a) கொள்கை ரீதியில்.

b) அனுதின மத சடங்காச்சார கடைப்பிடித்தலில்.

இ) அவரது விசுவாசம் அவரது கிரியைகளால் நிரூபிக்கப்பட்டது.

a) தன் ஜீவன் ஆபத்தில் இருந்தாலும் இஸ்ரவேலிலிருந்து வந்த வேவுகாரர்களை மறைத்தாள்.

b) இஸ்ரவேலராகிய வேவுகாரர்கள் தப்பிக்க உதவினதற்காக அவர் தூக்கிலிடப்பட்டிருக்கலாம்.

4. ராகாப் தேவனை எப்படி விசுவாசித்தாள்?

அ) தேவன் தம் மக்களாகிய இஸ்ரவேலருக்கு செய்ததைப் பற்றி அவள் கேள்விபட்டிருந்தாள் (யோசுவா 2: 9-13).

ஆ) கானான் இஸ்ரவேலரால் பிடிக்கப்படும் என்று அவளுக்குத் தெரியும் (யோசுவா 2: 9).

இ) அவள் யெகோவா தேவனைப் பற்றிய அறிவை வெளிப்படுத்தினாள் (யோசுவா 2: 9-11).

ஈ) அவளும் அவளுடைய குடும்பமும் மரணத்திலிருந்து காப்பாற்றப்படவேண்டும் என்று வேண்டிக்கொண்டாள் (யோசுவா 2: 12-13).

விசுவாசமும் கிரியையும்

இங்கு யாக்கோபு அவர்களின் வாதம் என்னவெனில், ராகாப் தேவனைப் பற்றிய அறிவும் விசுவாசம் மாத்திரம் கொண்டிருந்து, அதை செயலில் காட்டாமல் இருந்திருந்தால், அவள் நீதிமானாக்கப்பட்டிருக்கமாட்டாள். அவளும் அவளுடைய குடும்பமும் எரிகோவுக்கு எதிரான போரில் கொல்லப்பட்டிருப்பார்கள்!

“கிரியைகளுக்கு” அதிக முக்கியத்துவம் கொடுத்து பேசுவதினால் “விசுவாசம்” குறைவான முக்கியத்துவம் வாய்ந்தது என்று அர்த்தமல்ல! விசுவாசமே தேவனிடமிருந்து நீதியை கொண்டுவருகிறது! ஆனால் அது உண்மையான விசுவாசமாக இருக்கும்போது மட்டுமே! உண்மையான விசுவாசம் இயல்பாகவே கிரியைகளில் வெளிப்படும்! இதுவே யாக்கோபு நிறுவ முயன்ற உண்மை!

அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 26.09.2017.

“விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சிசெய்து…”

வேதப்பகுதி: யாக்கோபு 2:22

தேவையான விளக்கம்.

யாக்கோபு தேவையான விளக்கத்தை பின்வரும் பகுதியில் கொடுக்கின்றார்.

“விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சிசெய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே. அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று; அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான். ஆதலால், மனுஷன் விசுவாசத்திலேமாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே. “ யாக்கோபு 2: 22-24

1. ” விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சிசெய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே.”

அ) இதுதான் யாக்கோபின் வலியுறுத்தலாக இருக்கின்றது.

ஆ) உண்மையான விசுவாசம் எப்பொழுதும் கிரியைகளோடு சேர்ந்து இருக்கும்.

இ) ஆபிரகாமின் விசுவாசம் கர்த்தர்மீது விசுவாசம் வைத்திருப்பதன் பிரகடனம் மட்டும் அல்ல.

ஈ) அவனது விசுவாசம் அவனுடைய கிரியைகளோடு சேர்ந்து செயல்பட்டது.

2. “கிரியைகளினாலே விசுவாசம் பரிபூரணப்படுகிறது”

அ) விசுவாசம் வெறுமையில் இருப்பது இல்லை.

ஆ) உண்மையான விசுவாசம் செயல்களில் வெளிப்படும்.

இ) கிரியைகள் பின்வருமாறு புரிந்து கொள்ளப்படலாம்:

a) கிரியைகள் விசுவாசத்திற்கு உதவுகிறது.

b) விசுவாசம் கிரியைகளால் முழுமையாக்கபடுகிறது.

3. “வேதவாக்கியம் நிறைவேறிற்று”

அ) முதலில் ஆபிரகாம் கர்த்தர் மீது நம்பிக்கை வைத்திருந்தார்.

ஆ) பலிபீடத்தின்மீது ஈசாக்கை பலியாக படைத்த செயல் அவனுடைய விசுவாசத்தின் விளைவாக வந்ததே .

4. “அவன் தேவனுடைய நண்பன் என்று அழைக்கப்பட்டான்”

அ) தேவன் மீது இருந்த உண்மையான விசுவாசம் ஆபிரகாமுக்கு தேவனையே ஒரு நண்பனாக அடைய வைத்தது.

ஆ) இந்த விசுவாசமே கிரியைகளை விளைவித்தது.

5. ஆதலால், மனுஷன் விசுவாசத்திலேமாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே

அ) யாக்கோபு தனக்குதானே முரண்பட்டு பேசவில்லை.

ஆ) அவர் முன்னரே கூறியதையே இங்கு வலியுறுத்திக் காட்டுகிறார்.

இ) விசுவாசமும் கிரியைகளும் ஒன்றுக்கொன்று உதவுகிறது. விசுவாசம் கிரியைகளை விளைவிக்கும். கிரியைகள் விசுவாசத்தை பூரணப்படுத்தும்.