அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 31.08.2017.

இரு மனமுள்ளவன் …”

வேதப்பகுதி: யாக்கோபு 1: 8

ஒரு உறுதியான வார்த்தை

அப்போஸ்தலனாகிய யாக்கோபு எழுதும் விதத்தில் மிகவும் வெளிப்படையாக இருந்தார். மிகவும் எளிமையான வார்த்தைகள் மூலம் இந்த விவாதத்தை விரைவாக முடிவுக்கு கொண்டு வந்தார்.

அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக. இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான். யாக்கோபு 1: 7-8 Read More …

அனுதின ஆவிக்குரிய ஆகாரம். 30.08.2017.

“ஆனால் அவன் விசுவாசத்தோடே கேட்ககடவன்…”

வேதப்பகுதி: யாக்கோபு 1: 6

விசுவாசத்திற்கான இடம்.

அப்போஸ்தலனாகிய யாக்கோபு விசுவாசத்திற்கு உயர்வான மதிப்பை கொடுத்து அதை சரியான இடத்தில் வைக்கிறார். பலமுறை கர்த்தராகிய இயேசுவும் தம்முடைய சீஷர்களிடமிருந்து விசுவாசத்தை எதிர்பார்க்கிறார் (மத்தேயு 8:26, மாற்கு 4:40). வாழ்க்கை மற்றும் ஊழியத்தில் விசுவாசம் தேவையானதாக இருக்கின்றது. தேவனிடம் ஜெபம் செய்கிறபோதும் விசுவாசம் நிச்சயம் தேவைப்படுகிறது. Read More …

பாடம் 5 பாவத்தின் சம்பளம் குழப்பம்

உலகத்தின் பெரு வெள்ள அழிவிற்கு பின், நோவாவின் குடும்பம் மற்றும் அவர்களோடு பாதுகாக்கப்பட்ட  உயிரினங்கள் மாத்திரம் தப்பிப் பிழைத்திருந்தன. இறைவன் நோவா மற்றும் அவரது குடும்பதிடம் “நீங்கள் பலுகி பெருகி பூமியை நிரப்புங்கள்” என கூறினார் (ஆதி. 9:1).  மீண்டும் மக்கள் இப்படிப்பட்ட பெரு வெள்ளம் மூலம் பேரழிவில் அகப்படாமல் இருக்கத்தக்கதாக இறைவன் உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தினார். உடன்படிக்கையின் அடயாளமாக வானவில்லை குறித்தார். மழை வரும் நேரங்களில் தோன்றும் வானவில் மனிதருக்கும் கடவுளுக்கும் மத்தியில் அடையாளச் சின்னமாக இருந்து வெள்ளத்தின் மூலம் மக்கள் மீண்டும் அழிந்துவிடாதபடி ஞாபக குறியாக இருக்கும். Read More …

அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 29.08.2017.

உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால்…”

வேதப்பகுதி: யாக்கோபு 1: 5

ஞானத்தை தேடுதல்

ஞானத்தை வாஞ்சிப்பதற்காக நம்மை உற்சாகப்படுத்தவே நீதிமொழிகளின் புத்தகம் பிரத்தியேகமாய் கொடுக்கப்பட்டிருக்கின்றது. நீதிமொழிகளின் புத்தகத்தில் ஞானத்தை குறித்த விலைமதிப்பில்லா பொக்கிஷங்களை நாம் காணமுடியும்.

வாழ்க்கைக்கு ஞானம் மிகவும் அவசியமானது என்று யாக்கோபு நன்றாக அறிந்திருந்தார். நாம் ஞானத்தை எப்படி தேடிக் கண்டுபிடிப்பது என்பதற்கான சிறந்த நடைமுறைக்கேற்ற ஆலோசனையை அவர் இங்கு தருகின்றார். Read More …

அனுதின ஆவிக்குரிய ஆகாரம். 28.08.2017

நீங்கள் பூரணராயும், நிறையுள்ளவர்களாயும் இருக்கும்படி …”

வேதப்பகுதி: யாக்கோபு 1: 4

மகிமையான  விளைவுகள்

சோதனைகளை சமாளிப்பது சற்று கடினமாக இருக்கலாம். எனினும், நமக்கு வரும் சோதனைகளின் முடிவில் மகிழ்ச்சியான விளைவுகளை  நாம் பெறுவோம்  என்பதை அறிந்தோமானால், அவைகளை சகிப்பதற்கு எளிதாக தோன்றும். Read More …