பாடம் 5 பாவத்தின் சம்பளம் குழப்பம்

குழப்பம்

உலகத்தின் பெரு வெள்ள அழிவிற்கு பின், நோவாவின் குடும்பம் மற்றும் அவர்களோடு பாதுகாக்கப்பட்ட  உயிரினங்கள் மாத்திரம் தப்பி பிழைத்திருந்தது. தேவன் நோவா மற்றும் அவரது குடும்பத்திடம் “நீங்கள் பலுகி பெருகி பூமியை நிரப்புங்கள்” என கூறினார். (ஆதி 9:1).  மீண்டும் மக்கள் இப்படிப்பட்ட பெரு வெள்ளம் மூலம் பேரழிவில் அகப்படாமல் இருக்கத்தக்கதாக தேவன் உடன்படிக்கை ஒன்றை ஏற்ப்படுத்தினார். உடன்படிக்கையின் அடயாளமாக வானவில்லை குறித்தார். மழை வரும் நேரங்களில் தோன்றும் வானவில் மனிதருக்கும் கடவுளுக்கும் மத்தியில் அடையாள சின்னமாக இருந்து வெள்ளத்தின் மூலம் மக்கள் மீண்டும் அழிந்துவிடாதபடி ஞாபக குறியாக இருக்கும். 

தேவன் இரத்தத்தை குறித்து எச்சரித்து, மனிதர் அதை குறித்து கவனமுடன் இருக்கும்படி அறிவுறுத்தினார்

இரத்தம்கவனம்

மாமிசத்தையும் உணவில் சேர்த்துக்கொள்ள அனுமதித்தார். மக்கள் மாமிசம் உண்ணலாம், ஆனால் இரத்தத்தோடு அல்ல. மிருகத்தின் இரத்தம் தரையிலே சிந்தப்பட வேண்டும். மனிதரின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது என தேவன் கூறினார். மனிதரின் இரத்தம் சிந்தப்படலாகாது. மனித இரத்தத்தை சிந்துபவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும். தேவன் இரத்தத்தை குறித்து எச்சரித்து, மனிதர் அதை குறித்து கவனமுடன் இருக்கும்படி அறிவுறுத்தினார்.

தொடர்ந்து பிடிக்கும் பாவம்

பேழையிலிருந்து நிலத்திற்கு வந்த நோவாவின் குடும்பம் தங்களுடைய இயல்பான வாழ்கையை தொடர்ந்தனர். மற்ற உயிர்களும் பலுகி பெருக ஆரம்பித்தன. நோவா திராட்சை பயிரிடுகிறவரானார். ஒரு நாளில் திராட்சை மதுவை குடித்து வெறித்து ஆடை விலகி கூடாரத்தின் நடுவில் விழுந்து கிடந்தார். காம், நோவாவின் ஒரு மகன், தன் தகப்பனின் நிர்வாணத்தை கண்டும், ஏதும் செய்யாமல், தன் சகோதரரிடத்தில் அதைக்குறித்து பரியாசம் செய்த்தான். சேம் மற்றும் யாபேத் எனும் நோவாவின் மற்ற இரு மகன்களும் ஒரு போர்வையை எடுத்து, பின்புரமாக நடந்துவந்து, அவர்களுடைய தகப்பன் நிர்வாணமாக இருப்பதை பார்க்காமல், தகப்பனுடைய மானத்தை மூடினார்கள்.

தன் தகப்பனுடைய நிர்வாணத்தை கண்டும் அதை குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் அதை ஏளனம் செய்த காமின் சந்ததி சபிக்கப்பட்டது. மானத்தை மூடிய சேம் மற்றும் யாபெத் ஆசீர்வதிக்கப்பட்டார்கள்.

எப்போதும் தேவனுடைய சித்தமே நிலை நாட்டப்படும். மனிதரின் பாவம் தேவ சித்தத்தை நிறுத்த முடியாது

பாவ மனிதர்கள் எப்போதும் தேவனுக்கு விரோதமாக கலகம் பண்ணுகிறார்கள்.

வெள்ளத்திற்க்கு பின்பு மனிதர்களின் எண்ணிக்கை பெருக துவங்கியது. அவர்கள் ஒரே மொழி பேசினர். ஒரே பேச்சு வழக்கும் இருந்தது. வெகு சீக்கிரமே பாவத்திற்க்கு வந்த தண்டனையை மக்கள் மறந்தனர். தங்களுக்கென்று ஒரு நகரத்தையும், வானளாவிய கோபுரத்தையும் கட்ட ஆரம்பித்தனர். அவர்கள் அந்த நகரத்தையும் கோபுரத்தையும் கட்டுவதற்கு அவர்களுக்கு இரண்டு முக்கியமான நோக்கங்கள் இருந்தது. முதலாவது அவர்கள் உலகத்தின் பல்வேறு இடங்களுக்கும் பரவி பெருகுவதை விரும்பவில்லை. எனவே தாங்கள் சிதறி போய்விடாமல் இருக்க தங்களுக்கு ஒரு நகரத்தை கட்ட நினைத்தனர். இரண்டாவது தங்களுடைய பெருமையை நிலைநாட்டும் விதமாக வானம் அளவு எட்டும் ஒரு கோபுரத்தையும் கட்ட ஆரம்பித்தனர்.

தேவன் அதை பார்த்து அவர்கள் மொழியை குழப்பினார். ஒருவர் பேசுவது மற்றவருக்கு புரியாத சூழல் ஏற்பட்டது. அங்கே மாபெரும் குழப்பம் நிலவியது.  மக்கள் கட்டடம் கட்டுவதை கைவிட்டுவிட்டு பல்வேறு இடங்களுக்கும் இடம் பெயர்ந்தார்கள்.

தான் படைத்த எதுவுமே பலுகி பெருகும் விதத்திலேயே தேவன் எல்லாவற்றையும் படைத்தார். மனுக்குலமும் அதற்கு அப்பாற்பட்டது அல்ல. “நீங்கள் பலுகி பெருகி பூமியை நிரப்புங்கள்” என்பது தேவன் மனுகுலத்திற்கு கொடுத்த கட்டளைகளில் பிரதானமானது. ஆனால் மனிதர்களோ தாங்கள் எங்கும் பரவி போய்விடமல் இருக்க தங்களுக்கு ஒரு நகரத்தை கட்ட நினைத்தனர். மட்டுமல்லாது வானத்தை எட்டும் உயரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்ட நினைத்தனர். வானம் என்னும் வார்த்தை வேதாகமத்தில் பரவலாக தேவன் வாசம்பண்ணும் இடத்தை குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. வானத்தை எட்டும் உயரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்ட நினைத்தனர் என்றால் தேவனுக்கு நிகராக தங்களை உயர்த்த நினைத்தனர் என்பதே அதின் பொருள். தேவனை புறக்கணித்து தங்களின் பெருமையை நிலை நாட்ட முயன்றனர். ஆனால் உண்மையிலேயே யார் தேவன் என்பதை தங்கள் தோல்வி மூலம் அறிந்துகொண்டனர்.

எப்போதும் தேவனுடைய சித்தமே நிலை நாட்டப்படும். மனிதரின் பாவம் தேவ சித்தத்தை நிறுத்த முடியாது. அனால் இதில் வருத்தப்பட ஒன்றுமே இல்லை. ஏனெனில் தேவனுடைய சித்தம் எப்போதுமே சிறப்பானது.

வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ள தேவன்

ஏதேன் தோட்டத்தில் தேவன் மனிதருக்கு அளித்த வாக்குத்தத்தத்தை மறந்துவிடவில்லை. மக்களை பாவத்தில் இருந்து மீட்பதர்க்காக, எல்லவற்றிற்க்கும் பின்னணியில் அவர் செயல்பட்டுக்கொண்டே இருந்தார். தேவன் தன்னுடைய திட்டத்தை செயல்படுத்த சேமின் வழித்தோன்றல்களை கிருபையாய் தெரிந்தெடுத்தார்.

வேதாகமத்தின் தேவன் நல்லவரும் வாக்குத்தத்தத்தில் உண்மை உள்ளவருமாய் இருக்கிறார்.

முடிவுகள்

நாம் பலுகி பெருகுவதை தேவன் விரும்புகிறார்.

இரத்ததிற்க்கு தேவன் அதிக முக்கியதுவம் கொடுத்தார்.

பாவ மனிதர்கள் சீக்கிரமே தேவனை மறந்து, உலகத்தை நேசிக்கிறார்கள்.

தேவனுடைய சித்தத்தை தடுக்கும் சக்தி யாருக்கும்/எதற்க்கும் இல்லை.

 

<<பாடம் 4                                               பாடம் 6 >>

mm

Author: Immanuel Jeswyn

இம்மானுவேல் ஜெஸ்வின் அவர்கள் கடந்த பத்து ஆண்டுகளாக தேவனுடைய பணியை செய்து வருகிறார். வேதாகம கல்வியில் முது நிலை பட்டம் பெற்றிருக்கும் இவர் தற்போது திருநெல்வேலி பட்டினத்தில் தேவனுடைய கிருபையின் சத்தியத்திற்க்காக வைராக்கியம் கொள்ளும் ஒரு வேதாகம திருச்சபையை நிறுவும் விருப்பத்தோடு செயல்பட்டு வருகிறார். இவருக்கு, மனைவி வசந்தி பெனிட்டா, மற்றும் இரண்டு மகன்களும் உண்டு.

mm

Written by 

இம்மானுவேல் ஜெஸ்வின் அவர்கள் கடந்த பத்து ஆண்டுகளாக தேவனுடைய பணியை செய்து வருகிறார். வேதாகம கல்வியில் முது நிலை பட்டம் பெற்றிருக்கும் இவர் தற்போது திருநெல்வேலி பட்டினத்தில் தேவனுடைய கிருபையின் சத்தியத்திற்க்காக வைராக்கியம் கொள்ளும் ஒரு வேதாகம திருச்சபையை நிறுவும் விருப்பத்தோடு செயல்பட்டு வருகிறார். இவருக்கு, மனைவி வசந்தி பெனிட்டா, மற்றும் இரண்டு மகன்களும் உண்டு.

2 thoughts on “பாடம் 5 பாவத்தின் சம்பளம் குழப்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *