பாடம் 3 பாவத்தின் சம்பளம் கொலை

பாவத்தின் சம்பளம் கொலை

ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியே அனுப்பி விடப்பட்ட ஆதாமும் ஏவாளும் தோட்டத்துக்கு வெளியே தங்கள் வாழ்க்கையை தொடர்ந்தனர். ஆனால் தோட்டத்துக்கு வெளியே ஆதாம் மற்றும் ஏவாளின் வாழ்க்கை இலகுவாக இல்லை. ஏதேன் தோட்டத்தில் அனைத்தையும் திருப்தியாக பெற்றிருந்து, மன விருப்பத்தோடு தோட்டத்தை பேணிக்கொண்டிருந்த ஆதாமுக்கு, நிர்பந்தத்தின் அடிப்படையில் வேலை செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்தால் மட்டுமே வயிற்றை நிரப்பமுடியும் என்கிற நிலை. அப்படியே உழைத்தாலும் மனம் ஈடுகொடுக்க மறுத்தது. நிலத்தில் வேறு முட்களும் விரும்பத்தகாத செடிகளும் முளைத்து உழைப்பை இன்னும் கடினமாக்கியது. 

ஆதாமுக்கு இந்த பிரச்சனை என்றால் ஏவாளுக்கு வேறு பிரச்சனை. ஆதாமோடு சேர்ந்ததின் விழைவாக குழந்தைகளை பெற ஆரம்பித்தாள். அவர்களைப்போன்றே குட்டியாக இருக்கும் குழந்தைகளை பார்ப்பதற்க்கு அவளுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. ஆனால் அந்த குழந்தைகளை பெற்று எடுப்பதற்க்குள் அவள் படும் பாடும் வலியும் இருகிறதே! சொல்லி மாளாது.  இந்த ஆதாம் வேறு முன்பு இருந்ததுபோல இல்லை. எல்லாம் அவன் விருப்பப்படியே நடக்கவேண்டும் என நினைத்தான். ஏவாளுக்கோ எல்லாம் அவள் விருப்பப்படி நடக்கவேண்டும் என ஆசை. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதங்களும் சண்டை சச்சரவுகளும் உண்டாயின. வெகு சீக்கிரமே ஏதேன் தோட்டத்துக்கு வெளியே அவர்களுக்கு வாழ்க்கை வெறுப்பாக இருந்தது.

மீட்பரை குறித்த எதிர்பார்ப்பு

 இந்த சூழ் நிலையில்தான் பெண்ணிடத்தில் இருந்த பிறக்கப்போகும் ஒரு ஆண் மூலமாக, இன்று அவர்கள் சிக்கியிருக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணமான பாவத்திலிருந்து, அவர்களுக்கு விடுதலை அளிப்பதாக தேவன் அவர்களுக்கு கொடுத்திருந்த வாக்குத்தத்தத்தை நினைவுகூர்ந்தார்கள். அவர்கள் முதன் முதலாக ஒரு ஆண் மகனை பெற்றபோது, இந்த ஆண் மகன் தங்களை பாவத்திலிருந்து மீட்கப்போகிறான் என்று எண்ணி, கர்த்தரால் ஒரு மனிதனை பெற்றேன் என்று சொல்லி மகிழ்ந்தார்கள். தேவன் வாக்களித்த மீட்பர் காயீனாக இருக்கலாம் என ஆதி பெற்றோர் எண்ணினார்கள். அவர்களுக்கு ஆபேல் என்று வேறொரு ஆண் மகனும் பிறந்தான்.

ஆபேல் தேவனுடைய வார்த்தையை நம்பி அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தேவனுக்கு காணிக்கை செலுத்தினான்

விசுவாச ஆராதனை

காயீனும் ஆபேலும் வளர்ந்து பெரியவர்கள் ஆயினர். ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தேவனை ஆராதிக்கும்படியாய் தீர்மானித்தனர். ஆபேல் தன்னுடைய ஆட்டு மந்தையிலிருந்து சில கொழுமையான ஆடுகளை பலியிட்டான். காயீன் தன் நிலத்தின் காய் கனிகளை தேவனுக்கென்று படைத்தான். ஆபேலுடைய காணிக்கையை தேவன் அங்கிகரித்து ஏற்றுக்கொண்டார். காயீனுடைய காணிக்கையையோ தேவன் நிராகரித்தார்.

ஆபேலுடைய காணிக்கையை தேவன் அங்கிகரித்ததர்க்கான காரணம் ஆபேல் தேவனுடைய வார்த்தையை நம்பி அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தேவனுக்கு காணிக்கை செலுத்தினான்.  (எபி 11:4). பாவத்தினால் கறைபட்டுப்போன மனிதன் பரிசுத்தமான தேவனிடத்தில் சேரும் தகுதியை இழந்துவிட்டான். அனாலும் மனிதனை அப்படியே விட்டுவிட மனதில்லாத தேவன், மனிதன் தன்னை அணுகவேண்டும் என்றால், பழுதற்ற சுத்தமான ஒரு மிருகம் பலியிடப்பட்டு, அதின் இரத்தம் சிந்தப்பட வேண்டும் எனவும், அப்பொழுது தற்காலிகமாக மனிதரின் பாவம் மறைக்கப்பட்டு அவர்கள் தேவனை அணுகமுடியும் எனவும் வேதாகமத்தின் சற்று பிற்பகுதியில் நாம் காணமுடியும். இதையே ஆதாமின் குடும்பத்தினருக்கும் தேவன் சொல்லியிருக்க வாய்ப்புகள் அதிகம். இந்த தேவனுடைய வார்த்தையை நம்பின ஆபேல், அதையே பின்பற்றி பழுதற்ற சுத்தமான ஒரு மிருகத்தின் இரத்தத்தை சிந்தி தேவனிடத்தில் சேர்ந்தான். தேவனை அது பிரியப்படுத்தியது. அதை தேவன் அங்கிகரித்தார். காயீனோ தேவனுடைய வார்த்தையை நம்பாமல், தன் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் தேவனை அணுக முயற்சித்தான். தேவனை அது பிரியப்படுத்தவில்லை. தேவன் அதை நிராகரித்தார்.

தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையை நம்புவதே தேவனை பிரியப்படுத்தும். (எபி 11:6)

முதல் கொலை

தேவன் ஆபேலை ஏற்றுக்கொண்டு, காயீனை நிராகரித்தது காயீனுக்கு மிகுந்த எரிச்சலை உண்டுபண்ணியது. அப்போது தேவன் காயீனோடு பேசினார். தேவன் காயீனை நன்மை செய்ய சொன்னார். அதாவது அவருடைய வார்த்தையை நம்ப சொன்னார். அவருடைய வார்த்தையை நம்பி அதின்படி அவரிடம் வரச்சொன்னார். காயீன் தேவனுடைய வார்த்தையை நம்பவில்லை என்றால், பாவம் அவனை மேற்க்கொள்ளும் என சொன்னார். ஆனால் காயீனோ தேவனுடைய வார்த்தையை நம்பவில்லை. இறுதியாக காயீனின் அவிசுவாசம் அவனுடைய சொந்த சகோதரனயே கொல்லும் அளவுக்கு கொண்டுசென்றது. ஆபேல் தனியாக இருந்த ஒரு சூழலில் ஆபேலின் இரத்தம் தரையிலே சிந்தும் அளவிற்க்கு, காயீன் ஆபேலை கொன்று போட்டான். மனுகுலம் முதன் முதலாக மரணத்தை சந்தித்தது. நீ இதை புசிக்கும் நாளிலே சாகவே சாவாய் என்று சொன்ன தேவனுடைய வார்த்தையை அலட்சியம் செய்த மனுக்குலத்தின் முதல் சாவே கொடூரமானதாக அமைந்தது.

தேவனுடைய வார்த்தையை நம்புவதே தேவன் நம்மிடம் எதிர்பார்க்கும் நன்மை

தேவனுடைய வார்த்தையை நம்புவதே தேவன் நம்மிடம் எதிர்பார்க்கும் நன்மை.

தேவனுடைய வார்த்தயை அவிசுவாசிப்பது பாவ செயல்களுக்கு நேராக நடத்துகிறது.

தேவன் காயீனிடம் உன் சகோதரன் எங்கே? என கேட்டார். அதற்க்கு காயீன் நான் என்ன என் சகோதரனின் காவல்காரனா? என எதிர் கேள்வி கேட்டான். நீ தரையிலே சிந்தவிட்ட உன் சகோதரனின் இரத்தம் என்னை நோக்கி கூப்பிடுகிறது என்றார். காயீன் மறைவாக செய்த கொலை, தேவனுக்கு மறைவாக இருக்கவில்லை. காயீன் தேவனை முழுமையாக புறக்கணித்து ஓடிப்போனான். அந்தோ பரிதாபம்! எந்த மனிதன் தங்களை பாவத்திலிருந்து மீட்பான் என ஆதிப்பெற்றோர் எண்ணினார்களோ அவனே முதல் கொலைகாரனாக மாறிப்போனது வேதனையிலும் வேதனை!

முடிவுகள்:

தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையை நம்புவதே தேவனை பிரியப்படுத்தும். (எபி 11:6)

தேவனுடைய வார்த்தையை நம்புவதே தேவன் நம்மிடம் எதிபார்க்கும் நன்மை.

தேவனுடைய வார்த்தயை அவிசுவாசிப்பது பாவ செயல்களுக்கு நேராக நடத்துகிறது.

 

<<பாடம் 2                                                                                            பாடம் 4>>

mm

Author: Immanuel Jeswyn

இம்மானுவேல் ஜெஸ்வின் அவர்கள் கடந்த பத்து ஆண்டுகளாக தேவனுடைய பணியை செய்து வருகிறார். வேதாகம கல்வியில் முது நிலை பட்டம் பெற்றிருக்கும் இவர் தற்போது திருநெல்வேலி பட்டினத்தில் தேவனுடைய கிருபையின் சத்தியத்திற்க்காக வைராக்கியம் கொள்ளும் ஒரு வேதாகம திருச்சபையை நிறுவும் விருப்பத்தோடு செயல்பட்டு வருகிறார். இவருக்கு, மனைவி வசந்தி பெனிட்டா, மற்றும் இரண்டு மகன்களும் உண்டு.

mm

Written by 

இம்மானுவேல் ஜெஸ்வின் அவர்கள் கடந்த பத்து ஆண்டுகளாக தேவனுடைய பணியை செய்து வருகிறார். வேதாகம கல்வியில் முது நிலை பட்டம் பெற்றிருக்கும் இவர் தற்போது திருநெல்வேலி பட்டினத்தில் தேவனுடைய கிருபையின் சத்தியத்திற்க்காக வைராக்கியம் கொள்ளும் ஒரு வேதாகம திருச்சபையை நிறுவும் விருப்பத்தோடு செயல்பட்டு வருகிறார். இவருக்கு, மனைவி வசந்தி பெனிட்டா, மற்றும் இரண்டு மகன்களும் உண்டு.

1 thought on “பாடம் 3 பாவத்தின் சம்பளம் கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *