ஜெபிக்கும் கிறிஸ்தவனா? ஆண்டவரை நேசிக்கும் கிறிஸ்தவனா?

ஜெபிக்கும் கிறிஸ்தவனா? ஆண்டவரை நேசிக்கும் கிறிஸ்தவனா?

எழுதியவர்: போதகர். பால் ராஜ்

தமிழ் கிறிஸ்தவ உலகில்  பொதுவாக பயன்படுத்தப்படும் வாசகங்களில்  “ஜெபிக்கும் கிறிஸ்தவன் பாவம் செய்ய மாட்டான், பாவம் செய்கிற கிறிஸ்தவன் ஜெபிக்க மாட்டான்” என்கிற இந்த வாசகம் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இந்த வாசகத்தின் பிரகாரம் பார்க்கும் பொது ஜெபித்தவர்கள் எவரும் பாவமே செய்ததில்லை, பாவம் செய்த எவருமே ஜெபித்ததில்லை என்று எண்ணத்தோன்றுகிறது.

ஊக்கமாக ஜெபித்த அநேகர் பாவத்தில் விழுந்து போனதை நாம் வேதத்திலும் வாசிக்கின்றோம், சபை சரித்திரத்திலும் படித்துளோம். உதாரணமாக தாவீதை நாம் எடுத்துக்கொள்வோம் தாவீது தேவனுக்கு விரோதமாக பாவம் செய்யும் முன்பு ஜெபிக்றவராகதான் இருந்தார். ஜெபிக்கிற தாவீதால் எப்படி பாவம் செய்ய முடிந்தது? பாவத்தில் விழுந்து போன, பண ஆசைக்கு அடிமையாகி சத்தியத்தையும், அர்பணிப்பையும்  விட்டு விலகி போன  கிறிஸ்தவ மிஷநெரி ஸ்தாபன தலைவர்கள், ஸ்தாபகர்கள் மற்றும் பிரபல போதகர்களின் ஜெப வாழ்க்கை நாம் அறிந்த ஒன்றே. ஜெபத்தில் ஊக்கமாக தரித்திருந்த இவர்களால் எப்படி தேவனுக்கு விரோதமாக பாவம் செய்ய  முடிந்தது?

வெறும் வார்த்தையாக இருக்கும் ஜெபமும் சடங்காச்சாரமாக செய்யும் ஜெபமும், பாவம் செய்வதிலிருந்து நம்மை  தடுத்து நிறுத்த முடியாது. ஜெபம் என்பது வெறும் வார்த்தை அல்ல எனவேதான் ஜெபத்தின் மகிமையை, ஜெபத்தில் ஒருவர்  உச்சரிக்கும்  வார்த்தைகளால் அளவிடமுடியாது. தேவ மனிதர்கள் அனேகரது ஜெபமானது வெறும் வார்த்தைகளாக இருந்ததினால் தான் பாவத்தில் விழுந்து போனார்கள். ஜெபம் வெறும் வார்த்தையாக இருப்பதை விட தேவனுக்கும், நமக்கும் நடுவில் உள்ள உறவை வலுபடுத்துகிறதாகவும், அந்யோனிய உறவை மேம்படுத்துகிறதாகவும் இருக்குமெனில் அது நமது பரிசுத்த வாழ்விற்கு கேடகமாக இருக்குமென்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

ஜெபம் வெறும் வார்த்தையாக இருப்பதை விட தேவனுக்கும், நமக்கும் நடுவில் உள்ள உறவை வலுபடுத்துகிறதாகவும், அந்யோனிய உறவை மேம்படுத்துகிறதாகவும் இருக்குமெனில் அது நமது பரிசுத்த வாழ்விற்கு கேடகமாக இருக்குமென்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

நமது ஆண்டவராகிய இயேசு ஜெப வாழ்க்கை இதற்க்கு சிறந்த உதாரணமாகும். அவரது ஜெபம் வெறும் வார்த்தையோடு நின்று விடவில்லை, அவருக்கும் பிதாவானவருக்கும் நடுவே இருந்த  அந்யோனிய உறவை அவரது ஜெபம் நமக்கு காட்டுகிறது. பிசாசின் சோதனைகளை அவர்  ஜெயித்தார்  காரணம் அவரது ஜெபமும் அதை விட மேலாக பிதாவுக்கும் அவருக்கும் நடுவே இருந்த அசைக்க முடியாத உறவுமேயாகும். பவுல் அப்போஸ்தலன் இவ்விதமாக கூறுகிறார் “கிறிஸ்துவின் அன்பை விட்டு என்னை பிரிப்பவன் யார்? ஆண்டவரின் மீது நாம் வைத்திருக்கும் அன்பே அவருக்காக எல்லாவற்றையும்   அற்பமும் குப்பையுமாக எண்ணத்தோன்றுகிறது.

ஆண்டவரின் மீது நாம் வைத்திருக்கும் அன்பே பாவத்தை வெறுத்து அவரது சமுகத்தை தேட தூண்டுகிறது. நமது பரிசுத்த வாழ்விற்கு பங்கம் வராமல் காப்பது வெறும் வார்த்தைகளடங்கிய ஜெபம் அல்ல மாறாக அவருக்கும் நமக்கும் நடுவில் உள்ள சீரான உறவேயாகும். “ஜெபிக்கும் கிறிஸ்தவன் பாவம் செய்ய மாட்டான், பாவம் செய்கிற கிறிஸ்தவன் ஜெபிக்க மாட்டான்” என்று சொல்வதை விட “ஆண்டவரை முழு இருதயத்தோடு நேசிக்கிறவன் பாவம் செய்ய மாட்டான், பாவம் செய்கிறவன் ஆண்டவரை முழு இருதயத்தோடு தேட மாட்டான்” என்று சொல்வோமெனில் அது ஜெபத்தின் மேன்மையையும் மகிமையையும் நமக்கு உணர்துகிறதாகவும் இருக்கும்.

mm

Author: Paul Raj

பால் ராஜ் அவர்கள் பெங்களூரு பட்டினத்தில் உள்ள குடிசைவாழ் மக்கள் மத்தியில் பிரதரன் திருச்சபையோடு இணைந்து ஊழியம் செய்து வருகிறார். சபை சரித்திரத்தை முதன்மை பாடமாக கொண்டு, முது நிலை இறையியல் பயின்றவர்.

mm

Written by 

பால் ராஜ் அவர்கள் பெங்களூரு பட்டினத்தில் உள்ள குடிசைவாழ் மக்கள் மத்தியில் பிரதரன் திருச்சபையோடு இணைந்து ஊழியம் செய்து வருகிறார். சபை சரித்திரத்தை முதன்மை பாடமாக கொண்டு, முது நிலை இறையியல் பயின்றவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *