அனுதின ஆவிக்குரிய ஆகாரம். 30.08.2017.

யாக்கோபு தின தியானம்

“ஆனால் அவன் விசுவாசத்தோடே கேட்ககடவன்…”

வேதப்பகுதி: யாக்கோபு 1: 6

விசுவாசத்திற்கான இடம்.

அப்போஸ்தலனாகிய யாக்கோபு விசுவாசத்திற்கு உயர்வான மதிப்பை கொடுத்து அதை சரியான இடத்தில் வைக்கிறார். பலமுறை கர்த்தராகிய இயேசுவும் தம்முடைய சீஷர்களிடமிருந்து விசுவாசத்தை எதிர்பார்க்கிறார் (மத்தேயு 8:26, மாற்கு 4:40). வாழ்க்கை மற்றும் ஊழியத்தில் விசுவாசம் தேவையானதாக இருக்கின்றது. தேவனிடம் ஜெபம் செய்கிறபோதும் விசுவாசம் நிச்சயம் தேவைப்படுகிறது.

விசுவாசத்துடன் ஜெபிப்பது

ஜெபம் செய்வது தேவனுடைய உண்மையான பிள்ளைகளுக்கு இயல்பாகவே வரவேண்டும். அவர்களில் வாசமாயிருக்கும் பரிசுத்த ஆவியானவர், பிதாவாகிய தேவனை அப்பாவாக, தேட அவர்களைத் தூண்டுவார்.

ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். யாக்கோபு 1: 6

1. “அவரை விசுவாசத்தோடே கேட்ககடவன்”

அ) ஜெபிக்கின்றவன் கர்த்தரிடத்தில் கேட்பதற்கான விசுவாசம் தன்னிடத்தில் இருக்கின்றதா என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்ளவேண்டும்.

ஆ) ஜெபத்திற்கான பதிலை பெறுவதற்கு விசுவாசம் ஒன்று மாத்திரம் போதுமானதல்ல ஆனால் அதுவும் ஒரு முக்கியமான அம்சமே.

2. “சந்தேகமில்லாமல்”

அ) இந்த மனநிலையை எளிதாக பெற்றிருக்க முடியாது.

ஆ) இத்தகைய விசுவாசத்துடன் ஜெபிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

3. நாம் போராடக்கூடிய சில சந்தேகங்கள் யாவை?

அ) தேவன் நம்முடைய எல்லா ஜெபங்களையும் உண்மையிலேயே கேட்கிறாரா?

ஆ) இது தேவனுடைய சித்தத்தமாக இருக்குமா?

இ) நாம் பாவம் செய்கின்றவர்களாய் இருக்கும்போதுகூட நமது ஜெபத்தை தேவன் கேட்பாரா?

ஈ) தேவனால் நம்முடைய எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியுமா?

4. “சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான் “

அ) யாக்கோபு தேர்ந்தெடுத்த இந்த உவமை மிகச்சரியாகவும் உண்மையாகவும் இருக்கின்றது

ஆ) விசுவாசம் மற்றும் அவிசுவாசத்திற்கு இடையே ஊசலாடுபவனே சந்தேகப்படுகிறவன்.

5. கர்த்தருடைய பதில்

அ) இப்படிப்பட்ட ஜெபங்களை அவர் விரும்புவதில்லை.

ஆ) சந்தேகம் என்பது கர்த்தர் கற்பித்த எல்லா வார்த்தைக்கும் எதிரானது.

6. சந்தேகம் என்ற பிரச்சனையை நாம் சரியாக கையாள வேண்டும்

அ) தோமா ஆண்டவரின் உயிர்த்தெழுதலை பற்றி பெரும் சந்தேகங்களை எழுப்பினான்.

ஆ) ஆனால் கர்த்தராகிய இயேசு அவனுடைய சந்தேகங்களை களைந்துபோட்டார். (யோவா 20: 24-29).

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *