அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 29.08.2017.

யாக்கோபு தின தியானம்

உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால்…”

வேதப்பகுதி: யாக்கோபு 1: 5

ஞானத்தை தேடுதல்

ஞானத்தை வாஞ்சிப்பதற்காக நம்மை உற்சாகப்படுத்தவே நீதிமொழிகளின் புத்தகம் பிரத்தியேகமாய் கொடுக்கப்பட்டிருக்கின்றது. நீதிமொழிகளின் புத்தகத்தில் ஞானத்தை குறித்த விலைமதிப்பில்லா பொக்கிஷங்களை நாம் காணமுடியும்.

வாழ்க்கைக்கு ஞானம் மிகவும் அவசியமானது என்று யாக்கோபு நன்றாக அறிந்திருந்தார். நாம் ஞானத்தை எப்படி தேடிக் கண்டுபிடிப்பது என்பதற்கான சிறந்த நடைமுறைக்கேற்ற ஆலோசனையை அவர் இங்கு தருகின்றார்.

உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். யாக்கோபு 1:5

1. ” உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால் “

அ) நம்முடைய ஞானமானது குறைவுள்ளது என்று நாம் முதலில் ஒத்துக்கொள்ளவேண்டும்.

ஆ) ஞானத்தைத் தேடுவதற்கான வாஞ்சை இருக்க வேண்டும்.

இ)அதற்கான குறிப்பிடத்தக்க உந்துதல் ஒருவரிடம் இருக்க வேண்டும்.

2. “அவன் தேவனிடத்தில் கேட்கக்கடவன்”

அ) தேவன்தான் எல்லா ஞானத்திற்கும் ஊற்றானவர்.

ஆ) தேவனிடம் ஞானத்தை கேட்டு ஜெபிக்கவேண்டும்.

3. தேவன் எப்படிப்பட்டவராக இருக்கிறார்

அ) ” அனைவருக்கும் தாராளமாக கொடுப்பவராக”

இது தேவனைப் பற்றிய அடிப்படையான புரிதல்.

தேவன் கொடுக்க விரும்பாதவர் அல்ல; சம்பூரணமாக கொடுப்பவர்.

ஆ) “கடிந்துகொள்ளாதவர்”

அவரிடமிருந்து நாம் கேட்கும்பொழுது நம்மீது வருத்தப்படுவதோ,
கோபப்படுவதோ இல்லை.

அவர் அவருடைய ஆசீர்வாதத்தை கடிந்துகொண்டு கொடுப்பதில்லை.

4. “அவனுக்கு கொடுக்கப்படும்

அ) யாக்கோபு இதை ஒரு உறுதியான உணர்வுடன் எழுதியிருக்கின்றார்.

ஆ) ஆம், இது தேவனிடமிருந்து தன்னுடைய வாழ்க்கையில் பதில்களை பெற்றவரிடமிருந்து வரும் வார்த்தையாக இருக்கின்றது.

ஆண்டவராகிய இயேசு கற்றுக்கொடுத்ததை நினைவுகூறுதல்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஜெபத்தை குறித்ததான போதனைகளை நாம் ஒருமுறை நினைவில் கொண்டுவருவோம்.

மத்தேயு 7: 7-8
கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். ஏனென்றால், கேட்கிற எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.

தேவையில்லாதவற்றையும், அழிந்துபோகின்றவற்றையும் வேண்டிக்கொள்ளாமல் ஞானத்தை கேட்டு ஜெபிக்கின்றவர்களாக இருப்போம். அவர் சித்தப்படி நாம் எதையாகிலும் கேட்டால் நிச்சயம் பெற்றுக்கொள்கின்றோம். ஆம் நாம் ஞானத்தை வாஞ்சிப்போமானால் நிச்சயம் அதை நமக்கு தந்தருளுவார்.

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *