அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 01.11.2017

யாக்கோபு தின தியானம்

“எலியா என்பவன் நம்மைப்போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும்…”

வேதப்பகுதி: யாக்கோபு 5: 17-18

ஒரு சிறந்த உதாரணம்

யாக்கோபு அவர்களுக்கு, நல்ல நீதிமானின் ஜெபத்திற்கு எலியா ஒரு சிறந்த உதாரணம். அவரை ஒரு உதாரணமாக தேர்ந்தெடுக்க அவர் பொருத்தமானவராக இருந்தார். ஜெபம் என்பதை கொள்ளையாடின பொருளாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதை நினைவில் வைப்போம்.

“எலியா என்பவன் நம்மைப்போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்றுவருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை. மறுபடியும் ஜெபம்பண்ணினான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது.” யாக்கோபு 5: 17-18

1. “எலியா என்பவன் நம்மைப்போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும்”

அ) எலியாவின் வாழ்க்கை மற்றும் ஊழியம் 1 இராஜாக்கள் 17 முதல் 2 இராஜாக்கள் 2 வரை பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆ) ” நம்மைப்போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும்”

a) எலியா ஒரு தேவனுடைய தீர்க்கதரிசி.

b) ஆனால் அவர் நம்மைப் போல ஒரு சாதாரண மனிதன் தான்.

c) அவர் மனச்சோர்வு மற்றும் உணர்வுகளை எதிர்த்துப் போரிட்ட காலம் ஒன்று இருக்கத்தான் செய்தது.

d) மரணம் உயிரோடு இருப்பதைவிட சிறந்தது என்று நினைத்த ஒரு காலம் இருந்தது (1 இராஜாக்கள் 19).

2. துன்மார்க்க அரசனாகிய ஆகாபின் ஆட்சியில் எலியாவின் முக்கியமான ஊழியம்

அ) எலியா ஒரு துணிச்சலான தீர்க்கதரிசியாக இருந்தார், துன்மார்க்க அரசனாகிய ஆகாப்மீது சவால்விட தேவன் அவரை எழுப்பினார்.

ஆ) ஆகாபும் அவருடைய மனைவி யேசபேலும் பெரும் அநீதியுடன் இஸ்ரவேலரை ஆட்சி செய்தனர்.

a) அவர்களுக்கு கீழ் விக்கிரகாராதனை பெருகியது.

b) ஆகாபின்மீது யேசபேலின் செல்வாக்கு தெளிவாகவும் கொடியதாகவும் இருந்தது.

c) ஆகாப் நாபோத் என்பவனுடைய திராட்சைத் தோட்டத்தை அடைவதற்காக அந்த அப்பாவியை கொன்றுபோட்டான் (1 இராஜாக்கள் 21).

3. எலியா ஒரு ஜெப வீரனாக

அ) எலியா தன்னுடைய ஆரம்ப ஊழியத்தில் ஆகாப் ராஜாவுக்கு ஆச்சரியமான வார்த்தைகளைக் கொடுத்தார்.

“கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான். 1 இராஜாக்கள் 17: 1

ஆ) பஞ்சம் மிகவும் கொடியதாக இருந்தது (1 இராஜாக்கள் 18: 1-2).

இ) எலியா பாகாலின் 450 தவறான தீர்க்கதரிசிகளுக்கும், ஆகாபையும், யேசபேல் ராணியையும் ஆதரித்த கிபியாவிலிருந்த 400 தீர்க்கதரிசிகளுக்கும் சவால் விட்டு தோற்கடித்தார். (1 இராஜாக்கள் 18:19).

4. “மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான்,… மறுபடியும் ஜெபம்பண்ணினான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது

அ) எலியாவுக்கு மழை பெய்யாதபடி நிறுத்தும் வல்லமை இல்லை.

ஆ) அதிகாரமும் வல்லமையும் தேவனுடையது; ஆனால் நீதிமானின் ஜெபம் அந்த வல்லமை செயல்பட காரணமாக இருக்க முடியும்!

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *