அனுதின ஆவிக்குரிய ஆகாரம். 28.08.2017

யாக்கோபு தின தியானம்

நீங்கள் பூரணராயும், நிறையுள்ளவர்களாயும் இருக்கும்படி …”

வேதப்பகுதி: யாக்கோபு 1: 4

மகிமையான  விளைவுகள்

சோதனைகளை சமாளிப்பது சற்று கடினமாக இருக்கலாம். எனினும், நமக்கு வரும் சோதனைகளின் முடிவில் மகிழ்ச்சியான விளைவுகளை  நாம் பெறுவோம்  என்பதை அறிந்தோமானால், அவைகளை சகிப்பதற்கு எளிதாக தோன்றும்.

நீங்கள் ஒன்றிலும் குறையுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறையுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது. யாக்கோபு 1: 4

1. தொடர் நிகழ்வுகள்.

அ) சோதனை

ஆ) பாடுகள்

இ) பொறுமையோடு சகித்தல்.

2. “ஆனால், பொறுமையானது அதன் பூரண கிரியையை நடப்பிக்கவேண்டும்

அ) “பொறுமை – யில்” பல்வேறு நுணுக்கங்கள் உள்ளது .

ஆ) இந்த காரியங்கள் நம்மில் விளைய காலம் எடுக்கும்.

இ) “பூரணம்” என்ற வார்த்தை:

இது “முதிர்ச்சி” அல்லது “நிறைவு” என அர்த்தம் கொள்ளலாம்.

இது முற்றிலும் பாவமில்லாத நிலையை குறிப்பிடும் வார்த்தை இல்லை.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறொருவரும் “பூரணமானவர்கள்” இல்லை.

3. ” நீங்கள் பூரணராயும், நிறையுள்ளவர்களாயும் இருக்கும்படி

அ) இரு வார்த்தைகளும் ஒரே அர்த்தமுடையவைகள்.

ஆ) முதல் வார்த்தை மாத்திரம் போதுமானது தான்.

இ) இரண்டாவது வார்த்தை அதற்கு கூடுதல் பலம் சேர்க்கின்றது.

ஈ) ” பூரணராயும், நிறையுள்ளவர்களாயும் ” என்பது முழுமையான அர்த்தத்திற்கு வலுவூட்டும் வார்த்தையாக இருக்கின்றது

4. “ஒன்றிலும் குறைவில்லாதவர்களாக

அ) இது “பூரணமானவர்கள், முழுமையானவர்கள்” என்பதை காட்டுகிறது.

ஆ) முழு முதிர்ச்சி பெற்ற என்ற வார்த்தையை வலுப்படுத்த இந்த வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது.

ஆவிக்குறிய வளர்ச்சி:

இந்த ஆவிக்குறிய வளர்ச்சியை அடைவது மிகவும் கடினம். ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அடைந்த வளர்ச்சியை நாம் நினைவில் கொள்ளுவோம்.

இயேசுவாவர் ஞானத்திலும் வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகதிகமாய் விருத்தியடைந்தார்.” லூக்கா 2:52

தேவன் மீது வைக்கும் விசுவாசத்தை கொண்டு நம் வாழ்வில் வரும் சோதனைகளை நாம் எதிர்கொள்ள வேண்டும். அதற்கேற்ற ஆவிக்குரிய வளர்சியை நாம் அடைய முயலுவோம்.

நாம் எல்லோரும் முற்றிலும் ஒரு முதிர்ந்த விசுவாசத்தின் பிள்ளைகளாகத்தான் நிச்சயம் இருக்க வேண்டுமென்று வேதம் கட்டளையிடவில்லை.  நம்முடைய வாழ்க்கையின் தேடல்  ஆவிக்குறிய முதிர்ச்சியாக இருக்க விரும்புவோம்! அப்பொழுது வாழ்க்கையின் எந்த சோதனைகளுக்கும் நாம் பயப்பட மாட்டோம்! பாடுகளின் முடிவில் நல்ல பயனை பெற்றிருப்போம்.

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *