அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 21.10.2017

யாக்கோபு தின தியானம்

” நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே…”

வேதப்பகுதி: யாக்கோபு 4:14

சிறந்த திட்டங்கள்

நம்முடைய வாழ்க்கைக்கான திட்டங்களைத் தயாரிப்பதில் தவறு எதுவும் இல்லை. எனினும், அதீத நம்பிக்கைக்கு போய்விடும் அளவுக்கு சென்றுவிடும் நாம் நம்முடைய வாழ்க்கையின் முழு கட்டுப்பாடும் நம்மிடம் இல்லை என்ற உண்மையை உணர மறந்துவிட்டோம்.

“மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒருவருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம்பண்ணுவோமென்கிறவர்களே, கேளுங்கள். நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே.” யாக்கோபு 4: 13-14

1. ஒரு பொதுவான மனித திட்டம் இங்கு ஒரு உவமையாக பயன்படுத்தப்படுகிறது

அ) நகரத்தைத் தேர்ந்தெடுக்கும் ஒருவர்

ஆ) நேரத்தை திட்டமிடுகிறார்

இ) வியாபாரத்தை நிர்ணயிக்கின்றார் (“வாங்கவும் மற்றும் விற்கவும்”)

ஈ) அதில் வரும் லாபத்தை எதிர்பார்த்து

2. யார் வேண்டுமானலும் இந்த பொது திட்டத்துடன் வரலாம்

அ) இந்த திட்டத்தில் தவறொன்றும் இல்லை.

ஆ) ஒரு நல்ல வியாபாரத் திட்டத்தை கொண்டிருப்பது தவறில்லை.

3. “அதேநேரத்தில்”

அ) இந்த திட்டத்தில் இருக்கும் குறையை யாக்கோபு காண்கிறார்.

ஆ) அவர் ஒருசில பொருத்தமான கேள்விகளை இங்கு எழுப்புகிறார்.

4. ” நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே “

அ) திட்டமிடுகிறவர் பின்வரும் காரியத்தை மனதில் கொள்ளவில்லையே.

ஆ) நிலையாக சொல்லமுடியாத காரணிகளை ஒதுக்குவதைவிட அதை கருத்தில் கொள்ளுவது மிகவும் நல்லது.

5. ” உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது?”

அ) நம் வாழ்க்கையின் முழு கட்டுப்பாடும் நம்மிடம் இல்லை.

ஆ) இது ஒரு ஞானமான மற்றும் தேவையான நினைவூட்டல்.

6. “கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே “

அ) பிரசங்கி புத்தகம் நமக்கு நினைவுக்கு வருகிறது.

ஆ) இந்த புத்தகத்தில் “மாயை” என்ற வார்த்தை தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. (அதாவது “ஆதாரம் இல்லாதது”) பிரசங்கி 2:11, 15.

இ) யாக்கோபு தனது வாசகர்களுக்கு ஒரு முக்கியமான நினைவூட்டலை அனுப்பினார்.

ஈ) வாழ்க்கை புகையோடு ஒப்பிடப்படுகிறது, அது விரைவில் மறைந்துவிடும்! அப்படியானால் நம்முடைய வாழ்க்கையை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற ஞானம் வேண்டும்.

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *