அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 27. 08. 2017.

யாக்கோபு தின தியானம்

உங்கள் விசுவாசத்தின் சோதனை”

வேதப்பகுதி: யாக்கோபு 1: 3

வாழ்க்கையின் சோதனைகள்

வாழ்க்கையில் எந்த ஒரு சோதனையும் எளிதானதல்ல. நம்முடைய அன்புக்குரியவர்கள் இழப்பு மற்றும் நெருங்கிய சொந்தங்கள் இழப்பு போன்ற கடுமையான விஷயங்களை தாங்குவது கடினமானதே. ஆயினும்கூட, வாழ்க்கையின் சோதனைகளை எதிர்கொள்ளும் விதத்தில் யாக்கோபு மிகவும் மாறுபட்ட அணுகுமுறை ஒன்றை நமக்கு வழங்குகிறார்.

என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது,உன் விசுவாசத்தின் பரிட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து”
யாக்கோபு 1: 2-3

1. “எல்லாவற்றையும் சந்தோஷமாக எண்ணுங்கள்”

அ) “எண்ணுங்கள்” என்ற வார்த்தை “கணக்கிடுதல்” என அர்த்தம்கொள்ளலாம்.

ஆ) வாழ்க்கையின் பல்வேறு சோதனைகளை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது அவரவரை பொருத்து அமையும்.

வாழ்க்கையில் நிச்சயம் சோதனைகள் வரும்

பல்வேறு சோதனைகளை சந்திக்கும் நேரத்தில் விசுவாசிகள் ஆவிக்குரிய சந்தோஷத்தை தெரிந்து கொள்ளுதல் சிறந்தது.

2. “அறிந்திருப்பது

அ) ஒருவருக்கு இதை பற்றிய சரியான “அறிவு” இருக்கின்றதா என்பதுதான் கேள்வி.

ஆ) தேவனுடைய வார்த்தையில் போதுமான அறிவை நாம் பெற்றிருந்தால் மட்டுமே, உண்மையான மகிழ்ச்சி அனுபவமாகியிருக்கும்.

இ) தெளிந்த சிந்தையோடு இந்த அறிவு செயல்பட வேண்டும்.

3. “உங்கள் விசுவாசத்தின் சோதனையானது”

அ) சோதனைக்கான கோட்பாடு

இது உலகளாவிய கோட்பாடு

மேலும் இது ஒரு வேதாகம கோட்பாடு

ஆ)தேவன் மீது இருக்கும் விசுவாசம் நிச்சயம் சோதிக்கப்படும்:

இந்த விசுவாசம் உண்மையானதாக இருக்கிறதா என்பதை அறியவே.

சோதனைகள் ஒருவரின் விசுவாசத்தை உடைத்துப் போட அல்ல, ஆனால் அதனுடைய தரத்தினை சோதிக்கவே.

4. “பொறுமையை உருவாக்குகிறது

அ) எப்பொழுதும் நமக்கு வரும் சோதனைகளில் இருந்து பல நல்ல விளைவுகள் உண்டாகின்றது.

ஆ) பொறுமை என்பது பல முக்கியமான காரியங்களை
உள்ளடக்கியது.

சகிப்புத்தன்மை.

விடாமுயற்சி.

விசுவாசத்தில் நிலைத்திருப்பது.

கர்த்தர் மீது முழுமையான விசுவாசம் வைப்பதற்கான பலம்.

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *