அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 20.10.2017

யாக்கோபு தின தியானம்

“நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே…”

வேதப்பகுதி: யாக்கோபு 4:12

கர்த்தருக்கு பயப்படும் பயம்

யாக்கோபு தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். இது அவரது நிருபத்தில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. நியாயப்பிரமாணத்தின் மீது வைத்திருந்த அந்த மரியாதையோடு அதை தந்த தேவன் மீதும் மிகுந்த மரியாதை இருந்தது.

“நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர்; மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்? யாக்கோபு 4:12

1. “நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே “

அ) இது கர்த்தராகிய தேவனைப் பற்றிய ஒரு தெளிவான குறிப்பு.

ஆ) அவரே நியாயப்பிரமாணத்தின் தெய்வீக ஆசிரியர்.

2. “அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர்”

அ) கர்த்தராகிய தேவன் இரட்சிப்பதற்கான முழு அதிகாரத்தையும் வல்லமையையும் கொண்டிருக்கிறார்.

a) தங்கள் பாவங்களுக்கு மனம் வருந்துகிறவர்களிடம் மன்னிப்பு கொடுக்கவும்,

b) மன்னித்து அவர்களின் பாவங்களை சுத்தம் செய்வதற்காகவும்,

c) அவர்களை ஏற்றுக்கொண்டு அவர்களை இரட்சிப்பதற்காகவும்,

d) தமக்கு பயப்படுவோரை மீட்பதற்காகவும் ஆசீர்வதிப்பதற்காகவும்.

ஆ) கர்த்தராகிய ஆண்டவரும் அழிக்கும் அதிகாரத்தையும் வல்லமையும் உடையவராக இருக்கின்றார்.

a) மற்றவர்களை தீது பேசுவதில் நிலைத்திருப்பவர்களை.

b) நியாயப்பிரமாணத்தை மீறி அதை முழுவதும் அலட்சியம் செய்கிறவர்களை.

c) அவர்கள் “இரட்சிக்கப்பட்டவர்கள்” என்று நினைக்கலாம், ஆனால் அவர்களது நடத்தை காட்டிக்கொடுத்துவிடும்.

3. “மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்?”

அ) இந்த இடத்தில் “குற்றப்படுத்துதல்” என்ற பதம் அடுத்தவரை நியாயம் தீர்க்கின்ற அர்த்தத்தில் சொல்லப்படுகிறது.

ஆ) யாக்கோபு 4 முழுவதும் பின்வருபவைகளை கொண்டிருக்கின்றது.

a) யுத்தங்கள்

b) இச்சைகள்

c) உலகமயமாக்குதல்

d) பெருமை

e) பிசாசின் துண்டுதல்

f) நியாயப்பிரமாணத்தை அலட்சியம் செய்தல்

g) விரோதமாக பேசுவது

யார் ஒருவன் நியாயப்பிரமாணத்தையும், சகோதரர்களையும் நியாயம் தீர்க்கின்றானோ அவன் கர்த்தரால் அழிக்கப்படும் ஆபத்தில் இருக்கின்றான்!

mm

Author: Stephen James

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *