அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 19.10.2017

யாக்கோபு தின தியானம்

சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள்…”

வேதப்பகுதி: யாக்கோபு 4:11

தீமை பேசுதல்

யாக்கோபு 3 இல் ஒரு கட்டுபடுத்தப்படாத நாக்கினால் விளையும் பாவங்கள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. ஆனால் பாவம் நிறைந்த நாக்கை பற்றி ஒரே ஒரு அத்தியாயத்தில் சொல்லிவிட முடியாது. மீண்டும் இந்த பிரச்சனையை குறித்து யாக்கோபு இன்னும் ஆழமாக விவரிக்கின்றார்.

“சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள்; சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய்ப்பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான்; நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துவாயானால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாயிராமல், அதற்கு நியாயாதிபதியாயிருப்பாய்.” யாக்கோபு 4:11

1. “சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள்

அ) செய்யக்கூடாது என்பதை வலியுறுத்த யாக்கோபு வலுவான மற்றும் கண்டிப்பான முறையைப் பயன்படுத்தினார்.

ஆ) எந்த சூழ்நிலையிலும் தீமையாக பேசுவது தவறு!

இ) ஆகையால், அதை சிந்தனையில்கூட இருக்ககூடாது.

ஈ) எனவே ஒருவரது நடைமுறை வாழ்க்கையில் இருக்குமானால், அது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

2. “சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன்”

அ) இந்த இரண்டு செயல்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

ஆ) ஒருவன் தன் சகோதரனைப் பற்றித் தீமை பேசும்போது, அவனை நியாயமும் தீர்க்கின்றான்.

3. “நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய்ப்பேசி”

அ) யாக்கோபு மிக ஆழமான காரியத்தை இங்கு பேசுகிறார்.

ஆ) தேவனுடைய நியாயப்பிரமாணம் குறை சொல்லுவதை தடை செய்கிறது.

இ) ஒருவர் குற்றபடுத்துபவராக இருக்கும்பட்சத்தில் அவர் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாக பேசுகிறவராக இருக்கின்றார்.

4. “நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துவாயானால்”

அ) குறை பேசுகிற ஒருவர் நியாயப்பிரமாணத்தையே நியாயந்தீர்க்கும் குற்றவாளி.

ஆ) அவர் நியாயப்பிரமாணத்திற்கு மேலாக தான் இருப்பதாக உணரலாம்.

இ) தான் பேசுவது குற்றமாக இருந்தாலும், தான் விரும்புவதைப் பேசுவதற்குத் தகுதியுடையவர் என்று அவர் நினைக்கலாம்.

ஈ) நியாயப்பிரமாணத்தை நியாயம்தீர்க்க துணிகிறவன் நிச்சயமான ஆபத்தில் இருப்பதாக யாக்கோபு எச்சரிக்கின்றார்.

5. “நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாயிராமல், அதற்கு நியாயாதிபதியாயிருப்பாய்.”

அ) யாக்கோபு நியாயப்பிரமாணத்தை செய்கின்றவராக இருக்கவேண்டும் என்று வாதம் செய்தார் (யாக்கோபு 1:22).

அ) தீமை பேசுகிறவர் நிச்சயமாக நியாயப்பிரமாணத்தை செய்கிறவர் இல்லை.

இ) மற்றவர்களை குற்றப்படுத்தும் செயலில் தொடர்ந்து நிலைத்திருப்பவன் தன்னைத் தானே நியாயாதிபதியாக ஆக்கிக்கொள்கிறான்.

ஈ) இது ஒரு பலமான எச்சரிக்கை ஆகும்.

உ) தன்னை நியாயப்பிரமாணத்திற்கு நீதிபதியாக்கிக்கொள்வது மிகப்பெரிய பாவம்.

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *