அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 18.10.2017

யாக்கோபு தின தியானம்

” கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள்…”

வேதப்பகுதி: யாக்கோபு 4:10

பெருமை என்னும் பிரச்சனை

பெருமை அல்லது இருமாப்பு என்னும் பாவங்களை வேதவாக்கியங்கள் மிகப்பெரிய பிரச்சனைகளாக காட்டுகிறது. இரண்டு உதாரணங்கள் இதில் குறிப்பிடதக்கவை.

1. பாபேலின் கோபுரம்

அ) பெருமையான மக்கள் ஒரு கோபுரத்தை கட்டியெழுப்ப விரும்பினர், அது ஏறத்தாழ வானத்தை தொடும் அளவுக்கு இருந்தது.

ஆ) ஆனால் தேவன் அந்த மக்களை சிதறடித்தார் (ஆதியாகமம் 11: 1-9).

2. ராஜாவாகிய நேபுகாத்நேச்சார்

அ) பூமியை ஆட்சி செய்த மிக வலிமையான அரசர்களில் ஒருவராக அவர் இருந்தார்.

ஆ) தேவன் அவரை கடுமையான மனநோயால் பாதிக்கப்படும்படி அனுமதித்து அவரை சிட்சித்தார் (தானியேல் 4).

தாழ்மையாய் இருக்க அழைப்பு

ஆண்டவருக்கு முன்பாக தாழ்மையாய் இருக்க முக்கியமான அழைப்பை யாக்கோபு விடுகிறார்.

கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.” யாக்கோபு 4:10

1. “உங்களைத் தாழ்த்துங்கள்”

அ) நம்மை பற்றி நாம் பெருமைப்பட்டுக்கொள்ள என்ன இருக்கின்றது?

ஆ) பலர் பின்வரும் காரியங்களில் பெருமை கொள்கிறார்கள்:

a) அறிவுடன் இருப்பதை குறித்து (ஞானியான மனிதன்)

b) பலத்தை குறித்து (வலிமைமிக்க மனிதன்)

c) ஐஸ்வரியத்தை குறித்து (செல்வத்தின் திரட்சி) எரேமியா 9: 23-24

2. “கர்த்தருடைய பார்வைக்கு முன்பாக”

அ) தவறான மனத்தாழ்மையைக் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

a) இது மாய்மாலமே இல்லாமல் வேறொன்றும் இல்லை.

b) தவறான மனத்தாழ்மை பெரும்பாலும் அடுத்தவர்களிடம் இருந்து கைதட்டல் வாங்க காட்டப்படுகிறது.

ஆ) உண்மையான மனத்தாழ்மை உள்ளவர் கர்த்தருக்கு முன்பாக நிற்பார்.

a) பரிசுத்த தேவனுக்கு முன்பாக அவர் எப்படிப்பட்ட பாவி என்பதை உணர்ந்தவராக,

b) அவர் தம்முடைய எல்லா பாவங்களிலிருந்தும் சுத்திகரிக்கப்பட விரும்புகிறார் (சங்கீதம் 32, 51).

3. “அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்”

அ) உண்மையான புகழ்ச்சி தேவனிடமிருந்து வந்திருக்க வேண்டும்.

ஆ) தேவன் தாழ்மையுள்ளவரை உயர்த்துவார் என்பதற்கு சிறந்த உதாரணம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து (பிலிப்பியர் 2: 5-11).

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *