அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 17.10.2017

யாக்கோபு தின தியானம்

“நீங்கள் துயரப்பட்டுத் துக்கித்து அழுங்கள்!”

வேதப்பகுதி: யாக்கோபு 4: 9

“மன்னித்துவிடுங்கள் என்று சொல்வதற்கு மேலாக”

“மனந்திரும்புங்கள்” என்ற செய்திதான் யோவான் ஸ்நானகனால் பெரிதும் பிரசங்கிக்கப்பட்ட செய்தி. மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனி இருக்க வேண்டும் என்றும் அவர் பிரசங்கித்தார் (மத்தேயு 3: 8).

நம்முடைய பாவத்தைக் குறித்த பிரச்சினைகளை பற்றி உண்மையான துக்கமாக இருப்பது எவ்வாறு என்று முக்கியமான ஒரு மாறுபட்ட ஆலோசனையை வழங்கினார்.

“நீங்கள் துயரப்பட்டுத் துக்கித்து அழுங்கள்; உங்கள் நகைப்பு துக்கிப்பாகவும், உங்கள் சந்தோஷம் சஞ்சலமாகவும் மாறக்கடவது.” யாக்கோபு 4: 9

1. மிகவும் கட்டாயமானவைகள்

அ) யாக்கோபின் மூன்று அழைப்புகளுமே கண்டிப்பானவைகளாக எழுதப்பட்டவை.

ஆ) அவரது அழைப்பில் தப்பிக்கும் வாய்ப்புகள் எதுவும் இல்லை.

இ) உண்மையிலேயே மனந்திரும்பிய மனிதர் கட்டாயத்தின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள முடியும்.

2. “துயரப்பட்டு”

அ) இந்த வார்த்தையானது ஒரு இடைவிடா வினைச்சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஆ) அது “துன்பகரமானதாக இருக்க வேண்டும்”.

இ) உண்மையிலேயே மனந்திரும்புவதற்கு ஒரு உள்ளார்ந்த விருப்பத்தை இது விவரிக்கிறது.

3. “துக்கித்து”

அ) இந்த வினைச்சொல் “துக்கம்” என்பது அடுத்த செயலாகிய “அழுவது” தொடர்பாக அடிக்கடிப் பயன்படுத்தப்படுகிறது.

ஆ) கண்ணீரைக் கொண்டுவரும் ஆழ்ந்த வருத்தத்தை அது குறிப்பிடுகிறது.

4. “அழுங்கள்”

அ) இந்த வார்த்தை “துக்கம்” என்ற வினைச்சொல்லுடன் நெருங்கிய தொடர்புடையது.

ஆ) உண்மையான மனந்திரும்புகிறவர் அவருடைய பாவங்களின் பாரத்தை உணர்ந்து, கண்ணீரோடு துக்கப்படுவார்.

5. “உங்கள் நகைப்பு துக்கிப்பாகவும்”

அ) நகைப்பதில் தவறு எதுவும் இல்லை.

ஆ) ஆனால் ஒருசிலர் தீங்கு செய்கிறதினால் நகைக்கிறார்கள்.

“தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு…” நீதிமொழிகள் 10: 23 அ

இ) இந்த வகையான நகைப்பு துக்கமாக மாற்றப்பட வேண்டும்.

6. “உங்கள் சந்தோஷம் சஞ்சலமாகவும் மாறக்கடவது.”

அ) “சந்தோஷமாயிருப்பது” ஒன்றும் தவறு இல்லை.

ஆ) ஆனால் பாவங்களைக் சரிசெய்யாத ஒருவர் “மகிழ்ச்சியாயிருப்பதற்கு” எந்த காரணமும் இல்லை.

இ) பாவம் மன்னிக்கப்பட்டு, இருதயம் சுத்தப்படுத்தப்படும் வரை, “மகிழ்ச்சியை அடக்கி வைத்திருப்பது ஞானமானது.

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *