அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 16.10.2017

யாக்கோபு தின தியானம்

“தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்.”

வேதப்பகுதி: யாக்கோபு 4: 8

“தேவனுடைய பிள்ளைகள் என்ற பாக்கியம்”

தேவனுடைய பிள்ளைகள் என அழைக்கப்படுவது எவ்வளவு பெரிய பாக்கியம்! நாம் மறுபடியும் பிறந்து, தேவனுடைய மகன்களாகவும், மகள்களாகவும் அழைக்கப்படுவதை கொள்ளையாடினப் பொருளாக எடுத்துக்கொள்ள கூடாது.

தேவனிடத்தில் நெருங்கி சேருதல்

தேவனுடைய பிள்ளைகள் பிதாவாகிய தேவனிடம் நெருக்கமாக இருக்க வேண்டுமென விரும்புவது இயற்கையே. ஆனாலும், வருத்தமான உண்மை என்னவென்றால், அநேகர் உண்மையில் தேவனிடம் நெருக்கமாக இருப்பதில்லை.

“தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்.” யாக்கோபு 4: 8

1. “தேவனிடத்தில் சேருங்கள்”

அ) இந்த வார்த்தையை யாக்கோபிடமிருந்து வரும் ஒரு பலமான வார்த்தையாக படிக்க வேண்டும்.

ஆ) இது ஒரு முக்கியத்துவமானது என்பதில் ஐயமில்லை!

இ) தேவனுடைய பிள்ளைகள் தங்கள் பரலோகத் தகப்பனிடம் இருந்து ஏன் தூரமாக இருக்க வேண்டும்?

ஈ) தேவனிடமிருந்து பிரிக்கின்ற எதுவுமே பாவமாக இருக்கும்!

2. “அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்”

அ) பாவத்திலிருந்து மனம்திரும்பும்படி தேவன் எதிர்பார்க்கின்றார்.

ஆ) தேவனிடம் நெருங்கி வர எந்த உண்மையான முயற்சியும் இல்லை என்றால், எந்தவொரு பரிமாற்றமும் இருக்காது.

இ) கெட்ட குமாரன் தன் தந்தையிடம் திரும்பினால் மட்டுமே உண்மையான ஒப்புரவாகுதல் இருக்கும்.

3. பாவத்தை அழிக்க சரியான விதத்தில் அனுகுவது

அ) யாக்கோபு இந்த பிரச்சினையை நேரடியாகவே பேசுகிறார்.

ஆ) தவறான நபர்களிடம் “பாவிகள்” என்றே நேரடியாக சொல்கிறார்.

4. கைகளை குறித்த பிரச்சனை

அ) “உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்”

a) சுத்திகரிக்கப்பட வேண்டும்.

b) “கைகள்” என்ற பதம் முழு நபரையும் குறிக்கின்றது.

ஆ) “உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்”

a) இங்கு கைகள் மற்றும் இருதயம் இரண்டையும் இணைத்து சொல்கிறார்

b) பரிசுத்தப்படுத்துதல் மற்றும் சுத்திகரித்தல் இரண்டும் சேர்ந்தே இருக்கும்

இ) “இருமனமுள்ளவர்களே”

இந்த பிரச்சனையை குறித்துதான் யாக்கோபு ஆரம்ப அதிகாரத்தில் பேசினார்.(“இருமனமுள்ளவர்கள்” என்ற பிரச்சினை யாக்கோபு 1: 8-ல் குறிப்பிடப்பட்டுள்ளது). இந்த இடத்தில் மறுபடியும் அதை விரிவாக பேசுகிறார். ஜெபத்தில் தேவனைத் தேடும் போது ஆத்துமாவில் சந்தேகம் இருக்கக்கூடாது!

இருமனமுள்ளவன் தேவனிடத்தில் இருந்து எந்த ஒரு பதிலையும் பெற முடியாது!

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *