அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 15.10.2017

யாக்கோபு தின தியானம்

” ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்.”

வேதப்பகுதி: யாக்கோபு 4: 7

பிரச்சனைகளுக்கு ஆக்கப்பூர்வமான தீர்வை காணுதல்

எப்பொழுதும் யாக்கோபு பிரச்சனைகளை வெளிப்படையாகவும் முழுமைமையாகவும் தீர்க்கின்றவராக இருக்கின்றார். இந்த பகுதியில் அவர் பிரச்சனைகள் எவ்வாறு திறம்பட தீர்க்கப்பட முடியும் என்பதைப் பற்றிய முக்கியமான ஆலோசனைகளை அளிக்கிறார்.

“ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.” யாக்கோபு 4: 7

1. “ஆகையால்”

அ) இந்த இடைச்சொல் இந்த வசனத்திற்கும் முந்தைய வசனங்களுக்கும் இடையில் உள்ள இணைப்பைக் காட்டுகிறது.

ஆ) யுத்தங்கள் மற்றும் சண்டை போன்ற பிரச்சனைகளை கையாளும் அதே விஷயத்தைத்தான் யாக்கோபு இங்கு தொடர்ந்து பேசுகிறார் (யாக்கோபு 4: 1-6).

2. ” தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள் “

அ) இது அங்கு ஒரு அடிப்படை பிரச்சனையாக இருந்தது.

ஆ) கர்த்தராகிய ஆண்டவருக்குக் கீழ்ப்படியாதிருந்தார்கள்.

இ) அதற்குப் பதிலாக பின்வரும் காரியங்கள் இருந்தது: –

a) சுய விருப்பம்,

b) உலக மயக்கம்,

c) தேவனுடைய ஆவிக்கு எதிர்த்து நிற்பது,

d) ஆவியில் எப்பொழுதும் முரட்டாட்டத்தோடு இருப்பது.

ஈ) தேவனை மனதில் வைத்து இந்த பாவ பிரச்சனைகளை மேற்கொள்ளவேண்டும்.

3. “பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்”

அ) பிசாசு இந்த காரியத்தில் சம்பந்தப்பட்டிருக்கின்றான்.

ஆ) அவன் எதிர்க்கப்படவில்லை.

இ) அதற்கு பதிலாக அவனிடம் ஒரு வாஞ்சை இருந்தது.

a) அவனது சோதனைகள் எதிர்க்கப்படவில்லை.

b) அவன் உலகில் இருக்கும் அற்ப சந்தோஷத்தால் கவர்ந்திழுக்கிறான்.

c) அவனுக்கு எதிராக போரிட எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

ஈ) தேவனுடைய கிருபையினாலும் பலத்தினாலும் அவனை எதிர்க்க வேண்டும்.

4. “அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்”

அ) தேவனுடைய வல்லமையையும் அவருடைய நாமத்தையும் எதிர்க்க அவனால் முடியாது அதனால் அவன் ஓடிப்போவான்.

ஆ) அவன் வலுவான விசுவாசிக்கு எதிராக ஒரு பிடியைப் பெற முடியாது என்பதை அறிந்திருப்பதால் அவன் ஓடிப்போவான்.

இ) கர்த்தரே அவனை அப்பால் போகும்படி சொல்லுவதினால் அவன் ஓடிப்போவான்.

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *