
“அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே “
வேதப்பகுதி: யாக்கோபு 4: 6
கிருபையின் வாக்குத்தத்தம்
கிருபையின் வாக்குத்தத்தத்திற்கு நாம் தேவனுக்கு நன்றி சொல்வோம். புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களால் தேவக் கிருபையின் கோட்பாடு நம்முடைய இதயத்திற்கு அருகில் கொண்டுவரப்பட்டிருக்கின்றது! இங்கு பாவத்திற்கெதிரான போரில் கிருபையின் வாக்குத்தத்தத்தை யாக்கோபு மனதார பாராட்டுகிறார்.
“அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.” யாக்கோபு 4: 6
1. கிருபையென்னும் பரிசு
அ) அப்போஸ்தலர் கிருபையின் கோட்பாட்டை பற்றி விரிவாக எழுதினார்.
ஆ) கிருபை பின்வருபவையோடு தொடர்புடையது:
a) இரட்சிப்பு எபேசியர் 2: 8-9
b) அப்போஸ்தல ஊழியம் ரோமர் 1: 7
c) ஆவிக்குரிய வரங்கள் 1 கொரிந்தியர் 12: 4
d) உபத்திரவங்களை சமாளிக்க போதுமானதாக இருக்கிறது
2 கொரிந்தியர் 12: 9-10
2. ” அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே “
அ) தேவன் “அதிகமான கிருபையை” தருவதாக யாக்கோபு இங்கு கூறுகிறார்.
ஆ) உண்மையான விசுவாசியை இன்னும் அதிகமான தேவபக்தியுள்ளவனாக்க தேவன் உதவுகிறார்.
a) பரிசுத்த ஆவியானவர் மூலம்.
b) அதிக கிருபை மூலம்.
3. ” தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார் “
அ) கிருபையின் அர்த்தத்தை பெருமையுள்ளவன் புரிந்துகொள்ளமாட்டான்.
ஆ) பெருமையுள்ளவன், தேவனும் அவருடைய கிருபையும் தேவையில்லை என்று நினைக்கின்றான்.
இ) பெருமையுள்ளவனுக்கு தேவனுடைய பதில்.
a) அவர்களை எதிர்க்கிறார்.
b) அவர்களுக்கு எதிராக நிற்கிறார்.
c) அப்படிப்பட்டவர்களுக்கு கிருபையை கொடுத்தாலும் நிராகரிப்பார்கள் என்பதினால் அவர் கிருபையை கொடுப்பதில்லை.
4. “தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையை அளிக்கிறார்”
அ) மனத்தாழ்மையுள்ளவன் தன்னுடைய நிலையை புரிந்துகொள்கிறான்.
ஆ) அப்படிபட்டவன் மனித பலத்தினால் பாவத்தை மேற்கொள்ள முடியாது என்பதையும் புரிந்துகொள்கிறான்.
இ) பாவத்தோடு போராட தேவனுடைய கிருபைக்காக தாழ்மையுடன் அவரிடம் நாடுகிறான்.
ஈ) தாழ்மையுள்ளவர்களிடம் தேவன் கிருபையோடும் அன்போடும் இரங்கி அவரது கிருபையை தந்து பாவத்தை மேற்கொள்ள உதவுகிறார்.
