அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 13.10.2017

யாக்கோபு தின தியானம்

” நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர்…”

வேதப்பகுதி: யாக்கோபு 4: 5

பரிசுத்த வேதவாக்கியங்கள்

வேதாகமத்தை யாக்கோபு மிகவும் உறுதியான புரிந்து வைத்திருந்தார். அவரது நிருபத்தில் பயன்படுத்தப்படும் சில முக்கியமான வார்த்தைகள் பின்வருமாறு.

1. வார்த்தை யாக்கோபு 1:21, 22, 23

2. சுயாதீனப் பிரமணமானமாகிய பூரணப்பிரமாணம் யாக்கோபு 1:25

3. இராஜரீக பிரமாணம் யாக்கோபு 2: 8

4. வேதவாக்கியம் யாக்கோபு 4: 5

வேத எழுத்துக்களின் பயன்பாடு

வேதவாக்கியங்கள் நடைமுறை வாழ்க்கைக்கு மிகவும் பொருத்தமானது என்று யாக்கோபு நம்பினார்.

“நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறாரென்று வேதவாக்கியம் வீணாய்ச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா?” யாக்கோபு 4: 5

1. ” வேதவாக்கியம் வீணாய்ச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா?”

அ) வேதவாக்கியங்களை மேற்கோள் காட்டுதல்

a) யாக்கோபுக்கு வேதவசனங்களை நன்றாக அறிந்தவராக இருக்கின்றார்.

b) அது அதிகாரப்பூர்வமானது.

c) இது கோட்பாட்டிற்கும் வாழ்க்கைக்கும் பொருத்தமானது.

ஆ) வேதவாக்கியங்கள்

a) அவைகள் வீணாக எழுதப்படவில்லை.

b) அவைகளை படிக்கவும் புரிந்து கொள்ளவும் வேண்டும்.

c) அவைகள் நாம் கவனமாக கீழ்ப்படிய வேண்டியவைகள்.

2. “நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர்”

அ) தேவனுடைய ஆவியானவர் வாசமாயிருப்பதற்கான வாக்குத்தத்தம் தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டது (யோவேல் 2: 28-29, ஏசாயா 44: 3).

ஆ) இது இயேசு கிறிஸ்துவின் போதனைகளாலும் உறுதிபடுத்தப்பட்டது (யோவான் 3: 5-8).

இ) அப்போஸ்தலனாகிய பவுலும் இதை விவாதிக்கின்றார் (எபேசியர் 1: 13-14).

3. “வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறார்”

அ) தேவனுடைய ஆவியானவர் உண்மையான விசுவாசி ஒருவரை செயலற்ற நிலையில் இருப்பதை விரும்புவதில்லை.

ஆ) அவர் நம்மை பரிசுத்தமாக்குவதில் தீவிரம் காட்டுகிறார் (1 பேதுரு 1: 2).

இ) அவர் நம்மிடம் வைரக்கியத்தை உருவாக்குகிறார்.

பரிசுத்த வைராக்கியத்தினால், தேவனுடைய ஆவியானவர் நம்மை உலகத்தானாக இல்லாமல் தேவபக்தியுள்ளவராக்க வாஞ்சிக்கின்றார். ஆவியானவரின் இந்த செயல் ஒவ்வொரு உண்மையான விசுவாசியாலும் உணரப்படுகிறது. விசுவாசி ஒருவர் அவ்வப்போது பாவத்தில் விழக்கூடும், ஆனால் உள்ளே கிரியை செய்யும் ஆவியானவர், அப்படிபட்டவரை மனந்திரும்புதலுக்கும், கர்த்தராகிய தேவனிடத்திற்கு திரும்புவதற்கும், மறுமலர்ச்சி உண்டாக்குவதற்கும் செயல்படுகிறார்.

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *