அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 12.10.2017.

யாக்கோபு தின தியானம்

“நீங்கள் தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால்…”

வேதப்பகுதி: யாக்கோபு 4: 3

ஒரு ஆழமான பகுப்பாய்வு

முரண்பாடுகள் எப்பொழுதும் எளிதில் அகன்றுவிடாது. எனவே, யாக்கோபு இந்த பிரச்சனையை ஆழ்ந்த பகுப்பாய்வு செய்தார்.

“நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள். விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.” யாக்கோபு 4: 3-4

1. “நீங்கள் விண்ணப்பம் பண்ணியும் பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள்”

அ) சிலர் தேவனிடத்திற்கு திரும்பி ஜெபிக்க முயன்றார்கள்.

ஆ) அவர்களின் விண்ணப்பங்கள் கர்த்தரிடம் வைக்கப்படுகிறது.

இ) ஆனால் அவர்கள் கேட்ட காரியங்கள் அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை.

2. ” தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்.”

அ) தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால்

a) இதுதான் அடிப்படை பிரச்சனை.

b) தேவனுடைய சித்தத்திற்கு இசைவாய் இல்லாமல் இருந்ததை அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஆ) ” உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று ”

a) அவரிடத்தில் எதை கேட்டாலும் கொடுப்பார் என்ற எண்ணத்தில் எது வேண்டுமானாலும் கேட்கப்படுகிறது.

b) ஆனால் தேவன் கொடுக்கும் அருட்கொடைகள் வீணாக்கபடுகிறது .

c) தேவனுடைய அருட்கொடைகள் சுய நோக்கத்தோடு செலவழிக்கப்படுகிறது.

3. உலக சிநேகம்

அ) இது மோசமான வகையிலான “உலகத்தன்மை” ஆகும்.

ஆ) உலகத்துடன் இந்த வகையான உறவு “விபச்சாரம்” என்றே விவரிக்கப்படுகிறது.

இ) இந்த வகையான பிரச்சனையை பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகளில் பலர் விவரித்திருக்கிறார்கள்.

4. ” ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் “

அ) இந்த உலகத்தோடு ஒத்துப்போக விரும்புகிறவன்.

ஆ) அவன் உலகோடு ஒரு விபரீதமான நட்புக்குள் நுழைய விரும்புகிறான்.

இ) அவன் விரைவில் ஒரு உலகத்தான் ஆகிறான்; அப்படிப்பட்டவனின் வாழ்க்கையில் கொஞ்சமேனும் தேவபக்தியும் இருக்க வாய்ப்பில்லை.

5. ” தேவனுக்குப் பகைஞனாகிறான் “

உலகத்தைத் தேர்ந்தெடுக்கும் ஒருவன் தேவனுடைய நட்பை இழந்துவிடுகிறான் என்பது அடிப்படையான உண்மை. அதில் மோசம் என்னவெனில், அவனை அது தேவனுடைய எதிரியாக்கிவிடுகிறது! தேவனும் உலகமும் ஒப்புரவாக இருக்க முடியாது!

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *