அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 11.10.2017

யாக்கோபு தின தியானம்

“உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது?”

வேதப்பகுதி: யாக்கோபு 4: 1

உலகில் ஏற்படும் விரோதங்கள்

மனித வரலாற்றில் போர்கள் மிகவும் தவிர்க்கமுடியாத ஒரு பகுதி. சண்டைகள் அனைத்து நிலைகளிலும் போடபட்டிருக்கின்றன. லட்சக்கணக்கான உயிர்களை மோதல்களில் இழந்துள்ளனர். யுத்தம் என்பது ஒரு தீர்வை ஒருபோதும் கொண்டுவராது என்று எப்போதாவது மனிதர்கள் கற்றுக்கொண்டார்களா?

திருச்சபை

துரதிர்ஷ்டவசமாக, சபைகளிளும் மோதல்கள் இருந்திருக்கின்றது. யாக்கோபு இந்த பிரச்சனையை தன் வழக்கமான வெளிப்படையான வழியில் கையாள முயன்றார்.

உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்கள் அவயவங்களில் போர் செய்கிற இச்சைகளினாலல்லவா? நீங்கள் இச்சித்தும் உங்களுக்குக் கிடைக்கவில்லை; நீங்கள் கொலைசெய்தும், பொறாமையுள்ளவர்களாயிருந்தும், அடையக்கூடாமற்போகிறீர்கள்; நீங்கள் சண்டையும் யுத்தமும் பண்ணியும், நீங்கள் விண்ணப்பம் பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை.” யாக்கோபு 4: 1-2

1. “உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது”

அ) “போர்கள் மற்றும் சண்டைகள்” மோதல்களை பிரதிநிதித்துவம் செய்கின்றன.

ஆ) இவை மனிதர்களை கொல்லும் அளவுக்கான சரீர ரீதியான ஏற்படும் மோதல்களை குறிப்பிடுவது அல்ல.

இ) ஆனால் இவை சபையை பாதிப்படைய செய்யும் மோதல்களாகும்.

2. யாக்கோபு ஒரு வேதனையான பதிலை அளிக்கிறார்

அ) “அவயவங்கள்” என்பது மனிதனின் பல உறுப்புகள் இணைக்கப்பட்டிருப்பதை ஒரு குறிப்பதாகும். உதாரணமாக:

a) எண்ணங்கள்

b) ஆசைகள்

ஆ) “சுய திருப்திக்கான ஆசைகள்”

a) இவை சாதாரணமாக இருக்கலாம்.

b) ஆனால் இந்த சூழலில் பார்க்கும்போது, அது பாவம்.

இ) மோதல்கள் எதினால் வருகிறது

a) தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றாததால்.

b) இது அடுத்தவர்களை குறித்த ஏமாற்றங்களை வருவித்து மோதல்களுக்கு வழிவகுக்கிறது.

3. இச்சை, கொலை, கோபம், சண்டை, யுத்தம்

அ) இப்படிப்பட்ட காரியங்களில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

ஆ) அவர்கள் தங்கள் இருதயங்களிலும் திட்டங்களிலும் தேவன் இருக்க வேண்டும் என்று நினைக்கவே இல்லை.

இ) அவர்கள் ஜெபத்தில் தேவனைத் தேட தவறிவிட்டார்கள்.

ஈ) அவர்கள் வேண்டும் என்று விரும்பியவற்றை அவர்களுக்கு தேவன் வழங்கவில்லை.

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *