அனுதின ஆவிக்குரிய ஆகாரம். 26.08.2017.

யாக்கோபு தின தியானம்

சோதனைகளை… சந்தோஷமாக எண்ணுங்கள்.”

வேதப்பகுதி: யாக்கோபு 1: 2

வாழ்த்து அனுப்புதல்

அப்போஸ்தலனாகிய பவுல் விசுவாசிகளுக்கு வாழ்த்துக்களை அனுப்பியபோது எப்பொழுதும் மிகவும் கவனமாக இருந்தார். ஆனால் யாக்கோபு இதில் மிகவும் மாறுபட்டு இருந்தார். பொதுவாக மக்களை வாழ்த்துவதற்கு “கிரேவ்” என்ற கிரேக்க வார்த்தையை பயன்படுத்துவார்கள். அதைத்தான் இங்கு “வாழ்த்துகள்” என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மிகச் சுருக்கமான வாழ்த்துதலுக்கு பிறகு, யாக்கோபு தனது நிருபத்தின் மற்ற முக்கியமான காரியங்களுக்கு கடந்து செல்கின்றார்.

முதல் நூற்றாண்டில் இருந்த உபத்திரவங்களும் பாடுகளும்.

முதல் நூற்றாண்டில் ஆரம்பகால சபை அனேக பிரச்சினைகளை சந்திதது. அவற்றில் ஒருசிலவற்றை அப்போஸ்தலர் புத்தகம் நமக்கு விவரிக்கிறது: –

1. யூத அதிகாரிகள் மூலம் உபத்திரவம் எழுந்தது.

அ) பிரதான ஆசாரியனாகிய காய்பா தலைமையிலான நியாயசங்கம், சபை அப்போஸ்தலர்களை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரை பிரசங்கிக்க கூடாது என்று கட்டளையிட்டது (அப்போஸ்தலர் 4: 5-18).

ஆ) அப்போஸ்தலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் (அப்போஸ்தலர் 5:18).

இ) திருச்சபையின் முதல் இரத்த சாட்சியாகிய ஸ்தேவன் கல் எறிந்து கொல்லப்பட்டார். (அப்போஸ்தலர் 7:58).

2. சபை பரிசுத்தவான்களை துன்புறுத்த ஆட்கள் நியமிக்கப்பட்டார்கள் (அப்போஸ்தலர் 12: 1)

அ) இரத்த சாட்சியாக மரித்த முதல் அப்போஸ்தலர் யாக்கோபு (அப்போஸ்தலர் 12: 2).

ஆ) பேதுரு கைது செய்யப்பட்டார், ஆனால் அவர் தேவனால் அற்புதமாக விடுவிக்கப்பட்டார். (அப்போஸ்தலர் 12).

3. ரோம பேரரசன் ரோமில் இருந்த யூதர்களை தடை செய்திருந்தான்.

அ) முதல் கிறிஸ்தவர்கள் அணைவரும் யூதர்கள்.

ஆ) ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் ரோமில் தங்கள் வீட்டை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள் (அப்போஸ்தலர் 18: 2).

சிதறியிருக்கின்றவர்களுக்கு எழுதுகிறதாவது

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மீது உள்ள விசுவாசத்தின் காரணமாக பல்வேறு தேசங்களுக்கு சிதறிப்போன விசுவாசிகளுக்கு இரண்டு அப்போஸ்தலர்கள் கடிதங்களை எழுதினார்கள். பேதுருவும் யாக்கோபும் சிதறிய விசுவாசிகளுக்கு ஊக்கமளித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்பொழுது அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள் ” யாக்கோபு 1: 2

1. “என் சகோதரர்கள்

அ) யாக்கோபு சிதறிய விசுவாசிகளுடன் தன்னையும் ஒருவராக அடையாளப்படுத்திக்கொள்கின்றார்.

ஆ) அவர்கள் வெளிநாடுகளில் சிதறி இருக்கலாம், ஆனாலும் அவர்கள் சகோதரர்கள்.

இ) இது ஒரு புதிய அனுபவம் அல்ல.

# பழைய ஏற்பாட்டு நாட்களில் இஸ்ரவேலர் அசீரியாவிலும் பாபிலோனிலும் சிதறிப்போயிருந்தார்கள்.

# கடினமான சூழ்நிலைகளில் விசுவாசிகள் எப்படி சமாளிக்கவேண்டும் என்று கற்று இருப்பது அவசியம்.

2. “நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படுகையில் அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்

அ) அப்போஸ்தலனாகிய பேதுருவின் அணுகுமுறை போல் சந்தோஷமாக எண்ணவேண்டும்.

ஆ) விசுவாசிகளுக்கு வரும் சோதனைகள் கர்த்தருக்குள்ளான சந்தோஷத்தை ஒருபோதும் இழந்துவிட காரணமாக இருக்ககூடாது. (1 பேதுரு 1: 6-9).

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *