அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 10.09.2017.

யாக்கோபு தின தியானம்

“நீதியாகிய கனி…”

வேதப்பகுதி: யாக்கோபு 3:18

கனி கொடுத்தல்

நாம் எதை விதைக்கிறோமோ அதிலிருந்து வெளிப்படுவதுதான் இயற்கையாக வாழ்க்கையில் விளைந்து வரும் கனி. இதுதான் யாக்கோபு வெளிப்படுத்தும் வேதாகம உண்மையாகும்.

“நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது”. யாக்கோபு 3:18

1. “நீதியின் கனியானது”

அ) உண்மையான நீதி.

a) இது விசுவாசமாயிருப்பவருக்கு தேவனால் அருளப்படுகிறது.

b) அது பின்னர் நீதி மற்றும் நல்ல செயல்களில் வெளிப்படும்.

c) சரியான நீதி பொருத்தமான கனிகளில் தன்னை வெளிப்படுத்தும்.

ஆ) பொய்யான நீதி.

a) இது ஏமாற்று அல்லது மாய்மாலத்தில் முடிவடையும்.

b) இது நல்ல கனிகள் கொடுக்க முடியாது.

c) அது பொல்லாத மற்றும் கெட்ட செயல்களில் விளைகிறது.

2. “விதைக்கப்படுகிறது”

அ) நீதியை முதலில் இருதயத்தில் தேவனே விதைக்கிறார் (சுமத்தப்படும் நீதி).

ஆ) உண்மையான நீதியானது சோதிக்கப்பட வேண்டும்.

3. ” சமாதானத்திலே விதைக்கப்படுகிறது “

அ) உண்மையான நீதியை உடையவனே சமாதானமுள்ள மனிதன்.

ஆ)இயேசு சமாதானம் பண்ணுகிறவர்களை “பாக்கியவான்கள்” என்று அழைக்கிறார் (மத்தேயு 5: 9).

இ) இவர்கள் தேவனுடைய உண்மையான பிள்ளைகள்.

ஈ) நீதியும் சமாதானமும் ஒன்றாகவே இருக்கும்.

4. “சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே”

அ) தேவனுடைய உண்மையான பிள்ளைகள் ஒருபோதும் விவாதத்தை விதைக்க மாட்டார்கள்.

ஆ) அவர்கள் சமாதானத்தை உருவாக்க முற்படுவார்கள்.

a) முதலாவதாக, கிறிஸ்துவின் இரட்சிப்பினால் தேவனோடு சமாதானமாக இருக்க அழைப்பார்கள்.

b) இரண்டாவதாக, ஒருவருக்கொருவர் சமாதானமாக இருக்க உதவுவார்கள் (முடிந்தவரை).

எப்போதும் நல்ல கனிகளை கொடுக்க நாடுவது

உண்மையான நீதிமான் எப்போதும், தன் வயதான காலத்திலும் கர்த்தருக்காய் கனிகொடுப்பான். அவர்கள் கர்த்தருடைய ஆசீர்வாதத்தால், புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள். (சங்கீதம் 92: 12-15).

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *