அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 09.10.2017

யாக்கோபு தின தியானம்

“பரத்திலிருந்து வருகிற ஞானமோ …”

வேதப்பகுதி: யாக்கோபு 3:17

ஒரு சிறப்பான வித்தியாசம்

யாக்கோபு பூமிக்குரிய ஞானத்திற்கும் பரத்திற்குரிய ஞாந்த்திற்கும் ஒரு மாபெரும் வித்தியாசத்தை காண்பித்தார். இந்த வித்தியசம், உண்மையான ஞானம் என்ன என்பதை அடையாளம் கண்டுகொள்ள ஒருவருக்கு உதவுகிறது.

“பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது.” யாக்கோபு 3:17

1. ” பரத்திலிருந்து வருகிற ஞானமோ “

அ) நாம் ஏற்கனவே விவாதித்த ஞானத்திற்கு இந்த ஞானம் நேர்மாறாக இருக்கிறது (யாக்கோபு 3: 14-16).

ஆ) உண்மையான ஞானத்தின் ஆதாரம் பரத்திலிருந்து (பரத்திலிருக்கிற தேவன்).

2. எட்டு சிறப்பம்சங்கள் இதில் அடங்கும்: –

அ) ” முதலாவது சுத்தமுள்ளதாயும் ”

a) கறையில்லாத அல்லது தூய்மையாக இருக்கிறது.

b) ஞானம் என்பது முதலில் தூய்மையானதாக இருக்க வேண்டும் என்பது வெளிப்படையான காரணங்களுக்காக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது!

c) ஞானத்தின் தூய்மை மற்ற எல்லா சிறப்பம்சங்களையும் பாதிக்கும்.

ஆ) ” பின்பு சமாதானமும் ”

a) குழப்பம் மற்றும் தீய செயல்களை விளைவிக்கும் பேய்த்தனமான ஞானத்திற்கு இது முற்றிலும் மாறாக இருக்கிறது.

b) அமைதியான ஞானம் இயல்பாகவே “தூய்மை” யைப் பின்பற்றுகிறது.

இ) ” சாந்தமும் ”

இது “இரக்கம், சகிப்புத்தன்மை, எதையும் ஏற்றுக்கொள்ளுதலில்” காணலாம்.

ஈ) ” இணக்கமுமுள்ளதாயும் ”

a) ஞானம் மற்றவர்களின் கருத்துக்களையும் கேட்கும்.

b) ஞானமுள்ள நபர் மற்றவரின் கருத்துக்கள் சிறந்ததாக இருக்கும்பட்சத்தில் அதை ஏற்றுக்கொள்கிறார்.

உ) ” இரக்கத்தாலும் ”

இரக்கம் என்பது “கருணையாக” இருப்பதை குறீக்கிறது.

ஞானமுள்ளவர் “இரக்கமுள்ள கருனையால் நிறைந்தவராக இருப்பார்”.

ஊ) ” நற்கனிகளாலும் நிறைந்ததாயும் ”

கனி நிறைந்த வாழ்க்கையைத்தான் யாக்கோபு ஒரு அளவுகோலாக பயன்படுத்தினார்; உண்மையான ஞானம் “நல்ல கனிகளைக்” கொடுக்கும்.

எ) ” பட்சபாதமில்லாததாயும் ”

மெய்யான விசுவாசம் இருப்பதைப் பற்றி யாக்கோபு எழுதினதற்கு இது பொருத்தமாக இருக்கிறது (யாக்கோபு 2: 1-4).

ஏ) ” மாயமற்றதாயுமிருக்கிறது ”

உண்மையான ஞானம் மாய்மாலம் செய்யாது!

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *