அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 08.10.2017.

யாக்கோபு தின தியானம்

” இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல்…”

வேதப்பகுதி: யாக்கோபு 3:15

ஞானத்தின் ஆதாரத்தைக் தேடுதல்

தங்களுக்கு ஞானம் இருப்பதாக பொய்யாக கூறிக்கொள்பவர்களின் ஞானத்திற்கான ஆதாரத்தை யாக்கோபு கண்டுபிடித்தார்,

“இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல், லௌகிக சம்பந்தமானதும், ஜென்மசுபாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது. வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு.” யாக்கோபு 3: 15-16

1. ” இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிறதாயிராமல் “

அ) இந்த ஞானத்திற்கான ஆதாரம் தேவனில்லை என்று யாக்கோபு கூறுகிறார்.

ஆ) தேவனிடமிருந்து வரும் ஞானம் கீழ்கண்டவைகளோடு இணைந்திருக்க முடியாது:

a) கசப்பான வைராக்கியம் மற்றும் விரோதம்.

b) அல்லது “பெருமை” மற்றும் “பொய்”.

2. அத்தகைய ஞானத்தின் ஆதாரம்

(மூன்று வழிகளில் இருக்கலாம்)

அ) லௌகிக சம்பந்தமானதும்

பூமிக்குரிய ஞானம் (மனிதனால் உருவாக்கப்பட்டவை)

ஆ) ஜென்மசுபாவத்திற்குரியது

“இயற்கையான ஞானம்” (ஆவிக்குரியது அல்ல)

இ) பேய்த்தனத்துக்குரியது

மிகவும் பொல்லாததுமான பிசாசிடமிருந்து வரும் ஞானம்.

3. ” வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ “

அ) வைராக்கியம் மற்றும் விரோதம் என்பவைகள் உணர்வதை விட மோசமாக இருக்கும்.

அ) அவைகள் “இயல்பானவைகள்” என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுவிடமுடியாது.

4. அங்கே கலகமும்

அ) கிறிஸ்துவ சமூகத்தில் ஒற்றுமை இழந்து காணப்படுவது ஆபத்தான ஒன்றுதான்.

ஆ) கலகம் “குழப்பம்” என்ற கருத்தை வலியுறுத்துகிறது.

a) ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கையின்மை உருவாகிறது.

b) ஒருவர் மீது ஒருவருக்கு அவநம்பிக்கை மேலோங்கி நிற்கும்.

5. ” சகல துர்ச்செய்கைகளுமுண்டு “

அ) பேய்த்தனத்துகுரிய ஞானம் இருக்கும் இடத்தில் எல்லா பொல்லாங்கும் எழும்புவதற்கு ஏது உண்டாயிருக்கும்.

ஆ) வைராக்கியம்,விரோதம், தற்பெருமை மற்றும் பொய் என்பவைகள் “முதல்-கனிகள்”.

இ) மற்ற பொல்லாத காரியங்களும் எழும்பும், பெரும் தீங்கையும் விளைவிக்கும்.

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *