அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 06.10.2017.

யாக்கோபு தின தியானம்

” உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் யார்?”

வேதப்பகுதி: யாக்கோபு 3:13

கர்ப்பனையான ஞானம்

பலர் தங்களை ஞானத்தை உடையவர்கள் என்று எண்ணுகிறார்கள். ஞானமும் அறிவும் இயற்கையாகவே இவர்களிடம் இருக்கின்றது என்ற யூகம் பொதுவாக இருக்கின்றது: –

1. வயதானவர்கள்

2. செல்வந்தர்கள்

3. புத்திசாலிகள்

உண்மையான ஞானம்

பின்வரும் வசனத்தில் யாக்கோபு உண்மையான ஞானத்தைப் பற்றிய காரியத்தை விவாதித்தார்.

“உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன்.”
யாக்கோபு 3:13

1. ” உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் யார்?”

அ) ஞானம் மற்றும் புரிந்திருத்தல் மிகவும் நெருக்கமான தொடர்புடையது.

ஆ) “விசுவாசம்” என்ற விஷயத்தில், யாக்கோபு இந்த நல்லொழுக்கங்கள் என்ன என்பதை வரையறுக்க முயன்றார்.

2. மூன்று காரியங்கள் சிறப்பம்சமாக வலியுறுத்தபடுகிறது

அ) “நல்ல நடக்கை”

a) ஞானம் என்பது அதிக அளவிலான அறிவு கொண்ட விஷயம் அல்ல.

b) உண்மையிலேயே ஞானமும் புரிந்துணர்வும் உள்ளவர் “நல்ல நடக்கையை” உடையவராக இருப்பார்.

ஆ) “கிரியைகள்”

a) விசுவாசம் இயல்பாகவே நற்கிரியைகளில் தன்னை வெளிப்படுத்துகிறது.

b) ஞானமும் நல்ல கிரியைகளில் தன்னை இயல்பாகவே வெளிப்படுத்தும்.

இ) “சாந்தம்”

a) இது ஒருவருடைய “குணாதிசயத்தை” குறிக்கும்.

b) ஞானம் மற்றும் நல்ல புரிதல் உள்ள நபர் மென்மையான மற்றும் கருணையுள்ள (உண்மையான சாந்தம்) நபராக இருப்பார்.

கனிகள் கொடுப்பதின் சிறப்பம்சங்கள்.

இந்த முக்கியமான சத்தியத்தை கர்த்தராகிய இயேசு கற்பித்தார். கர்த்தராகிய இயேசு கற்ப்பித்தவைகளை யாக்கோபு நன்கு அறிந்திருந்தார்.

“அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது. ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.” மத்தேயு 7: 17-18, 20

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *