அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 05.10.2017.

யாக்கோபு தின தியானம்

ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா?…”

வேதப்பகுதி: யாக்கோபு 3:11

இயற்கையிலிருந்து எடுத்துக்காட்டு

தேவனைத் துதிப்பதற்கும், மனிதர்களை சபிப்பதற்கும் ஒரே நாவை பயன்படுத்த முடியாது என்று தனது வாதத்தை யாக்கோபு முடிவுக்கு கொண்டு வருகிறார்! ஒரு முக்கியமான உண்மையை நமக்கு எடுத்துரைக்க அவர் இயற்கையிலிருந்து உவமைகளைப் பயன்படுத்தினார்!

“ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா? என் சகோதரரே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும், திராட்சச்செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா? அப்படியே உவர்ப்பான நீரூற்றுத் தித்திப்பான ஜலத்தைக் கொடுக்கமாட்டாது.” யாக்கோபு 3: 11-12

1. முதல் உதாரணம்

அ) ஒரு இலக்கண கேள்வி எழுப்பப்பட்டது.

ஆ) ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா?

இ) பதில் தெளிவாக இருக்கிறது!

2. இரண்டாம் உதாரணம்

அ) அத்திமரம் ஒலிவப்பழங்களை கொடுக்குமா?

ஆ) மற்றொரு கேள்விக்கு இங்கு பதில் தேவையேயில்லை.

3. மூன்றாவது உதாரணம்

அ) திராட்சச்செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா?

ஆ) மற்றொரு கேள்வியையும் நாம் பார்க்கின்றோம்.

4. அப்படியே உவர்ப்பான நீரூற்றுத் தித்திப்பான ஜலத்தைக் கொடுக்கமாட்டாது

அ) உப்பு நீர்

ஆ) புதிய நீர்.

கொண்டுவர விரும்பிய ஒரு முக்கியமான உண்மை

நாவின் துஷ்பிரயோகத்திற்கு எதிராக யாக்கோபு ஏன் மிகவும் வலுவாக எழுதினார் என்று உணர்வது மிகவும் அவசியம். அவர் ஒருவேளை பின்வரும் பிரச்சனையை தீர்க்க முயன்றிருக்கலாம்: –

1. நாவின் துஷ்பிரயோகத்தின் மூலம் ஏற்படும் ஆபத்தினை பற்றி அறியாமை இருந்ததினால்.

2. நாவு எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பற்றி அலட்சியமாக இருந்தது.

3. நாவை தவறாகப் பயன்படுத்துவோருக்கு இயல்பாக இருக்கும் இருதய கடினத்தன்மை.

4. நாவு தவறாக பயனபடுத்துவது மிகவும் கொடிய பாவம் என்று உணராதிருப்பது.

5. நாவை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்ற ஒழுக்கம் இல்லாமல் இருப்பது.

6. நாவை தவறாக பயன்படுத்துவதற்கு கணக்கு கொடுக்கவேண்டும் என்ற அறிவு இல்லாமை.

7. நாக்கின் துஷ்பிரயோகம் எவ்வளவு சேதத்தை விளைவிக்கிறது என்ற விழிப்புணர்வு இல்லாதது.

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *