அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 03.10.2017.

யாக்கோபு தின தியானம்

” நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது.”

வேதப்பகுதி: யாக்கோபு 3: 8

அடக்க முடியாத நாவு

நாவு என்பது எவ்வளவு கட்டுக்கடங்காத ஒன்று என்பதை யாக்கோபு நன்கு அறிந்திருந்தார். எனவே, அதன்மீது அவர் தனது கவனத்தை செலுத்தினார்.

சகலவிதமான மிருகங்கள், பறவைகள், ஊரும்பிராணிகள், நீர்வாழும் ஜெந்துக்கள் ஆகிய இவைகளின் சுபாவம் மனுஷசுபாவத்தால் அடக்கப்படும், அடக்கப்பட்டதுமுண்டு. நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது. யாக்கோபு 3: 7-8

1. ” மனுஷசுபாவத்தால் அடக்கப்படும் “

அ) மேற்கூறியபடி யாக்கோபு சரியாகவே நிதானித்திருக்கிறார்.

ஆ) மனிதர்கள் பல்வேறு வகையான உயிரினங்களை கட்டுப்படுத்திவிடுகிறார்கள்.

a) மிருகங்கள்

b) பறவைகள்

c) ஊரும்பிராணிகள்

d) நீர்வாழும் ஜெந்துக்கள்

2. “நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது “

அ) இது ஒரு பலமான அறிக்கை; இரண்டு விஷயங்கள் இதில் வலியுறுத்தப்பட்டு உள்ளன:

ஆ) ” அது அடங்காததும் பொல்லாங்குள்ளதும் ”

a) அடங்காதது என்னும்போது மிகவும் கடினமான ஒன்று என்று தெரிகிறது.

b) பொல்லாங்கு என்பதை சுலபமாக கட்டுப்படுத்திவிட முடியாது.

c) இந்த இரண்டு அம்சங்கள் இணைந்திருப்பதை அடக்குவது என்பது கடினமானதுதான்.

இ) ” சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது ”

a) நாவு தவறாக பயன்படுத்தபடும்போது அழிவை கொண்டுவரும்.

b) இது “கொடிய விஷம்” என்று விவரித்தால் அது மிகைப்படுத்தலாகாது.

c) ஒருசில கொடிய விஷத்திற்கு விஷமுறிவே கிடையாது என்று மூதாதேயர்களுக்கு தெரியும்

ஈ) மனிதன் தன் நாவை எளிதில் கட்டுப்படுத்த முடியாது என்று யாக்கோபு அறிவுறுத்துகிறார்.

3. தேவனால் நாவை அடக்க முடியுமா?

அ) நிச்சயம்!

ஆ) குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு அவர் தமது வல்லமையைப் தருகிறார்.

c) தேவன் முதலில் நமது இருதயத்தை சுத்தப்படுத்தி மாற்ற வேண்டும்; பிறகு நாவு மாறிவிடும்!

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *