அனுதின ஆவிக்குரிய ஆகாரம். 02.10.2017.

யாக்கோபு தின தியானம்

“நாவும் நெருப்புதான் …”

வேதப்பகுதி: யாக்கோபு 3: 6

கட்டுப்படுத்தபடாத நாவின் விபரீதங்கள்

கட்டுப்படுத்தப்படாத நாக்கு எவ்வளவு ஆபத்தானது என்பதை யாக்கோபு தொடர்ந்து விவரிக்கின்றார்.

“நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது!”
யாக்கோபு 3: 6

1. “நாவும் நெருப்புதான்”

அ) ஒருவேளை யாக்கோபின் நினைவில் கோடை நாட்களில் தீயின் கொடூரம் எவ்வளவு அழிவுக்கேதுவானதாக இருக்கும் என்று நினைத்துப் பார்த்திருக்கலாம்.

ஆ) மிகப்பெரிய வனப்பகுதிகள் தீயினால் அழிந்துவிடுகிறது; அந்த அழிவு ஒரு சிறிய நெருப்பில்தான் தொடங்குகிறது.

2. “அது அநீதி நிறைந்த உலகம்”

அ) நாவு ஆபத்தானது.

ஆ) அதை “அநீதி நிறைந்த உலகத்திற்கு” ஒப்பிடலாம்.

3. “இது முழு சரீரத்தையும் கறைப்படுத்துகிறது”

அ) இந்த இடத்தில் “சரீரம்” என்ற வார்த்தை மனித சரீரத்தை குறிக்கும் வார்த்தை அல்ல.

ஆ) கிறிஸ்துவின் சரீரமாகிய சபையைத்தான் யாக்கோபு இங்கு குறிப்பிடுகிறார்.

தவறான போதனைகள் கிறிஸ்துவின் சரீரத்தை மோசமாக பாதிக்கலாம்.

தவறான கோட்பாடுகள் சபையை பிளவுகளை ஏற்படுத்தும்.

அது கிறிஸ்துவின் சரீரத்திற்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.

4. “காட்டு தீ இயற்கையாக பற்றுகிறது”

அ) தீ எரிய ஆரம்பித்தபிறகு அதை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்.

ஆ) இதற்கு பிற காரணங்களும் இருக்கிறது (இவை இயற்கையின் ஒரு அங்கம்).

a) காய்ந்து போன மரங்கள்

b) உலர் காற்று

இ) இவைகள் “காட்டு தீ” அதிகமாக காரணமாகிறது.

5. ” நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது!”

அ) யாக்கோபு தனது கவனத்தை விசுவாசிகளிடத்தில் திருப்புகிறார்.

நாவை சரியாக கட்டுப்படுத்தாமல் விடும்போது அது காட்டு தீயைப்போல் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆ) “நரகம்” என்பது சாத்தானுக்கும் அவனுடைய பிசாசுகளின் கூட்டத்திற்குமான இடமாயிருக்கிறது

இ) கிறிஸ்துவின் சரீரத்தை பாதிப்பதற்கான எந்த சூழ்நிலையையும் அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்.

ஈ) ஆம் விசுவாசியின் கட்டுப்படுத்தபடாத நாவு சபைக்கு மோசமான அழிவை கொண்டுவரும்!

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *