அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 01.10.2017.

யாக்கோபு தின தியானம்

“சிறிய உறுப்பாகிய நாவு…”

வேதப்பகுதி: யாக்கோபு 3: 5

பிரச்சனையான நாவு

பின்வரும் பகுதியில் கட்டுப்பாடற்ற நாவை குறித்து யாக்கோபு சுருக்கமாகப் பேசினார்.

“உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.” யாக்கோபு 1:26

அவர் இந்த பகுதியில் அதே விஷயத்தை மட்டும் விரிவாக எடுத்துக் கொள்கிறார்.

 “பாருங்கள், குதிரைகள் நமக்குக் கீழ்ப்படியும்படிக்கு அவைகளின் வாய்களில் கடிவாளம்போட்டு, அவைகளுடைய முழுச்சரீரத்தையும் திருப்பி நடத்துகிறோம். கப்பல்களையும் பாருங்கள், அவைகள் மகா பெரியவைகளாயிருந்தாலும், கடுங்காற்றுகளால் அடிபட்டாலும், அவைகளை நடத்துகிறவன் போகும்படி யோசிக்கும் இடம் எதுவோ அவ்விடத்திற்கு நேராக மிகவும் சிறிதான சுக்கானாலே திருப்பப்படும். அப்படியே, நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது!
யாக்கோபு 3: 3-5

1. குதிரைகளை கட்டுப்படுத்த பயன்படும் கடிவாளத்தை பற்றிய எடுத்துக்காட்டு

அ) ஒரு குதிரையின் வாயில் பொருத்தப்பட்ட கடிவாளத்தைவிட குதிரை பெரியதாகத்தான் உள்ளது.

ஆ) ஆனாலும் கடிவாளம் குதிரைகளை பாதித்து திறம்பட கட்டுப்படுத்துகிறது.

2. சுக்கான் பற்றிய எடுத்துக்காட்டு

அ) ஒரு சுக்கான் கப்பலோடு ஒப்பிடப்படும்போது அளவில் மிகவும் சிறியதாக உள்ளது.

ஆ) கடலில் கப்பல் செல்வதற்கு வலிமையான காற்று தேவைப்படுகிறது.

இ) ஆனால் சுக்கான் கப்பல் போகவேண்டிய திசையை தீர்மானிக்கும்.

ஈ) மாலுமி கப்பலின் திசையை சுக்கானால் கட்டுப்படுத்திவிட முடியும்.

3. நாவின் எடுத்துக்காட்டு

அ) நாக்கு உண்மையில் உடலில் ஒரு சிறிய உறுப்புதான்.

ஆ) ஆனால் அது பெரும் தாக்கத்தைக் கொண்டுள்ளது.

4. ஒரு சிறிய நெருப்பின் உதாரணம்

அ) ஒரு பெரிய நெருப்பு சிறிய நெருப்பிலிருந்துதான் தொடங்குகிறது.

ஆ) ஒரு சிறிய நெருப்பு காட்டில் பெரும் சேதத்தையே ஏற்படுத்திவிடும்.

நாவின் வல்லமை

யாக்கோபு நாவினால் ஏற்படும் ஆபத்தை குறித்து அதிகமாக சுட்டிக்காட்டுகிறார். ஒருவன் தவறாகப் போதிக்கிறவனாக இருந்தால் அவன் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையை மோசமாக பாதித்துவிட முடியும்.

1. அதனால் பெரும் சேதம் ஏற்படக்கூடும்.

2. நாவு சரீரத்தின் ஒரு “சிறிய உறுப்புதானே” என்று அற்பமாய் எண்ணி ஒதுக்கிவிடமுடியாது.

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *