அனுதின ஆவிக்குரிய ஆகாரம். 25.08.2017

யாக்கோபு தின தியானம்

வேதப்பகுதி:யாக்கோபு 1: 1

யாக்கோபு புத்தகத்தின் முதல் வாசகர்கள்

ஒவ்வொரு ஆசிரியரும் தன்னுடைய வாசகரோடு நல்ல உறவு இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். யாக்கோபு இந்த நிருபத்தை பெற்றக்கொண்டவர்களை இவ்வாறு விவரிக்கின்றார்.

“பன்னிரண்டு கோத்திரங்களுக்கு வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது.”
யாக்கோபு 1:1

1. “பன்னிரண்டு கோத்திரங்களுக்கும்”

அ) இந்த வாக்கியத்தை நாம் எப்படி புரிந்து கொள்ள வேண்டும்?

ஆ) யாக்கோபு தனது வாசகர்களை ஏன் இந்த விதத்தில் அழைக்கின்றார்?

2. மேலோட்டமான அர்த்தம்

அ) இது பொதுவாக இஸ்ரேல் தேசத்தை குறிக்கும் பதம்.

ஆ) இஸ்ரேல் என்பது பன்னிரெண்டு கோத்திரத்தை கொண்டதாக இருந்தது.

3. புரிந்துகொள்ள வேண்டிய அர்த்தம்

அ) புறஜாதிகளைவிட யூதர்களை அவர் ஒருபோதும் உயர்வாக மதிப்பிடவில்லை.

ஆ) அவர் மேலும் இரண்டு பிரிவுகளையும் பிரிக்கவும் விரும்பவில்லை.

இ) இரண்டு பிரிவினர்களுக்கிடையில் முதல் திருச்சபையில் இருந்த பிரச்சினைகள் பற்றி அவர் நன்கு அறிந்திருந்தார்.

ஈ) யாக்கோபு இரு பிரிவினர்களுக்கிடையிலான சமரச அணுகுமுறையை மேற்கொண்டிருந்தார்.

உ) இதற்கு எருசலேம் கவுன்சில் ஒரு ஆரோக்கியமான முடிவை கொண்டுவந்தது. (அப் 15).

ஊ) புறஜாதியாரும் இஸ்ரவேலரோடு தேவனுடைய ராஜ்யத்தில் சமமாக கருதப்படுவார்கள்.

4. ஆழமான நோக்கத்தைக் கொண்ட அர்த்தம்

அ) புறஜாதி மக்களுக்கான ஊழியத்தில் கவனம் செலுத்த ஒருசிலர் இருந்தார்கள்.

ஆ) பவுல் புறஜாதிகளுக்கென்றே அப்போஸ்தலனாக இருந்தார்.

இ) இந்த ஊழியத்தில் சீலா, பர்னபா குறிப்பிடத்தக்க நபர்களாக இருந்தனர்

ஈ) சிலர் யூதர்களுக்கென்று ஊழியம் செய்ய பிரத்தியேகமாக தங்களை அர்ப்பணித்திருந்தார்கள்.

உ) பேதுரு யூதர்களுக்கு முன்னணி அப்போஸ்தலனாக இருந்தார்.

ஊ) யாக்கோபு இந்த ஊழியத்திற்கு மிக உறுதியாக அர்பணிப்போடு இருந்தார்.

5. “சிதறியிருக்கின்ற”

அ) ஆரம்பத்தில் உபத்திரவத்தின் காரணமாக அநேக விசுவாசிகள் சிதறிப்போனார்கள்.

ஆ) சிதறிப்போயிருந்த யூத விசுவாசிகளிடம்தான் யாக்கோபு சென்றார்.

பன்னிரண்டு கோத்திரங்கள்” என்ற இந்த சொற்றொடர் பல யூத இதயங்களை தொடும் ஒரு பதமே!

mm

Author: Stephen James

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *