அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 28.09.2017.

யாக்கோபு தின தியானம்

“கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது…”

வேதப்பகுதி: யாக்கோபு 2:26

தவறான போதனைகளுக்கு எதிரான போராட்டம்

அப்போஸ்தலனாகிய யாக்கோபு தவறான போதனைகளுக்கு எதிர்த்து நின்றார். தவறான போதனைகள் புதிய ஏற்பாட்டு திருச்சபைகளுக்கு மிகுந்த சவாலாக இருந்தது!

தவறான போதனைகளை எதிர்க்க போராட்டம் தேவை.

தவறான போதனைகள் மிகவும் மோசமானது. தவறான போதனைகளின் விளைவுகள் கவனிக்கப்பட வேண்டும்: –

1. இதனால் மக்கள் ஏமாற்றப்பட்டுவிடுகிறார்கள்.

2. இதினால் அவர்கள் பின்மாற்றத்திற்கு வழிநடத்தப்படுகிறார்கள்.

3. விசுவாசத்தை குறித்து தவறான புரிதல் இருக்கும்போது பின்வரும் விளைவுகளை ஏற்பட்டுவிடும்:

அ) அவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமானக்கப்படுகிறதில்லை.

ஆ) அவர்கள் இரட்சிக்கப்படமுடியாது.

இ) அவர்களுடைய தவறான விசுவாசத்தை தங்கள் வாழ்க்கையிலும் ஊழியத்திலும் அவர்களால் பயன்படுத்த முடியாது.

ஈ) அவர்கள் பிரயோஜனமில்லாத “செத்த விசுவாசத்தோடே” வாழ்க்கையை கடந்து போய்விடுவார்கள்.

உ) அவைகளினால் அடுத்தவர்களும் மோசமாக பாதிக்கப்படலாம்.

இதனால்தான், விசுவாசத்தை குறித்த தவறான புரிந்துணர்வு பிரச்சனைக்குத் தீர்வு காண நேரம் எடுத்துக்கொண்டது யாக்கோபு அவர்களுக்கு சரியானதாகவே இருந்தது! தவறான போதனை பற்றிய பிரச்சனையை கையாள்வதில் நல்ல விடாமுயற்சியையும், திறனையும் காட்டினார்

ஒரு இறுதி அறிக்கை

உண்மையான விசுவாசத்தைப் பற்றிய இறுதி அறிக்கையைத் கொடுக்க வேண்டிய அவசியத்தினை யாக்கோபு உணர்ந்திருந்தார்.

அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது. யாக்கோபு 2:26

1. இருக்கூறுகள்

அ) யாக்கோபு இருக்கூறு கோட்பாட்டை நம்பினார்.

ஆ) ஒரு மனிதன் இரண்டு பகுதிகளால் உண்டாக்கப்படுகிறான்:

a) சரீரம்

b) ஆவி

இ) ஆவி இல்லாமல் சரீரம் செத்துவிட்டது!

2. “அதுபோலவே கிரியையில்லாத விசுவாசம் செத்ததாயிருக்கிறது”

அ) இருக்கூறுகள் யோசனை இங்கு பயன்படுத்தப்படுகிறது.

ஆ) இருக்கூறுகளும் கவனிக்கப்படுகிறது: –

a) விசுவாசமும் இருக்கவேண்டும்.

b) கிரியைகளும் இருக்க வேண்டும்.

விசுவாசம் ஒருபோதும் தனியாக இருக்காது! கிரியை இல்லாவிட்டால், “விசுவாசம் செத்துவிட்டது” என்பது உண்மையே!

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *