அனுதின ஆவிக்குரிய ஆகாரம். 27.09.2017.

யாக்கோபு தின தியானம்

“ராகாப் என்னும் வேசி …”

வேதப்பகுதி: யாக்கோபு 2:25

ஒரு சுவாரசியமான உதாரணம்

“உண்மையான விசுவாசத்தை” விளக்க அனேகரை தெரிந்தெடுத்திருக்கலாம், ஆனால் யாக்கோபு தன் செயல்களால் அவளது விசுவாசத்தை நிரூபித்தவளாகிய ராகாப் என்னும் வேசியை இங்கு தெரிவு செய்தது சுவாரசியமாகதான் இருக்கிறது.

அந்தப்படி ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாய் அனுப்பிவிட்டபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்?
யாக்கோபு 2:25

1. “ராகாப் என்னும் வேசி”

அ) இது இஸ்ரவேலர் யோசுவாவின் தலமையில் கானான் தேசத்தை சுதந்தரித்த காலத்தைக் குறிக்கின்றது.

ஆ) ராகாபின் சம்பவத்தை யோசுவா 2 ல் காணலாம்.

2. “அந்தப்படி”

அ) ஆபிரகாம் உறுதியான விசுவாசமுள்ளவனாக இருந்தான்; அவன் தேவனுடைய வாத்தைக்கு கீழ்ப்படிந்து தனது குமாரனை பலியிட ஒப்புகொடுத்தபோது இது நிரூபிக்கப்பட்டது.

ஆ) ராகாபும் விசுவாசம் கொண்டிருந்தாள், அதை இஸ்ரவேலராகிய இரண்டு வேவுகாரர்கள் கானானிலிருந்து தப்பிப்போக உதவி செய்தபோது நிரூபிக்கப்பட்டது.

3. “கிரியையினால் நீதிமானாக்கப்படாள்”

அ) ராகாப் முதலில் தேவனிடத்தில் மறைமுகமாக விசுவாசம் கொண்டிருந்தாள் என்பதே உண்மை.

ஆ) இந்த விசுவாசம் அவளிடத்தில் கீழ்காணும் விதத்தில் இருக்கவில்லை

a) கொள்கை ரீதியில்.

b) அனுதின மத சடங்காச்சார கடைப்பிடித்தலில்.

இ) அவரது விசுவாசம் அவரது கிரியைகளால் நிரூபிக்கப்பட்டது.

a) தன் ஜீவன் ஆபத்தில் இருந்தாலும் இஸ்ரவேலிலிருந்து வந்த வேவுகாரர்களை மறைத்தாள்.

b) இஸ்ரவேலராகிய வேவுகாரர்கள் தப்பிக்க உதவினதற்காக அவர் தூக்கிலிடப்பட்டிருக்கலாம்.

4. ராகாப் தேவனை எப்படி விசுவாசித்தாள்?

அ) தேவன் தம் மக்களாகிய இஸ்ரவேலருக்கு செய்ததைப் பற்றி அவள் கேள்விபட்டிருந்தாள் (யோசுவா 2: 9-13).

ஆ) கானான் இஸ்ரவேலரால் பிடிக்கப்படும் என்று அவளுக்குத் தெரியும் (யோசுவா 2: 9).

இ) அவள் யெகோவா தேவனைப் பற்றிய அறிவை வெளிப்படுத்தினாள் (யோசுவா 2: 9-11).

ஈ) அவளும் அவளுடைய குடும்பமும் மரணத்திலிருந்து காப்பாற்றப்படவேண்டும் என்று வேண்டிக்கொண்டாள் (யோசுவா 2: 12-13).

விசுவாசமும் கிரியையும்

இங்கு யாக்கோபு அவர்களின் வாதம் என்னவெனில், ராகாப் தேவனைப் பற்றிய அறிவும் விசுவாசம் மாத்திரம் கொண்டிருந்து, அதை செயலில் காட்டாமல் இருந்திருந்தால், அவள் நீதிமானாக்கப்பட்டிருக்கமாட்டாள். அவளும் அவளுடைய குடும்பமும் எரிகோவுக்கு எதிரான போரில் கொல்லப்பட்டிருப்பார்கள்!

“கிரியைகளுக்கு” அதிக முக்கியத்துவம் கொடுத்து பேசுவதினால் “விசுவாசம்” குறைவான முக்கியத்துவம் வாய்ந்தது என்று அர்த்தமல்ல! விசுவாசமே தேவனிடமிருந்து நீதியை கொண்டுவருகிறது! ஆனால் அது உண்மையான விசுவாசமாக இருக்கும்போது மட்டுமே! உண்மையான விசுவாசம் இயல்பாகவே கிரியைகளில் வெளிப்படும்! இதுவே யாக்கோபு நிறுவ முயன்ற உண்மை!

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *