அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 26.09.2017.

யாக்கோபு தின தியானம்

“விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சிசெய்து…”

வேதப்பகுதி: யாக்கோபு 2:22

தேவையான விளக்கம்.

யாக்கோபு தேவையான விளக்கத்தை பின்வரும் பகுதியில் கொடுக்கின்றார்.

“விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சிசெய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே. அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று; அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான். ஆதலால், மனுஷன் விசுவாசத்திலேமாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே. “ யாக்கோபு 2: 22-24

1. ” விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சிசெய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே.”

அ) இதுதான் யாக்கோபின் வலியுறுத்தலாக இருக்கின்றது.

ஆ) உண்மையான விசுவாசம் எப்பொழுதும் கிரியைகளோடு சேர்ந்து இருக்கும்.

இ) ஆபிரகாமின் விசுவாசம் கர்த்தர்மீது விசுவாசம் வைத்திருப்பதன் பிரகடனம் மட்டும் அல்ல.

ஈ) அவனது விசுவாசம் அவனுடைய கிரியைகளோடு சேர்ந்து செயல்பட்டது.

2. “கிரியைகளினாலே விசுவாசம் பரிபூரணப்படுகிறது”

அ) விசுவாசம் வெறுமையில் இருப்பது இல்லை.

ஆ) உண்மையான விசுவாசம் செயல்களில் வெளிப்படும்.

இ) கிரியைகள் பின்வருமாறு புரிந்து கொள்ளப்படலாம்:

a) கிரியைகள் விசுவாசத்திற்கு உதவுகிறது.

b) விசுவாசம் கிரியைகளால் முழுமையாக்கபடுகிறது.

3. “வேதவாக்கியம் நிறைவேறிற்று”

அ) முதலில் ஆபிரகாம் கர்த்தர் மீது நம்பிக்கை வைத்திருந்தார்.

ஆ) பலிபீடத்தின்மீது ஈசாக்கை பலியாக படைத்த செயல் அவனுடைய விசுவாசத்தின் விளைவாக வந்ததே .

4. “அவன் தேவனுடைய நண்பன் என்று அழைக்கப்பட்டான்”

அ) தேவன் மீது இருந்த உண்மையான விசுவாசம் ஆபிரகாமுக்கு தேவனையே ஒரு நண்பனாக அடைய வைத்தது.

ஆ) இந்த விசுவாசமே கிரியைகளை விளைவித்தது.

5. ஆதலால், மனுஷன் விசுவாசத்திலேமாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே

அ) யாக்கோபு தனக்குதானே முரண்பட்டு பேசவில்லை.

ஆ) அவர் முன்னரே கூறியதையே இங்கு வலியுறுத்திக் காட்டுகிறார்.

இ) விசுவாசமும் கிரியைகளும் ஒன்றுக்கொன்று உதவுகிறது. விசுவாசம் கிரியைகளை விளைவிக்கும். கிரியைகள் விசுவாசத்தை பூரணப்படுத்தும்.

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *