அனுதின ஆவிக்குரிய ஆகாரம் 25.09.2017.

யாக்கோபு தின தியானம்

” நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் கிரியைகளினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்?”

வேதப்பகுதி: யாக்கோபு 2:21

ஆபிரகாமின் உதாரணம்

எல்லா யூதர்களாலும் ஆபிரகாம் உயர்வாக மதிக்கப்படுகிறார் என்று யாக்கோபு அறிந்திருந்தார். அவர் இஸ்ரேல் நாட்டின் தந்தையாக கருதப்பட்டார். எனவே யாக்கோபு ஆபிரகாமை மேற்கோள் காட்டினார்.

“நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் செலுத்தினபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்?
யாக்கோபு 2:21

1. நீதிமானாக்கபடுதலுக்கான சத்தியம்

அ) விசுவாசத்தின் விளைவாகத்தான் ஒருவர் தேவனால் நீதிமானாக்கபடுகிறார் என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார். (ரோமர் 5: 1).

ஆ) “அவனுடைய விசுவாசமே ஆபிரகாமுக்கு நீதியாக எண்ணப்பட்டது” என்று மேலும் கூறிகிறார். (ரோமர் 4: 9).

2. யாக்கோபின் போதனை

பவுல் கற்பித்த போதனைகளுக்கு சற்று முரண்படுவதாகவே தெரிகிறது.

யாக்கோபு என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்துகொள்ளுதல்

உண்மையான விசுவாசம் கிரியைகளை விளைவிப்பதாக யாக்கோபு வாதிடுகிறார்! மேலே உள்ள வசனத்தை விசுவாசத்தைப் பற்றி அவர் என்ன சொன்னார் என்பதைப் நிதானித்து புரிந்துகொள்ள வேண்டும்.

1. நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் கிரியைகளினால் நீதிமானாக்கப்படவில்லையா?

அ) மிக சிறப்பாக அறியவேண்டியது என்னவெனில் யாக்கோபு பேசும் விசுவாசம் என்பது நிச்சயம் கிரியையை வெளிப்படுத்தும்.

ஆ) கிரியையினால் நீதிமானக்கப்படுதலை அவர் எப்படி கொண்டுவருகிறார் என்பதை நாம் அவருடைய கருத்தை உள்ளார்ந்து நோக்கினால் புரிந்துகொள்ளலாம்:

a) ஆபிரகாம் அவனுடைய விசுவாசத்தால் நீதிமானக்கப்பட்டான்.

“அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார் “
ஆதியாகமம் 15: 6

b) ஆனால் அவனுடைய விசுவாசம் உண்மையானதாக இருந்தது, ஏனென்றால் அது கிரியைகளில் வெளிப்பட்டது.

இ)ஆகவே இப்படி சொல்லுவதே சரியாக இருக்கும்,

” நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் விசுவாசத்தின் கிரியையினால் அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்”.

2. ” தன் குமாரனாகிய ஈசாக்கை பலிபீடத்தின்மேல் ஒப்புக்கொடுத்தபோது”

அ) ஆபிரகாம் கர்த்தரில் நம்பிக்கை வைத்திருந்தான்.

ஆ) எனவே தேவனுக்கு முன்பாக “நீதிமானாக எண்ணப்பட்டான்.

a) நீதி அவனுடைய கணக்கில் கொடுக்கப்பட்டது.

b) அவனுடைய விசுவாசத்தின் காரணமாகவே தேவன் அவனை நீதிமானாக அறிவித்தார்.

இ) அவனுக்கு பிள்ளை இல்லாதபோதே அவன் கர்த்தரிடத்தில் விசுவாசம் வைத்திருந்தான்.

ஈ) பல வருடங்கள் கழித்துதான் கர்த்தர் அவனுக்கு ஈசாக்கு என்று பெயருடைய ஒரு குமாரனை கொடுத்தார்.

உ) ஆபிரகாம் தேவனால் சோதிக்கப்பட்டபோது அவனுடைய விசுவாசம் உண்மையாகவும் வலுவாகவும் இருந்தது, அதினால்தான் ஈசாக்கை பலியாக செலுத்த முடிந்தது.

ஊ) இதுவே செயல்படும் விசுவாசம்! இதுவே கிரியை மூலம் வெளிப்படும் விசுவாசம்!

mm

Written by 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *